தேசிய உழவர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய உழவர் நாள் (Indian Farmer's Day) உழவர்களின் நலனுக்காகவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 23-ம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.[1].[2]. [3]

பின்னணி[தொகு]

இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங் அவர்களின் பிறந்த நாளே தேசிய உழவர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காரணம்[தொகு]

பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.

அவருடைய ஆட்சியின்போதே உழவர்களின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இதைப் போன்றே அவர் ஆட்சியின் போது உழவர்களின் நலன்களுக்காக சில முக்கிய திட்டங்களை கொண்டுவந்தார்.[1]

விடுமுறை[தொகு]

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் தேசிய உழவர் நாளன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தேசிய விவசாயிகள் தினம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2016.
  2. 2.0 2.1 "இந்திய விவசாயிகள் தினம் இன்று". விகடன். பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2016.
  3. "Farmer's Day in India". Indianmirror.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_உழவர்_நாள்&oldid=2179024" இலிருந்து மீள்விக்கப்பட்டது