அமெரிக்க விடுதலைப் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்க விடுதலைப் படை (Continental Army) அமெரிக்க ஐக்கிய நாடாக இணைந்த குடியேற்ற மாநிலங்கள் அமெரிக்கப் புரட்சிப் போரின்போது இரண்டாம் விடுதலைப் பேராயம் உருவாக்கிய படையாகும். சூன் 14, 1775இல் பேராயத் தீர்மானம் மூலமாக நிறுவப்பட்ட இந்தப் படை பெரிய பிரித்தானியாவிற்கு எதிராக புரட்சி செய்த பதின்மூன்று குடியேற்றங்களின் இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டது. அமெரிக்க விடுதலைப் படைக்கு துணையாக அந்தந்த மாநில படைகளும் துருப்புகளும் செயல்பட்டனர். படைத்தளபதி சியார்ச் வாசிங்டன் இந்தப் படையின் தலைமை தளபதியாக போர்க்காலம் முழுமைக்கும் தலைமையேற்றார்.

1783இல் போர் முடிந்த பிறகு ஏற்பட்ட பாரிசு உடன்படிக்கையின்படி விடுதலைப் படை பெரும்பாலும் கலைக்கப்பட்டது. 1792இல் தளபதி அந்தோனி வேய்ன் தலைமையில் அமைந்த ஐக்கிய அமெரிக்க படைக்கு இதன் முதலாம், இரண்டாம் படையணிகள் கருவமாக இருந்தன. 1796இல் இதுவே ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் அடித்தளமாக அமைந்தது.

துவக்கங்கள்[தொகு]

சூன் 15, 1775இல் தளபதி சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படைக்கு தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அமெரிக்க விடுதலைப் படையில் 13 குடியேற்றங்களிலிருந்தும், 1776க்குப் பிறகு 13 மாநிலங்களிலிருந்தும், துருப்புக்கள் இருந்தனர். ஏப்ரல் 19, 1775இல் லெக்சிங்டனிலும் கான்கார்டிலும் போர் துவங்கிய குடியேற்றப் புரட்சியாளர்களிடம் படை எதுவும் இல்லை. முன்னதாக, ஒவ்வொரு குடியேற்றமும் பகுதிநேர குடிகளடங்கிய குடிப்படையினரை சார்ந்திருந்தது. 1754–63 காலத்தில் நடந்த பிரான்சிய, செவ்விந்திய போர்களுக்கு தற்காலிகமாக எழுப்பப்பட்ட மாநில படையணிகளை அமர்த்தியது. பெரிய பிரித்தானியாவுடனான நெருக்கடி அதிகரித்து போர் மூண்டபோது ஒவ்வொரு குடியேற்றமும் வரவிருக்கும் சண்டைகளுக்காக தங்கள் குடிப்படைகளை செம்மைப்படுத்தத் தொடங்கின. 1774க்குப் பிறகு குடிப்படைகளுக்கான இராணுவப் பயிற்சிகள் கூடுதலாயின. ரிச்சர்டு என்றி லீ போன்ற குடியேற்றவாதிகள் தேசிய குடிப்படையை எழுப்ப விரும்பினர்; ஆனால் முதலாம் விடுதலைப் பேராயம் இதனை மறுத்து விட்டது. [1]

ஏப்ரல் 23, 1775இல் மாசச்சூசெட்ஸ் மாகாணப் பேராயம் 26 படையணிகளைக் கொண்ட குடியேற்றப் படையை உருவாக்க அனுமதியளித்தது. நியூ ஹாம்சயர், றோட் தீவு, கனெடிகட்டும் இவ்வாறான படையை, ஆனால் குறைந்தளவில், உருவாக்கின. சூன் 14, 1775இல் இரண்டாம் விடுதலைப் பேராயம் பொதுவான பாதுகாப்பிற்காக கண்டம் தழுவிய படைகளை (அமெரிக்க விடுதலைப் படை) எழுப்ப முடிவு செய்தது; ஏற்கெனவே பாசுட்டனிலும் (22,000 துருப்புக்கள்) நியூயோர்க்கிலும் (5000) இருந்த படையினர் இதன் அடித்தளமாக அமைந்தனர்.[2] தவிரவும் முதல் பத்து படையணிகளை எழுப்பியது; மேரிலாந்து, டெலவேர், விர்ஜீனியா, பென்சில்வேனியாவிலிருந்து துப்பாக்கியாளர்களை ஓராண்டு பணிபுரிய ஒபந்ந்த அடிப்படையில் அமர்த்தியது.[2] இவர்களே 1776இல் முதலாம் படையணியாக உருவாயினர். சூன் 15, 1775இல் பேராயம் ஒருமித்து சியார்ச் வாசிங்டனை தலைமைத் தளபதியாக நியமித்தது. இவர் போர்க்காலம் முழுமைக்கும் எவ்வித ஊதியமுமின்றி, செய்த செலவினங்களுக்கு மட்டுமே ஈடு பெற்று பணியாற்றினார்.[3][4][5][6]

இயக்கங்கள்[தொகு]

கலைப்பு[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

மேலும் அறிய[தொகு]

உசாத்துணைகள்
முதல்நிலைத் தரவுகள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்க_விடுதலைப்_படை&oldid=3532112" இலிருந்து மீள்விக்கப்பட்டது