உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னா ஜேன் ஆரிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னா ஜேன் ஆரிசன்
Anna Jane Harrison
பிறப்பு(1912-12-23)திசம்பர் 23, 1912
பென்டன் நகரம், மிசூரி
இறப்புஆகத்து 8, 1998(1998-08-08) (அகவை 85)
ஓலியோக், மாசச்சூசெட்ஸ்
கல்வி கற்ற இடங்கள்இளங்கலை 1933, முதுகலை 1937, முனைவர் 1940 (வேதியியல்), கல்வியியலில் இளங்கலை, 1935 மிசூரி பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவேதியியல் பேராசிரியர், அமெரிக்க வேதியியல் முமுகத்தின் முதல் பெண் தலைவர்
விருதுகள்இருபது தகைமைப் பட்டங்கள்

அன்னா ஜேன் ஆரிசன் (Anna Jane Harrison, திசம்பர் 23, 1912 – ஆகத்து 8, 1998) ஓர் அமெரிக்க கரிம வேதியியலாளர். இவர் மவுண்ட் ஓல்யோக் கல்லூரியில் நாற்பது ஆண்டுகள் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மேலும் இவர் அமெரிக்க வேதியியல் கழகத்தின் முதல் பெண் தலைவரும் ஆவார்.[1] இவர் இருபது தகைமைப் பட்டங்களைப் பெற்றவர்.[2] இவர் கல்வி கற்பித்தலில் தேசிய அளவில் புகழ் பெற்றவர். மேலும் இவர் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் அறிவியலில் பெண்கள் முன்னேறப் பாடுபட்டார்.[3][4][5]

இளமையும் கல்வியும்

[தொகு]

இவர் மிசிசோரியில் உள்ல பெண்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆல்பர்ட் ஃஆரிசனும் மேரி கரோலி ஃஆரிசனும் உழவர்கள் ஆவர். இவரது ஏழாம் அகவையில் தந்தையார் இறந்துவிட்டார். எனவே தாயார் குடும்பப் பண்ணையை ஆளுகை செய்து இவரையும் அண்ணனையும் காப்பாற்றியுள்ளார்.[6] இவர் மிசிசோரியில் உள்ள மெக்சிகொ நகர உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போதே அறிவியலில் ஆர்வம் பெற்றுத் திகழ்ந்துள்ளார். இவர் இளம் வேதியியல் பட்டத்தை1933 இலும் இளம் கல்வியியல் பட்டத்தை1935 இலும் முது வேதியியல் பட்ட்த்தை1937 இலும் முனைவர் பட்ட்த்தை 1940 இலும் கொலம்பியாவில் இருந்த மிசூரி பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்.[2]

வாழ்க்கைப்பணி

[தொகு]

இவர் வேதியியலில் முதுவல் பட்டம் பயிலும்போதே மிசிசோரியில் உள்ள தான் படித்த ஊரகப் பள்ளியில் வேதியியல் பாடம் கற்பித்துள்ளார்.[1][7] பிறகு இவர் சோபி நியூகோம்பு நினைவுக் கல்லூரியில் வேதியியலைப் பயிற்ருவித்துள்ளர். மேலும் இவர் தென் அமெரிக்கப் பெண்கல்லூரிகளை துலேன் பல்கலைக்கழகத்துக்காக 1940 முதல் 1945 வரை ஒருங்கிணைத்துள்ளார்.[2]

ஆரிசன் 1942 இல் தன் கல்விப்பணியில் இருந்து விடுமுறை பெற்று மிசிசோரி பல்கலைக்கழகத்தில் இர்ண்டாம் உலகப் போர் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.[2] இவர் 1944 இல் நச்சுப்புகை குறித்து தேசிய பாதுகாப்பு ஆய்வுக் குழுமத்துக்காக ஆய்வை மிசிசோரி, கான்சாசு நகரில் இருந்த ஏ.ஜே.கிரினெர் நிருவனத்திலும் நியூயார்க்கில் உள்ள கார்னிங்குகண்ணாடி பணிகள் நிறுவனத்திலும் மேற்கொண்டுள்ளார்.[7] இந்த ஆய்வு அமெரிக்கப் படைத்துறைக்குக் களத்தில் நச்சுப்புகையைக் கண்டறியும் கருவியை உருவாக்க உதவியது.[2] இவர் தன் ஆய்வுக்காக அமெரிக்க வெங்களிம கழகத்தின் பிரேன்க் பாரெசுட்டு விருதைப் பெற்றார்.[7]

1947 இல் மரீ மெர்குரி உரோத் வேதிமரபு நிறுவனத்தின் திரட்டுகளில் கத்லீன் சீயர், அன்னா ஜேன் ஆரிசன், மேரி இழ்செரில், மரீ மெர்குரி

இவர் 1945 இல் மவுண்ட் ஓல்யோக் கல்லூரியில் வேதியியல் துறையில் துணைப்பேராசிரியராக சேர்ந்தார்.[1] பேராசிரியரும் ஆய்வாளருமான்ன எம்மா பி. காரிடம் பணிபுரியவே அங்கு பணியில் சேர்ந்தார்.[3] இவர் 1950 இல் அங்குப் பேராசிரியரானார். மேலும் 1960 முதல் 1966 வரை அங்கு துறையின் தலைமையையும் ஏற்றார். பிறகு 1979 இல் அக்கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெற்ற பிறகு மேரிலாந்தில் உள்ள அன்னாபோலீசிலமெரிக்க நாவாய்க் கல்விக்கழகத்தில் கல்வி பயிற்றுவித்தார்.[5] இவரது அய்வு கரிமச் சேர்மங்களின் கட்டமைப்பிலும் அவற்றின் ஒளியுடனான ஊடாட்டத்திலும், குறிப்பாக புற ஊதாக்கதிர், மீப்புற ஊதாக்கதிருடன் நிகழும் ஊடாட்டத்தில் அமைந்தது .[7] தேர்ந்தெடுத்த கரிமச் சேர்மங்களால் ஆகிய பொருள்களின் புற ஊதா உட்கவர்வு கதிர்நிரல்கள், ஒளிமுனையத்தின் உட்கூறுகள் ஆகியவற்றின் செய்முறை ஆராய்ச்சிகளுக்காக, அமெரிக்க வேதியியல் கழகத்தின் பாறையெண்ணெய் ஆய்வு நிதி அறிவுரை வாரியத்தின் நல்கையைப் பெற்றுள்ளார்.[7]

