உள்ளடக்கத்துக்குச் செல்

மொழியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மொழியியலாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மொழியியல்
கோட்பாட்டு மொழியியல்
ஒலியியல்
ஒலியனியல்
உருபனியல்
சொற்றொடரியல்
சொற்பொருளியல்
மொழிநடை
விதிமுறை
சூழ்பொருளியல்
பயன்பாட்டு மொழியியல்
சமூக மொழியியல்
அறிதிற மொழியியல்
வரலாற்று மொழியியல்
சொற்பிறப்பியல்
ஒப்பீட்டு மொழியியல்
தமிழ் மொழியியல்

மொழியியல் (Linguistics) என்பது மொழியை [1] அறிவியல் முறைப்படி [2] ஆராய்வதற்குரிய ஒரு துறையாகும். மொழியின் வடிவம், பொருள், சூழல் போன்றவற்றையும் மொழியியல் ஆய்வு செய்கிறது [3]. பொதுவான சகாப்தத்திற்கு முன்திய 4 ஆம் நூற்றாண்டில் இந்திய இலக்கண அறிஞரான பானிணி சமசுகிருத மொழியைப்பற்றி ஒரு முறையான ஆய்வு விளக்கத்தை எழுதியுள்ளார் [4][5][6].

மொழியியலாளர்கள் சொற்களின் ஒலி மற்றும் பொருளுக்கு இடையிலான ஓர் ஒற்றுமையைக் கவனிப்பதன் மூலம் பாரம்பரியமாக மனித மொழியை பகுப்பாய்வு செய்கின்றனர் [7]. ஒலிப்பியல் என்பது பேச்சு மற்றும் உரையாடல் ஒலிகளைப் பற்றிய ஆய்வு ஆகும், மேலும் இது அவர்களின் ஒலி தொடர்பான மற்றும் ஒலிகளை தெளிவாக உச்சரிப்பதற்குரிய உச்சரிப்பொலியியல் பண்புகளுக்குள்ளும் நுழைகிறது. மறுபுறம், மொழியின் அர்த்தத்தை ஆய்வு செய்து உலகின் பிற கூறுகள், பண்புகள் மற்றும் உலகின் பிற அம்சங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான உறவுகளை எவ்வாறு புரிந்துகொள்வது, செயல்படுத்துவது மற்றும் பொருளை வழங்குவது, அத்துடன் எவ்வாறு நிர்வகிப்பது, தோன்றும் கருத்து மயக்கத்தை எவ்வாறு தீர்ப்பது ஆகியவற்றைப் பற்றியும் மொழியியல் பேசுகிறது [8]. அதேவேளையில் சொற்பொருள்களைப்பற்றிய ஆய்வு, சூழல் எவ்வாறு மொழிக்கான பொருளை உருவாக்குகிறது என்ற உண்மை நிலையையும் ஆராய்வதை மொழியியல் நடைமுறையாகக் கொண்டுள்ளது [9].

இலக்கணம் என்பது ஒரு மொழியில் சொற்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை நிர்வகிக்கும் விதிமுறைகள் தொடர்பான நடைமுறையாகும். இவ்விதிமுறைகள் ஒலிகளுக்கும்[10] அவை தரும் பொருளுக்கும் பொருந்தும். மேலும், ஒலிக்கும் ஒலியமைப்புகளின் அமைப்பு சார்ந்த குரலியல், சொற்களின் அமைப்பு மற்றும் உருவாக்கம் சார்ந்த உருபனியல், சொற்றொடர்கள் உருவாக்கம் மற்றும் அமைப்பு சார்ந்த தொடரியல் உள்ளிட்டவற்றின் உட்கூறுகள் சார்ந்த துணைவிதிகளையும் இலக்கணம் வரையறை செய்கிறது[11]. இலக்கணத்தின் கொள்கைகளில் நவீன இலக்கணக் கோட்பாடுகள் கவனம் செலுத்துகின்றன. இவை பெரும்பாலும் நோம் சோம்சுகியின் சித்தாந்தக் கல்வியின் பொது இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. [

மொழியியல் ஆய்வு, கீழே தரப்பட்டுள்ள மூன்று விதமான அடிப்படைகளில் நடைபெறுவதாகக் காணப்படுகிறது. பழங்கால இலக்காண பதிப்பான தொல்காப்பியம், தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் உலக மொழிகளில் ஒரு மொழியியல் அய்வு என்பதில் முதான்மயும், தொன்மையும் பெற்றது.

