உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கோல்-ரெயின் லெப்பாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கோல்-ரெயின் லெப்பாட்
Nicole-Reine Lepaute
பிறப்பு(1723-01-05)5 சனவரி 1723
லக்சம்பர்க் அரண்மனை, பாரிசு
இறப்பு6 திசம்பர் 1788(1788-12-06) (அகவை 65)
பிரான்சு
வாழிடம்பிரான்சு
குடியுரிமைபிரெஞ்சு
துறைவானியல்

நிக்கோல்-ரெயின் லெப்பாட் (Nicole-Reine Lepaute, 5 சனவரி 1723 – 6 டிசம்பர் 1788) என்பவர் பிரான்சு வானியலாளரும், கணிதவியலாளரும் ஆவார். இவர் பாரிசு வான்காணகத்தில் 1732 முதல் 1788 வரை பணியில் இருந்தார். ஹேலியின் வால்வெள்ளி 1759 ஏப்ரல் 13 இல் திரும்பத் தோன்றிய போது வியாழன் கோளும் காரிக் கோளும் புவியீர்ப்பால் அதை எவ்வளவு தொலைவு இழுக்கின்றன என்ற ஆய்வில் ஏ. சி. கிளாரட்டுக்குத் துணை புரிய லெப்பாட் அங்கு சேர்ந்தார்.[1] 1764 இல் நிகழ்ந்த சூரிய ஒளிமறைப்பை இவர் ஐரோப்பா முழுமைக்கும் பதிவு செய்தார். இப்பதிவுப்படம் பிரெஞ்சு அரசால் வெளியிடப்பட்டது.

பிரெஞ்சு அறிவியல் புலங்களுக்கான கல்விக்கழகம் வெளியிட்ட’வானோடிகளுக்கும் கடலோடிகளுக்கும் பயன்படும் வான்குறிப்பு அட்டவணையை உருவாக்க 1759முதல்1774வரை இலாலண்டேவுடன் இணைந்து பணிபுரிந்தார். இவர் 1774முதல் 1783வரை ‘வான்பொருள் இருப்பு அட்டவணை’யின் (Astronomical Ephemeris) ஏழாம், எட்டாம் தொகுதிகளில் விண்மீன்களுடன் சூரியன், நிலா, கோள்களின் இருப்புகளையும் காட்டும் நுட்பத்தை உருவாக்கி 1784முதல்1792 வரையுள்ள பத்தாண்டுக் கால கட்டத்துக்கு அவற்றையும் அதில் இணைத்து வெளியிட்டார். இவரது நினைவாக சிறுகோள் ஒன்றுக்கு "7720 லெப்பாட்" எனவும், நிலவுக் குழி ஒன்றுக்கு "லெப்பாட்" எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Skinner, David (Spring 2006). "The Age of Female Computers". The New Atlantis (12): 96–103. http://www.thenewatlantis.com/publications/the-age-of-female-computers. 

புற இணைப்புகள்[தொகு]

  • O'Connor, John J.; Robertson, Edmund F., "Nicole-Reine Etable de Labrière Lepaute", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.