உள்ளடக்கத்துக்குச் செல்

ருக்மிணி லட்சுமிபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருக்மிணி லட்சுமிபதி
பிறப்பு(1892-12-06)6 திசம்பர் 1892
இறப்பு6 ஆகத்து 1951(1951-08-06) (அகவை 58)
பணிஆர்வலர், அரசியல்வாதி, வீணை இசைக்கலைஞர்
வாழ்க்கைத்
துணை
அசண்ட லட்சுமிபதி

ருக்மிணி லட்சுமிபதி (Rukmini Lakshmipathi, 6 திசம்பர் 1892 – 6 ஆகத்து 1951) ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனையும், இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், வீணை இசைக்கலைஞரும் ஆவார். இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் மற்றும் சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சருமாவார்.[1] சட்டப் பேரவையின் துணை சபாநாயகராகவும் பணியாற்றினார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]
ருக்மிணி லட்சுமிபதி

ருக்மிணி சென்னையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா ராஜா டி. ராம்ராவ் ஒரு நிலக்கிழார். சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் இவர் பி.ஏ பட்டம் பெற்றார். இவரது கணவர் டாக்டர். அசண்ட லட்சுமிபதி[3]. ருக்மிணி 1923ல் காங்கிரசில் சேர்ந்தார். 1926ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை கூட்டணி பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்[4]. 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் இவர் தான்[5]. 1934ல் சென்னை மாகாண சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்[6] . சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937லும் வெற்றி பெற்று ஜூலை 15, 1937ல் சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 1, 1946 முதல் மார்ச் 23, 1947 வரை சென்னை மாகாணத்தில் (முதலமைச்சர் த. பிரகாசத்தின் அமைச்சரவையில்) பொதுச்சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். சென்னை மாகாணத்தில் அமைச்சர் பதவி வகித்த பெண் இவர் மட்டும் தான்.[7][8][9][10]. சென்னை எழும்பூரிலுள்ள மார்ஷல் சாலைக்கு இப்போது ”ருக்மிணி லட்சுமிபதி சாலை” என்று இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[11] 1997ல் இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.[11]

ருக்மிணி லட்சுமிபதி வீணை தனம்மாளிடம் வீணை இசையைக் கற்றவர். அனைத்திந்திய வானொலியில் பல வீணைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.[12]

ருக்மிணி லட்சுமிபதியைக் கௌரவிக்கும் விதமாக சென்னை, எழும்பூரில் உள்ள ஒரு சாலைக்கு ருக்மிணி லட்சுமிபதி சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ramakrishnan, T (13 March 2010). "Historic moments, historic personalities". தி இந்து. Archived from the original on 17 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 8 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Women pioneers in the legislature since the days of Madras Presidency". தி இந்து. 29 செப்டம்பர் 2023 இம் மூலத்தில் இருந்து 29 செப்டம்பர் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230929120043/https://www.thehindu.com/news/national/tamil-nadu/women-pioneers-in-the-legislature-since-the-days-of-madras-presidency/article67358806.ece#selection-1125.203-1125.273. 
  3. Who's who in India, Burma & Ceylon (1941). Who's Who Publishers (India) Ltd., 1941. p. 175 http://books.google.com/books?lr=&client=firefox-a&cd=74&id=MFyE_jYD43EC&dq=rukmani+lakshmipathi&q=raja+ramrao#search_anchor. {{cite book}}: Missing or empty |title= (help)
  4. Seminar on Uplift of Women in South India in 20th Century and Suggestions for 2000 A.D. Conferences, seminars, and workshops series. Vol. 5. Mother Teresa Women's University, Dept. of Historical Studies. 1987. p. 83.
  5. Roy, Kalpana (1999). Encyclopaedia of violence against women and dowry death in India,. Vol. 1. Anmol Publications. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126103430.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Bhatt,, B. D. (1992). Women's education and social development. Modern education series. Kanishka Pub. House. p. 343. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185475547. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)CS1 maint: extra punctuation (link)
  7. Justice Party golden jubilee souvenir, 1968. Justice Party. 1968. p. 62. ISBN.
  8. Kaliyaperumal, M (1992). The office of the speaker in Tamilnadu : A study (PDF). Madras University. p. 47. Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-01-14.
  9. "Rukmini Laxmipathi". Archived from the original on 5 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 12 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. Frederick, Prince (4 December 2002). "Discipline, need of the hour". தி இந்து. Archived from the original on 9 நவம்பர் 2003. பார்க்கப்பட்ட நாள் 12 March 2010.
  11. 11.0 11.1 "In Chennai Today". The Hindu. 10 July 2005. Archived from the original on 9 நவம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 12 March 2010.
  12. "A Library Romance led to Social Activism" (PDF). Madras Musings. 16 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  13. "சென்னை சாலைகள் பெண்கள் காட்டும் வழி". இந்து தமிழ் திசை. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருக்மிணி_லட்சுமிபதி&oldid=3944087" இலிருந்து மீள்விக்கப்பட்டது