  • விளக்கமுறையும் வரலாற்றுமுறையும் (Synchronic and diachronic) -- விளக்கமுறை, என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மொழியின் நிலையைக் கருத்திலெடுத்து ஆய்வு செய்வதைக் குறிக்கும். வரலாற்றுமுறை என்பது ஒரு மொழியின் அல்லது ஒரு மொழிக் குழுவின் வரலாற்றையும், அவற்றில் எவ்வாறான அமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் ஆராய்வதாகும்.
  • கோட்பாட்டு மற்றும் பயன்பாட்டு முறை -- கோட்பாட்டு மொழியியல், தனிப்பட்ட மொழிகளை விவரிப்பதற்கான சட்டகங்களை (frameworks) உருவாக்குவதுடன், அனைத்து மொழிகள் தொடர்பான கோட்பாடுகள் பற்றியும் கவனத்திற் கொண்டுள்ளது.
  • சூழ்நிலைசார் மற்றும் சுதந்திரமான -- இப்பகுப்பு தொடர்பில் சொற்கள் சரியாக நிலைநிறுத்தப்படாததால், வசதி கருதி இப் பெயர்கள் இங்கே பயன்படுத்தப் படுகின்றன. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பெரு மொழியியல் (macrolinguistics), நுண் மொழியியல் (microlinguistics), என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறது. சூழல்சார் மொழியியல், ஒரு மொழி எவ்வாறு இந்த உலகத்துடன் பொருத்தப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை, அதன் சமூகச் செயற்பாடு, எவ்வாறு பெறப்பட்டது, எவ்வாறு உருவானது மற்றும் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பவற்றைக் கருத்திலெடுத்து ஆராய்கின்றது.சுதந்திர மொழியியல், மொழிகளின் புறநிலை அம்சங்களைக் கருத்தில்கொள்ளாது, அம் மொழிகளைத் தனியாக ஆராய முற்படுகிறது.

இவ்வாறான பகுப்புகள் இருந்தாலும், பொதுவாக எவ்வித சிறப்பு அடைமொழிகளுமில்லாது, வெறுமனே "மொழியியலாளர்கள்" என்று அழைக்கப்படுபவர்கள், மொழியியலின் மையக்கருவாகக் கருதப்படும் சுதந்திர, கோட்பாட்டு விளக்கமுறை (synchronic) மொழியியல் பற்றியே முக்கியமாக ஆர்வமுடையவர்களாக உள்ளார்கள். இதுவே பொதுவாகக் "கோட்பாட்டு மொழியியல்" என்று அழைக்கப்படுகிறது.

கோட்பாட்டு மொழியியற் பகுதிகள்

[தொகு]

கோட்பாட்டு மொழியியல் பொதுவாக, ஓரளவுக்குத் தனித்தனியாக ஆராயத்தக்க வகையில் பல்வேறு பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. கீழ்வரும் பிரிவுகள் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன:

  • ஒலிப்பியல் (phonetics), ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு ஒலிகள் பற்றிய துறை;
  • ஒலியியல் (phonology), ஒரு மொழியின் அடிப்படை ஒலிகளின் வடிவுரு பற்றி ஆராயும் துறை;
  • உருபனியல், சொற்களின் உள் அமைப்புப் பற்றி ஆராயும் துறை;
  • சொற்றொடரியல் (syntax), எவ்வாறு சொற்கள் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட வசனங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் துறை;
  • சொற்பொருளியல் (semantics), சொற்களின் நேரடியான (literal) பொருளை ஆராய்தலுக்கும்,(சொல் குறிக்கும் பொருள் (lexical semantics)), அவை சேர்ந்து உருவாக்கும் வசனங்களின் நேரடியான பொருள்களையும் ஆராயும் துறை;
  • மொழிநடை (stylistics), மொழியின் பாணிகளை ஆராயும் துறை;
  • சூழ்பொருளியல் (pragmatics), தொடர்புச் செயற்பாடுகளில் எவ்வாறு utterances பயன்படுத்தப்படுகின்றன (literally, figuratively, அல்லது வேறுவிதமாக) என்பது பற்றிய ஆய்வு;
  • தொடரியல் (syntax) ஒலி, உருபன்,

