உள்ளடக்கத்துக்குச் செல்

சொல்லியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொல்லியல் (lexicology) என்பது சொற்கள் பற்றிய ஆய்வு தொடர்பான, மொழியியலின் ஒரு பிரிவு ஆகும். இது சொற்களுக்கும், சொற் தொகுதி முழுமைக்கும் இடையிலான தொடர்புகளையும் (பொருள் குறித்த) ஆய்வு செய்கிறது. சொல்லியலுக்குத் தொடர்புடைய இன்னொரு துறை lexicography ஆகும். இத்துறை, சொற் தொகுப்புக்கள் அல்லது அகரமுதலிகள் உருவாக்குவது தொடர்பானது. lexicography சொல்லியலின் செயல்முறைப் பகுதி என்றும் சொல்லப்படுவது உண்டு. இது செயல்முறை சார்ந்த ஒரு துறையேயானாலும், இதற்கெனத் தனியான கோட்பாடுகளும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்லியல்&oldid=3958455" இலிருந்து மீள்விக்கப்பட்டது