பி. கே. நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. கே. நாயர்
பிறப்புபரமேசு கிருட்டிணன் நாயர்
(1933-04-06)ஏப்ரல் 6, 1933
திருவனந்தபுரம், கேரளம்
இறப்பு4 மார்ச்சு 2016(2016-03-04) (அகவை 82)
புனே, மகாராட்டிரம்
பணிதிரைப்பட ஆர்வலர், ஆலோசகர்

பி. கே. நாயர் (Paramesh Krishnan Nair, 6 ஏப்பிரல் 1933 - 4 மார்ச்சு 2016) என்பவர் ஆயிரக்கணக்கான திரைப்படங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்தியவர். இவர் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் திரைப்பட விழா ஆலோசகராகவும் கருதப்படுகிறார்.[1]

இளமைக் காலம்[தொகு]

திருவனந்தபுரத்தில் பிறந்த நாயர் கேரளப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் கற்றார். அனந்தசயனம், பக்த பிரகலாதா போன்ற புராணத் திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டு இளம் அகவை முதல் திரைப்பட ஆர்வம் கொண்டார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் திரைப்படம் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மும்பைக்குச் சென்றார்.

பணிகள்[தொகு]

மெகபூப் படப்பிடிப்பு நிலையத்தில் சேர்ந்தார். ரிசிகேசு முகர்சியின் படங்களில் அவரும் இணைந்து பணியாற்றினார். புனேயில் அரசுத் திரைப்படக் கல்லூரி தொடங்கிய நிலையில் பி.கே.நாயர் அங்கு சேர்ந்தார். 1964 இல் இந்திய திரைப்பட ஆவணக் காப்பகம் தொடங்கப்பட்டது. இந்தக் காப்பகத்தில் நாயர் உதவி இயக்குநராக 1965 இல் பணியில் சேர்ந்தார். 1991 இல் ஒய்வு பெற்றார். 12000 திரைப்படங்களைத் தேடிக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தினார். அவற்றில் 8000 இந்திய மொழிப் படங்களும் மீதம் அயல் நாட்டுப் படங்களும் அடக்கம். திரைப்படச் சுருள்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்து அவற்றை ஆவணப்படுத்தினார்.

1913 இல் தாதாசாகெப் பால்கே உருவாக்கிய ராஜா ஹரிச்சந்திரா என்னும் திரைப்படச் சுருள்களைப் பெரு முயற்சி செய்து கண்டுபிடித்து மறு பிரதி எடுத்து ஆவணப் படுத்தினார். அதுபோல கலியாமர்தான், ஜமாய் பாபு ஆகிய படங்களும் டிவிடி யாக மாற்றப்பட்டன.[2]

விருதுகள்[தொகு]

சத்தியஜித் ரே நினைவு விருது 2008 இல் நாயருக்கு வழங்கப்பட்டது. இவரது வாழ்க்கைப் பற்றிய ஓர் ஆவணப்படம் செல்லுலாய்ட் மனிதர் என்ற பெயரில் சிவேந்திர சிங் துங்கர்பூர் என்பவரால் உருவாக்கப்பட்டு இத்தாலியிலும் இந்தியாவிலும் திரையிடப்பட்டது. இந்தப் படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தன.

மேற்கோள்[தொகு]

  1. "PK Nair, the reel historian". India Today. 3 May 2013.
  2. Nair, C. Gouridasan (4 March 2016). "Legendary film archivist P.K. Nair passes away" – via www.thehindu.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._நாயர்&oldid=2493674" இலிருந்து மீள்விக்கப்பட்டது