இந்த ஒவ்வொரு பகுதியினதும் தனிப்பட்ட முக்கியத்துவம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, எனினும், கிட்டத்தட்ட எல்லா மொழியியலாளருமே இந்தப் பிரிவுகள் குறிப்பிடத்தக்க அளவு பொதுப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன என்பதை ஒத்துக்கொள்வர். இருந்தாலும் ஒவ்வொரு துணைப்பிரிவும், குறிப்பிடத்தக்க அறிவுபூர்வ ஆய்வுகளைச் செய்யக்கூடிய அளவுக்குத் தனியான அடிப்படையான எண்ணக்கருக்களைக் கொண்டுள்ளன.

வரலாற்று மொழியியல் (Diachronic linguistics)

[தொகு]

கோட்பாட்டு மொழியியலின் மையக்கருவானது, மொழியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (அநேகமாக நிகழ்காலம்) ஆராய்வதோடு சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை, வரலாற்று மொழியியல், எப்படி மொழி காலப்போக்கில், சிலவேளைகளில் நூற்றாண்டுகளில், மாற்றமடைகின்றது என்பதை ஆராய்கின்றது. வரலாற்று மொழியியல் வளமான வரலாற்றையும் (மொழியியல் துறை வரலாற்று மொழியியலிலிருந்தே உருவானது), மொழி மாற்றங்களை ஆராய்வதற்கான பலமான கோட்பாட்டு அடிப்படையையும் கொண்டுள்ளது.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில், வரலாறல்லாத நோக்கின் கையே ஓங்கியுள்ளதாகத் தெரிகிறது. வரலாறல்லாத நோக்கு சார்ந்த திருப்பம், பேர்டினண்ட் சோசருடன் தொடங்கி நோம் சோம்சுக்கி காலத்தில் முன்னணிக்கு வந்தது.

வெளிப்படையாக வரலாற்று நோக்கு வரலாறுசார்-ஒப்பீட்டு மொழியியல் மற்றும் சொற்பிறப்பியல் (etymology) என்பவற்றை உட்படுத்தியுள்ளது.

பயன்பாட்டு மொழியியல்

[தொகு]

கோட்பாட்டு மொழியியல், ஒவ்வொரு மொழிக்கு உள்ளேயும், ஒரு குழுவாக எல்லா மொழிகளுக்கு இடையேயும் உள்ள பொதுவான தன்மைகளைக் கண்டுபிடித்து விளக்கமுயலுகின்ற அதேவேளை, பயன்பாட்டு மொழியியல், இந்தக் கண்டுபிடிப்புகளின் பெறுபேறுகளை ஏனைய துறைகளில் பயன்படுத்துகிறது. வழக்கமாகப் பயன்பாட்டு மொழியியல், மொழியியல் ஆய்வை, மொழி கற்பித்தல், மற்றும் ஏனைய துறைகளில் பயன்படுத்துவதைக் குறிப்பிடுகிறது. பேச்சுத் தொகுப்பு (Speech synthesis) மற்றும் பேச்சு அடையாளம்காணல் (Speech recognition), என்பன, கணனிகளில் குரல் இடைமாற்றிகளை ஏற்படுத்துவதற்கு மொழியியல் அறிவைப் பயன்படுத்தும் உதாரணங்களாகும்.

சூழ்நிலை மொழியியல்

[தொகு]

சூழ்நிலை மொழியியலே, மொழியியல் ஏனைய கல்வித்துறைகளுடன் தொடர்பு கொள்ளும் பகுதியாகும். சமூக மொழியியல், மானிடவியல்சார் மொழியியல் (anthropological linguistics), மொழியியல் மானிடவியல் (linguistic anthropology) என்பன சமூகத்தை முழுமையாகக் கருத்திலெடுக்கின்ற சமூக அறிவியலும், மொழியியலும் தொடர்பு கொள்ளுகின்ற இடமாகும்.

