பியேர் ஜான்சென்
பியேர் ஜான்சென் Pierre Jules César Janssen | |
---|---|
பிறப்பு | 22 பெப்பிரவரி 1824 பாரிசு |
இறப்பு | 23 திசம்பர் 1907 (அகவை 83) Meudon |
கல்லறை | பெர் லசெயிஸ் சுடுகாடு |
பணி | வானியல் வல்லுநர், ஒளிப்படக் கலைஞர், இயற்பியலறிஞர், நிலவியலாளர், புத்தாக்குனர், பல்கலைக்கழகப் பேராசிரியர் |
விருதுகள் | Knight of the Legion of Honour, Rumford Medal, Foreign Member of the Royal Society, Commander of the Legion of Honour |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
துறைகள் | வானியல், இயற்பியல், நிலவியல் |
நிறுவனங்கள் |
|
பியேர் ஜூல்ஸ் சேசர் ஜான்சென் (Pierre Jules César Janssen, பெப்ரவரி 22, 1824 – டிசம்பர் 23, 1907) என்பவர் ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் ஆங்கிலேய அறிவியலாளர் ஜோசப் நோர்மன் லொக்கியர் என்பவருடன் இணைந்து ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தார்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]பாரிசில் பிறந்த ஜான்சென் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்றுப் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனார். ஆனாலும் இவர் பல அறிவியல் நிகழ்வுகளை ஆராய பல நாடுகளுக்கும் சென்று வந்தார். 1857 ஆம் ஆண்டில் நிலநடுக் கோட்டின் காந்தத்தன்மையை ஆராய பெரு நாட்டிற்குச் சென்றார். 1867 இல் அசோரெஸ் தீவுகளில் ஒளியியல், காந்தத் தன்மைகளை ஆராய்ந்தார். வெள்ளிக்க் கோளின் நகர்வுகளை 1874 இல் ஜப்பானிலும், 1882 இல் அல்ஜீரியாவிலும் வெற்றிகரமாகக் கண்டறிந்தார். முழுமையான சூரிய கிரகணத்தை ஆராயும் பொருட்டு இத்தாலி (1867), குண்டூர் (1868), அல்ஜியேர்ஸ் (1870), சியாம் (1875), கரொலைன் தீவுகள் (1883), ஸ்பெயின் (1905) ஆகிய இடங்களுக்கு தனது குழுவினருடன் சென்றார்.
ஹீலியம் கண்டுபிடிப்பு
[தொகு]ஆகஸ்ட் 18 இல் இந்தியாவில் சூரிய கிரகணத்தை ஆராயும் போது சூரிய அலையில் 587.49 nm அலைநீளம் கொண்ட ஒரு வெளிச்சமான மஞ்சள் கோட்டைக் கண்டார். முதற் தடவையாக இந்த ஒளிப்பட்டைக் கோடு அவதானிக்கப்பட்டது.
அதே ஆண்டு அக்டோபரில், ஜோசப் நோர்மன் லோக்கியர் என்பவர் இதே கோட்டை அவதானித்து இது ஒரு அறிமுகமில்லாத தனிமம் ஒன்றினால் வெளியிடப்பட்டதெனக் கருதினார். முதற் தடவையாக இதுவே வெளி உலகில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தனிமம் ஆகும். லொக்கியர் இதற்கு சூரியனின் கிரேக்கப் பெயரான ἥλιος (helios, ஹேலியோஸ்) எனப் பெயரிட்டார்.[1][2]
குறிப்புகள்
[தொகு]- ↑ Oxford English Dictionary (1989), s.v. "helium". Retrieved December 16, 2006, from Oxford English Dictionary Online. Also, from quotation there: Thomson, W. (1872). Rep. Brit. Assoc. xcix: "Frankland and Lockyer find the yellow prominences to give a very decided bright line not far from D, but hitherto not identified with any terrestrial flame. It seems to indicate a new substance, which they propose to call Helium."
- ↑ For the name "helium" see also Jensen, William B. (2004). "Why Helium Ends in "ium"". Journal of Chemical Education 81 (7): 944. http://www.jce.divched.org/Journal/Issues/2004/Jul/abs944.html. (subscription required for full access)
வெளி இணைப்புகள்
[தொகு]- 1911 Encyclopædia Britannica Eleventh Edition, entry for Janssen
- Brief biography பரணிடப்பட்டது 2009-05-10 at the வந்தவழி இயந்திரம், from the High Altitude Observatory at Boulder, Colorado
- Janssen's chronophotography