இலைமன் சுட்டிராங் சுபிட்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலைமன் சுட்டிராங் சுபிட்சர்
பிறப்புஇலைமன் சுட்டிராங் சுபிட்சர்
Lyman Strong Spitzer, Jr.
(1914-06-26)சூன் 26, 1914
தொலிடோ, ஓகியோ, ஐக்கிய அமெரிக்கா
இறப்புமார்ச்சு 31, 1997(1997-03-31) (அகவை 82)
பிரின்சுடன், நியுசெர்சி, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைகோட்பாட்டு இயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்பிலிப்சு கல்விக்கழகம்
பிரின்சுட்டன் பல்கலைக்கழகம் (முனைவர்)
யேல் பல்கலைக்கழகம் (கலை இளவல்)
ஆய்வு நெறியாளர்என்றி நோரிசு இரசல்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜான் இரிச்சர்டு கோட்
புரூசு எல்மேகிரீன்
ஜார்ஜ் பி.பீல்டு
ஜான் பிவர்லி ஒகே
திரின் சுவான் துவான்
அறியப்படுவதுவிண்மீன் உருவாக்க ஆராய்ச்சி, மின்ம இயற்பியல்
விண்வெளித் தொலைநோக்கிகள் உருவாக்கத்தை ஊக்குவித்தல்
விருதுகள்என்றி டிரேப்பர் பதக்கம் (1974)
தேசிய அறிவியல் பதக்கம் (1979)
கிராஃபோர்டு பரிசு (1985)
துணைவர்தோரியன் கானடே (1940)

இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer, Jr.) (ஜூன் 26, 1914 – மார்ச்சு 31, 1997)[1] ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளரும் வானியலாளரும் மலையேறியும் ஆவார். இவர் அறிவியலாளராக, விண்மீன்கள் உருவாக்கம் மின்ம இயற்பியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். இவர் 1946 இல் விண்வெளியில் இயங்கும் தொலைநோக்கிகளை உருவாக்குவதில் ஈடுபட்டார்.[2] இவர் உடுக்கணங்காணி எனும் மின்மக் கருவியை உருவாக்கினார். நாசாவின் இந்தக் கருவி சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கி எனப்படுகிறது. மலையேறியாக டொனால்டு மார்ட்டனுடன் தோர் மலையை முதன்முதலாக ஏறினார்.

இளமையும் கல்வியும்[தொகு]

சுபிட்சர் ஒகியோவில் உள்ள தொலிடோவில் பிரெசுபைடேரியக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை இலைமன் சுட்டிராங் சுபிட்சர் ஆவார். இவரது தாயார் பிரம்பேக் எனப்படு பிளாஞ்சிகேரி ஆவார். தந்தைவழி பாட்டியால் இவர் புதுமைப்புனைவாளர் எலி விட்னெவின் உறவினர்.[3] சுபிட்சர் ஓகியோ, தொலிடோவில் உள்ள சுகாட் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் 1929 இல் பிலிப்சு கல்விக்கழகத்தில் பயின்றார்.அதன் பிறகு, யேல் கல்லூரியில் சேர்ந்து 1935 இல் பை—பீட்டா-கப்பா பட்டம் பெற்றார். அப்போது இவர் மண்டையோடு எலும்பு அமைப்பின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஓராண்டூ பயிலும்போது ஆர்த்தர் எடிங்டனாலும் இளைஞர் சுப்பிரமணியன் சந்திரசேகராலும் பெரிதும் கவரப்பட்டுள்ளார். பின் ஐக்கிய அமெரிகவுக்கு மீண்டு, பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் 1935 இல் கலை முதுவர் பட்டமும் 1938 இல் என்றி நோரிசு இரசலின் கீழ் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.[4].[5]

மலையேற்றம்[தொகு]

சுபிட்சரும் டொனால்டு மார்ட்டனும் 1965 இல் கனடா, நுனாவட் மாவட்டப் , பாஃபின் தீவில் அமைந்த ஆயூட்டக் தேசியப் பூங்காவில் உள்ள 1675 மீ உயரத் தோர் மலையை முதன்முதலாக ஏறிச் சாதனை படைத்தனர் .[1]:347 அமெரிக்க ஆல்பைன் குழு உறுப்பினரான சுபிட்சர் "இலைமன் சுபிட்சர் மலையேற்ற முன்னேற்ற விருது" எனும் விருதை உருவாக்கினார். இந்த விருது ஒவ்வோராண்டும் மலையேற்றத்தில் முனைந்து வெற்றியீட்டும் வீரர்களுக்கு 12,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசை வழங்குகிறது.[6]

அறிவியல்[தொகு]

இவர் யேல் பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் துறைப்புல உறுப்பினராக இருந்தபோது போர்க்கால அறிவியல் பணியாக சோனார் உருவாக்கப் பணியில் ஈடுபட நேர்ந்துள்ளது. இவர் 1947 இல், தன் 33 ஆம் அகவையில், என்றி நோரிசு இரசலுக்குப் பிறகு பிரின்சுடன் வான்காணக இயக்குநரானார். இதற்கு இவரும் மார்ட்டின் சுவார்சு சைல்டும் கூட்டாக 1070 வரை தலைமையேற்றனர்.