திறனாய்வுப் பேச்சுக்கூறுபாடு (critical discourse analysis) இலே தான்பேச்சுக்கலை (rhetoric) உம் தத்துவமும் மொழியியலோடு தொடர்புகொள்ளுகின்றன. உளமொழியியலும் (psycholinguistics) நரம்புமொழியியலும் (neurolinguistics), மருத்துவ அறிவியல்கள் மொழியியலைச் சந்திக்கும் இடமாகும். ஏனைய, மொழியியலின் வேறு துறைத்தொடர்புகளுள்ள பகுதிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும். மொழி கற்றல் (language acquisition), படிமலர்ச்சி மொழியியல், stratificational linguistics, மற்றும் அறிதிற அறிவியல் (cognitive science).

தனிப்பட்ட, மொழிபேசுபவர்கள், மொழிச் சமுதாயங்கள், மற்றும் மொழியியற் பொதுமைகள் (linguistic universals)

[தொகு]

எந்த அளவு பரந்த மொழி பயன் படுத்தும் குழுவினரை ஆராயவேண்டும் என்பதிலும் மொழியியலாளர்கள் வேறுபடுகிறார்கள். சிலர் குறிப்பிட்ட ஒருவருடைய மொழியை அல்லது மொழி அபிவிருத்தியை மிகவும் நுணுக்கமாக ஆராய்வர். சிலர் ஒரு முழு பேச்சுச் சமுதாயத்தினதுக்குத் தொடர்பான மொழிபற்றி ஆய்வு செய்வர். வேறு சிலர் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா மனித மொழிகளுக்கும் பொருந்தக்கூடிய விடயங்கள் பற்றி ஆராய முயல்வர். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட திட்டத்துக்காக நோம் சோம்சுக்கி பிரபலமாக வாதிட்டார், அத்துடன் இது, உளவியல்சார் மொழியியல் (psycholinguistics) மற்றும் அறிதிற அறிவியல் துறைகளைச் சேர்ந்த பலரைக் கவர்ந்தது. மனித மொழியிற் காணப்படும் பொதுமைகள் மனித மனத்தின் பொதுமைகள் பற்றிய முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்தும் எனக் கருதப்பட்டது.

விளக்கமுறையும் (Description) விதிப்புமுறையும் (prescription)

[தொகு]

"மொழியியல்" என்ற பெயரில் தற்போது நடைபெறும் பெரும்பாலான வேலைகள், சுத்தமாக விபரிப்பு சார்ந்தவையாகும். மொழியியலாளர்கள், கருத்துக்களெதையும் கூறாமல் அல்லது மொழியின் எதிர்காலப் போக்குத் திசைகளைக் குறிப்பிட்டுக் காட்டாமல், மொழியின் இயல்பை விளக்கவே முனைகிறார்கள். எனினும் பல தொழில்சார் மற்றும் அமெச்சூர் மொழியியலாளர்கள், எல்லோரும் பின்பற்றவேண்டிய நியமங்களை வைத்து, மொழிக்கான விதிகளையும் குறித்துக் காட்டுகிறார்கள்.

விதிப்புமுறை சார்பாளர்கள் (Prescriptivists), "பிழையான பயன்பாடு" என்று கருதி முத்திரை குத்தும் ஒரு விடயத்தில், விளக்கமுறையாளர்கள் (descriptivists) அப் பயன்பாட்டின் மூலம் எதுவென்று ஆராய முயல்வர்; அல்லது அதை "வினோதப் போக்கு" (idiosyncratic), என விளக்குவர், அல்லது, மிக நவீனமானது அல்லது அங்கீகரிக்க முடியாத வட்டார மொழிகளிலிருந்து பெறப்பட்டது போன்ற காரணங்களுக்காக விதிப்புமுறை சார்பாளர்களால் விரும்பப்படாத சில ஒழுங்குமுறைகளை வெளிப்படுத்துவார்கள்.