இவர் 1972 முதல் 1978 வரை அமெரிக்க அறிவியல் குழுமத்தில் பணிபுரிந்தார்.[2] இவர் 1978 இல் அமெரிக்க வேதிய்ல் கழகத்தின் முதல் பெண்தலைவரானார்.[8] இவர் 1983 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக்கழகத்தின் தலைவரானார்.

இவர் ஆய்வாளராகவும் கல்வியாளராகவும் பல அமெரிக்க அறிவியல் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக அமெரிக்க வேதியியல் கழகத்திலும்.[9] அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக்கழகத்திலும் அமெரிக்க கல்லூரிகளின் கழகத்திலும் வேதியியல் பொருளாக்கக் குழுமங்களின் கழகத்திலும் மாநிலங்களின் கல்வி ஆணையங்க்ளிலும் நிலா, கோளாய்வு நிறுவனத்திலும் பொருளாக்க வேதியியலாளர் கழகத்திலும் தேசிய அறிவியல் கல்விக்கழகத்திலும் அமெரிக்கத் தேசிய ஆய்வு மன்றத்திலும் தேசிய அறிவியல் வாரியத்திலும் தேசிய அறிவியல் அறக்கட்டளையிலும் பணிபுரிந்துள்ளார்.[7]

இந்த நிறுவனங்களின் பேராளராக, தேசிய் அறிவியல் அறக்கட்டளை சார்பில் 1971 இல் இந்தியாவுக்கும் தெசிய அறிவியல் குழுமத்தின் சார்பில் 1974 இல் அண்டார்ட்டிகாவுக்கும் அமெரிக்க வேதியியல் கழகத் தலைவராக 1978 இல் யப்பான், எசுப்பெய்ன், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் மீண்ட்ம் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் 1983 இல் இந்தியாவுக்கும் சென்றுவந்துள்ளார்.[7]

இவர் அமெரிக்கவேதியியல் கழக இதழ், வேதியியல், பொறியியல் செய்திகள் ஆகிய இதழ்களுக்கும் பிரித்தானிக்கா கலைக்கள்ஞ்சியத்துக்கும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் தேசிய அறிவியல் ஆசிரியர் கழகத்தின் அறிவியல் பயிற்றல் இதழ், வேதியியல், பொறியியல் செய்திகள் ஆகியவற்றின் பதிப்புக் குழுக்களில் இருந்துள்ளார். இவர் 1989 இல் தன் ஓல்யோக் கல்லூரி ஆசியர்எட்வின் எஸ்.வீவருடன் இணைந்து "வேதியியல்:ஒரு புரிதலுக்கான தேட்டம்" எனும் பாடநூலை எழுதியுள்ளார்[10]

இவர் அறிவியலில் மகளிர் கல்வி முன்னேற்றத்துக்காக மாநில அளவிலும் கூட்டாட்சி முகமைகள் அளவிலும் கூடுதலாக நிதி திரட்டினார்.[7]

இவர் மாரடைப்பால் தனது 85 ஆம் அகவையில் மசாசூசட் ஓல்யோக்கில் இறந்தார்.[1][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Saxon, Wolfgang (16 August 1998). "Anna J. Harrison, 85, Led U.S. Chemical Society". The New York Times. http://www.nytimes.com/1998/08/16/us/anna-j-harrison-85-led-us-chemical-society.html. பார்த்த நாள்: 20 June 2013. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Biographies: Anna Jane Harrison (1912 - 1998)". Women in Health Sciences. Bernard Becker Medical Library Digital Collection, Washington University School of Medicine, St. Louis, Missouri. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.
  3. 3.0 3.1 "Anna Jane Harrison". Online Resources / Chemistry in History / Chemical Education. Chemical Heritage Foundation. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.
  4. Long, Janice (17 August 1998). "Anna Harrison dies at age 85". Chemical & Engineering News 76 (33): 9. doi:10.1021/cen-v076n033.p009a. 
  5. 5.0 5.1 "ACS President: Anna Jane Harrison (1912-1998)". American Chemical Society > About Us > Governance. American Chemical Society. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.
  6. Rogers, Kara. "Anna Jane Harrison (American chemist and educator)". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 "Harrison, Anna J., Papers 1854-1999" (44 boxes). Finding aid: Manuscript Collection: MS 0763. Mount Holyoke College, Archives and Special Collections. Archived from the original on 6 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 21 May 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. "Anna Jane Harrison". Chemical Heritage Foundation. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20.
  9. "Anna Harrison fills ACS board vacancy". Chemical & Engineering News 54 (4): 6. 26 January 1976. doi:10.1021/cen-v054n004.p006a. 
  10. "Chemistry : a search to understand". Worldcat entry. OCLC. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.
  11. Grolnic-McClurg, Sarah. "Anna Jane Harrison, Chemical Education Leader and First Woman President of the American Chemical Society, Dies at 85". News & Events. Mount Holyoke Office of Communications; News & Events. Archived from the original on 14 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_ஜேன்_ஆரிசன்&oldid=3592509" இலிருந்து மீள்விக்கப்பட்டது