சுபிட்சரின் ஆராய்ச்சி உடுக்கண இடைவெளி ஊடகத்தின்பால் கவனம் குவித்தது; எனவே, இந்த ஆய்வு மின்ம இயற்பியல் பற்றிய ஆழ்ந்த புரிதலை உருவாக்கியது. இவர் 1930 களிலும் 1940 களிலும் முதன்முதலாக விண்மீன்களின் உருவாக்கம் நிகழ்காலத்திலும் தொடரும் நிகழ்வென உணர்ந்தவர்களில் முன்னோடியாவார். இவரது "விண்வெளியில் விரவிய பொருண்மம்" (1968), " உடுக்கண இடைவெளி ஊடக இயற்பியல் நிகழ்வுகள்" (1978) எனும் தனிவரைவு நூல்கள் அப்போதைக்கு முந்தைய பத்தாண்டு ஆய்வு வளர்ச்சியை உள்ளடக்கின. எனவே, பின்னர் பல பத்தாண்டுகளுக்கு இவை பாடநூல்களாகத் திகழ்ந்தன.

சுபிட்சர் மேட்டர்கார்ன் திட்டத்தின் நிறுவன உறுப்பினர் ஆவார். இது கட்டுபடுத்தப்பட்ட வெப்ப அணுக்கரு ஆராய்ச்சியில் பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தின் முன்னோடித் திட்டமாகும். இது பின்னர் 1961 இல் பிரின்சுட்டன் மின்ம இயற்பியல் ஆய்வகம் எனப் பெயர் மாற்றப்பட்டது. இவர் தான் பொதுவாக, விண்வெளி ஒளியியல் வானியலின் முன்னோடியும் குறிப்பாக, அபுள் விண்வெளித் தொலைநோக்கித் திட்டத்தின் முன்னோடியும் ஆவார்.

இறப்பு[தொகு]

இவர் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் அன்றைய நாள் பணிமுடிந்ததும் 1997 மார்ச்சு 31 இல் திடீரென இறந்துள்ளார். இவர் பிரின்சுடன் கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரது மனைவி தோரியன் கானடே சுபிட்சரும் நான்கு பிள்ளைகளும் பத்து பேரப்பிள்ளைகளும் உள்ளனர். இவரது நான்கு பிள்ளைகளில் ஒருவரான நரம்புயிரியல் வல்லுனராகிய நிகோலசு சுபிட்சர் இப்போது சாண்டீகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்புயிரியல்துறைப் பேராசிரியராகவும் துணைத்தலைவராகவும் உள்ளார்.

தகைமைகள்[தொகு]

விருதுகள்

 • அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழக ஆய்வுறுப்பினர் (1953)[7]
 • என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை (1953)[8]
 • புரூசுப் பதக்கம் (1973)[9]
 • என்றி திரேப்பர் பதக்கம், அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகம் (1974* மின்ம இயற்பியலுக்கான ஜேம்சு கிளார்க் மாக்சுவெல் பரிசு (1975)
 • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1978)[10]
 • தேசிய அறிவியல் பதக்கம் (1979)
 • பிராங்ளின் பதக்கம்] (1980)
 • பிரெஞ்சு வானியல் கழகத்தின் பிரிக்சு யூல்சு ஜான்சென் விருது (1980)
 • கிராபோர்டு பரிசு (1985)

இவரது பெயர் இடப்பட்டவை

 • சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கி
 • இலைமன் சுபிட்சர் நூலகம், தாவென்போர்ட்டு கல்லூரி, யேல் பலகலைக்கழகம்
 • இலைமன் சுபிட்சர் கட்டிடம், பிரின்சுட்டன் மின்ம இயற்பியல் ஆய்வகம், பிரின்சுட்டன், நியூஜெர்சி
 • இலைமன் சுபிட்சர் கோளரங்கம், பேர்பேங்க்சு அருங்காட்சியகமும் கோளரங்கமும், புனித ஜான்பரி, VT
 • இறுதிக் கேள்விக்கான பதில், NTN பசுடைமரின் காட்சியரங்கு, 2008, செப்டம்பர், 16.
 • சுபிட்சர் கட்டிடம், தொலிடோ ஓகியோ.

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 Jeremiah P. Ostriker (2007). "Lyman Spitzer. 26 June 1914 -- 31 March 1997: Elected ForMemRS 1990". Biographical Memoirs of Fellows of the Royal Society 53: 339–348. doi:10.1098/rsbm.2007.0020. http://rsbm.royalsocietypublishing.org/content/53/339.full.pdf. :339
 2. "Hubble Essentials: About Lyman Spitzer, Jr". Hubble Site.
 3. Ancestry of Gov. Bill Richardson
 4. "Professor of Astronomy Lyman Spitzer Jr. Dies". Communications and Publications, Stanhope Hall, Princeton U.. April 1, 1997. https://www.princeton.edu/pr/news/97/q2/0401sptz.html. 
 5. Current Biography Yearbook. H.W. Wilson. 1960. பக். 395–96. 
 6. "Lyman Spitzer Cutting Edge Climbing Award". Archived from the original on 2013-01-08. பார்க்கப்பட்ட நாள் 2017-01-18.
 7. "Book of Members, 1780-2010: Chapter S" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 15 April 2011.
 8. "Grants, Prizes and Awards". American Astronomical Society. Archived from the original on 22 December 2010. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
 9. "Past Winners of the Catherine Wolfe Bruce Gold Medal". Astronomical Society of the Pacific. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
 10. "Winners of the Gold Medal of the Royal Astronomical Society". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.

வெளி இணைப்புகள்[தொகு]