மாக்ஸ் முல்லர்
| மாக்ஸ் முல்லர் | |
|---|---|
| பிறப்பு | Friedrich Max Müller 6 திசம்பர் 1823 Dessau |
| இறப்பு | 28 அக்டோபர் 1900 (அகவை 76) ஆக்சுபோர்டு |
| படிப்பு | Magister Artium, Dr. phil. |
| படித்த இடங்கள் |
|
| பணி | மொழியியலாளர், நூலகர், பல்கலைக்கழகப் பேராசிரியர், எழுத்தாளர், philologist, religious studies scholar, orientalist, indo-europeanist, இந்தியவியலாளர், ஆசிரியர் |
| வேலை வழங்குபவர் | |
| வாழ்க்கைத் துணை/கள் | Georgina Adelaide Grenfell, Georgina Müller |
| குழந்தைகள் | Beatrice Stanley Muller, Mary Emily Müller, William G. Max Muller |
| விருதுகள் | Pour le Mérite for Sciences and Arts order, Honorary Fellow of the Royal Society Te Apārangi, Doctor honoris causa of the University of Dublin, honorary doctor of the University of Edinburgh, honorary member |
| கையெழுத்து | |

மாக்ஸ் முல்லர் (டிசம்பர் 6, 1823 - அக்டோபர் 28, 1900), என்று பரவலாக அறியப்பட்ட பிரெட்ரிக் மாக்ஸ் முல்லர் (Friedrich Max Müller) ஒரு ஜெர்மானிய மொழியியலாளரும், கீழைத்தேச ஆய்வாளரும் ஆவார். இந்தியவியலைத் தொடக்கி வைத்தவர்களுள் ஒருவராகக் கருதப்படும் இவர், சமய ஒப்பாய்வுத் துறையை உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார். இத் துறையில் இவர், ஆய்வு நூல்களையும், சாதாரண பொதுமக்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளார். இவருடைய மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட, கிழக்கத்தியப் புனித நூல்கள் (Sacred Books of the East)[1] என்னும் பெயர்கொண்ட 50 தொகுதிகள் அடங்கிய பெரிய நூல் விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சிகளுக்குச் சான்றான ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் திகழ்கிறது.
விவேகானந்தருடன்
[தொகு]சுவாமி விவேகானந்தர் இவரைப் பற்றி, "தாம் எழுதிய உரையைப் புதுப்பிக்க சாயனர்தான் இப்போது மாக்ஸ்முல்லராகப் பிறந்திருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன். நீண்ட காலமாகவே எனக்கு இந்தக் கருத்து இருந்தது. மாக்ஸ்முல்லரைப் பார்த்த பிறகு அது உறுதியாகிவிட்டது." என்று கூறியுள்ளார்
ரிக் வேதம்
[தொகு]ரிக்வேதத்தை வெளியிட அவருக்குக் கிழக்கிந்திய கம்பெனி ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்தது. அதன் கையெழுத்து பிரதியை தயாரிக்கவே அவருக்கு இருபத்து ஐந்து வருடங்கள் ஆயிற்று. அச்சிடுவதற்கு மேலும் இருபது வருடங்கள் பிடித்தன.
ராமகிருஷ்ணர்: வாழ்வும், வாக்கும்
[தொகு]இவர் சுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவதார புருஷர் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டவர். அவரைக் குறித்த கட்டுரைகளும், புத்தகமும் எழுதியவர். இவர் எழுதிய "ராமகிருஷ்ணர்: வாழ்வும், வாக்கும்" (Râmakrishna: His Life and Sayings (1898)) என்ற புத்தகம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி வெளிநாட்டினரால் எழுதப்பட்ட புத்தகங்களுள் முன்னோடியான ஒன்று.
திலகரைப் பற்றிய கருத்து
[தொகு]இவர் இந்தியாவின் பால கங்காதர திலகர் சிறையில் அடைக்கப்பட்ட போது, அப்போதைய விக்டோரியா மகாராணிக்கு திலகர் விடுதலை செய்யப்பட வேண்டும், சிறையில் நல்லவிதமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதினார். வில்லியம் வில்சன் ஹன்டர் மற்றும் பலரும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Sacred Books of the East". eBooks@Adelaide, University of Adelaide. 2014. Archived from the original on 2015-09-05. Retrieved 20 சூலை 2015.
உதவி நூல்
[தொகு]- எழுந்திரு! விழித்திரு! ; சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு : 6; பக்கம் 57,58, ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை
- சுவாமி விவேகானந்தர் எழுதியவற்றின் தொகுப்பு