பிரான்சின் திணைக்களங்கள்
Appearance

திணைக்களம் (départements அல்லது மாவட்டம்) பிரான்சின் நிர்வாகப் பிரிவுகளாகும். இது பிரான்சின் முன்னாள் குடியேற்றப்பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலக் குடியேற்றங்களில் மாவட்டம் அல்லது கவுன்ட்டிகளுக்கு இது நிகரானது. திணைக்களங்கள் உள்ளாட்சி அமைப்பாகும்.
பிரான்சில் 101 திணைக்களங்கள் உள்ளன; இவை 22 பெருநகரப் பகுதிகளாகவும் ஐந்து கடற்கடந்த மண்டலங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. திணைக்களங்களின் தலைநகரங்கள் பிரிபெக்ச்சூர் எனப்படுகின்றன.