பேச்சு எதிர் எழுத்து

[தொகு]

பெரும்பாலான சமகால மொழியியலாளர்கள் பேச்சு மொழியே மிகவும் அடிப்படையானது அதனால், எழுத்து மொழியிலும், பேச்சு மொழி பற்றி ஆராய்வதே முக்கியமானது என்ற கருதுகோளுடன் செயல் படுகிறார்கள். இதற்கான காரணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

  • பேச்சு மனித இனம் முழுவதற்கும் பொதுவானதாகத் தெரிகின்ற அதேவேளை, பல பண்பாடுகளில், எழுத்துத் தொடர்பு முறை காணப்படவில்லை;
  • மக்கள், எழுதுவதிலும், பேசுவதற்கும் கிரகித்துக்கொள்வதற்கும் பேச்சு மொழி எளிதாகப் பழகி விடுகிறார்கள்;
  • பல அறிதிற அறிவியலாளர்களின் கூற்றுப்படி, மூளையில் உள்ளார்ந்த "மொழிப் பிரிவு" ஒன்று உள்ளதாகவும், அதற்கான அறிவு எழுத்தைவிடப் பேச்சைக் கற்பதன் மூலமாகவே கிடைக்கிறது என்றும் தெரிகிறது.

எழுத்து மொழியைப் பயில்வது பெறுமதியானது என்பதில் எல்லா மொழியியலாளர்களும் ஒத்த கருத்தையேகொண்டுள்ளார்கள். மொழித் தொகுப்பு மற்றும் கணிப்புமுறை மொழியியல் (computational linguistics), முறைகளைப் பயன்படுத்தும் மொழியியல் ஆராய்ச்சிகளில், பெருமளவு மொழியியல் தரவுகளைக் கையாள்வதற்கு, எழுத்து மொழி மிகவும் வசதியானதாகும். பெருமளவு பேச்சு மொழித் தரவுகளை உருவாக்குவதும், கண்டுபிடிப்பதும் கடினமாகும்.

மேலும், எழுத்து முறைமை பற்றிய ஆய்வும் மொழியியலின் பாற்பட்டதேயாகும்.

மொழியியல் தொடர்பான ஆராய்ச்சிப் பகுதிகள்

[தொகு]

துறைகளிடை மொழியியல் ஆராய்ச்சி

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Halliday, Michael A.K.; Jonathan Webster (2006). On Language and Linguistics. Continuum International Publishing Group. p. vii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8264-8824-2.
  2. Crystal, David (1990). Linguistics. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780140135312.
  3. Martinet, André (1960). Elements of General Linguistics. Tr. Elisabeth Palmer Rubbert (Studies in General Linguistics, vol. i.). London: Faber. p. 15.
  4. Rens Bod (2014). A New History of the Humanities: The Search for Principles and Patterns from Antiquity to the Present. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0199665214.
  5. Sanskrit Literature The Imperial Gazetteer of India, v. 2 (1909), p. 263.
  6. S.C. Vasu (Tr.) (1996). The Ashtadhyayi of Panini (2 Vols.). Vedic Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120804098.
  7. Jakobson, Roman (1937). Six Lectures on Sound and Meaning. MIT Press, Cambridge, Massachusetts. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0262600102.
  8. Sharada Narayanan (2010). Vakyapadiya: Sphota, Jati, and Dravya.
  9. Chierchia, Gennaro; Sally McConnell-Ginet (2000). Meaning and Grammar: An Introduction to Semantics. MIT Press, Cambridge, Massachusetts. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780262531641. {{cite book}}: Unknown parameter |lastauthoramp= ignored (help)
  10. All references in this article to the study of sound should be taken to include the manual and non-manual signs used in sign languages.
  11. Adrian Akmajian; Richard A. Demers; Ann K. Farmer; Robert M. Harnish (2010). Linguistics (6th ed.). The MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-51370-6. Archived from the original on 14 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012. {{cite book}}: Check date values in: |archivedate= (help)

உசாத்துணைகள்

[தொகு]
  • Rymer, p. 48, quoted in Fauconnier and Turner, p. 353)
  • Gilles Fauconnier and Mark Turner (2002). The Way We Think: Conceptual Blending and the Mind's Hidden Complexities. அடிப்படை நூல்கள்.
  • Rymer, Russ (1992). "Annals of Science: A Silent Childhood-I". New Yorker, April 13.
  • Steven Pinker, The Language Instinct

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழியியல்&oldid=4141756" இலிருந்து மீள்விக்கப்பட்டது