ஜெரார்டு குயூப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெரார்டு குயூப்பர்
Gerard Kuiper 1964b.jpg
= ஜெரார்டு குயூப்பர் , 1964
பிறப்புஜெரித் பியெதர் குயூப்பர்
திசம்பர் 7, 1905(1905-12-07)
தியூத்ஜெனார்ன், நெதர்லாந்து
இறப்புதிசம்பர் 23, 1973(1973-12-23) (அகவை 68)
மெக்சிகோ மாநகர், மெக்சிகோ
இறப்பிற்கான
காரணம்
நெஞ்சடைப்பு
தேசியம்டச்சு அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்இலெய்டன் பல்கலைக்கழகம்
(அறிவியல் இளவல், அறிவியல் முதுவர், இயற்பியல் முதுவர், முனைவர், அறிவியல் முதுமுனைவர்)
பணிவானியலாளர்
கோள் அறிவியலாளர்
நிலாவியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
1933–1973
அறியப்படுவதுகுயூப்பர் பட்டை
வாழ்க்கைத்
துணை
சாரா ஃபுல்லர் (1936–1973; இறப்பு)

ஜெரார்டு குயூப்பர் (Gerard Peter Kuiper) (English: /ˈkpər/; டச்சு ஒலிப்பு: [ˈkœypər]; ஜெரித் பியேதர் குயூப்பர் (Gerrit Pieter Kuiper); திசம்பர் 7, 1905 – திசம்பர் 23, 1973) ஒரு டச்சு அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாளரும் நிலாவியலாளரும் எழுத்தாளரும் பேராசிரியரும் ஆவார்.இவர் புத்தூழிக் கோள் அறிவியலின் தந்தையாகக் கருதப்படுபவர். இவர் பெயரால் குயூப்பர் பட்டை வழங்கப்படுகிறது.[1] இவர் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியராக கார்ல் சாகனுக்கு முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டினார். இருவரும் 1958 இல் A119 படைசார் திட்டம் ஒன்றில் இணைந்து பணியாற்றினர். இது நிலாவில் அணுப்படைக்கலனை வெடிப்பதற்கான திட்டம் ஆகும்.[2]

தகைமைகள்[தொகு]

  • குயூப்பர் 1947 இல் பிரான்சு வானியல் கழகத்தின் பிரிக்சு யூலேசு ஜான்சன்விருது பெற்றார்.
  • இவர் 1959 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் என்றி நோரிசு விரிவுத் தகைமை பெற்றார்.
  • மேலும் 1971 இல் இவர் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் இருந்தும் பிராங்ளின் நிறுவனத்தில் இருந்தும்கெப்லர் பொற்பதக்கம் பெற்றார்.
  • 1776 குயூப்பர் எனும் சிறுகோளும் குயூப்பர் அறிவன் குழிப்பள்ளம், குயூப்பர் நிலாக் குழிப்பள்ளம், குயூப்பர் செவ்வாய்க் குழிப்பள்ளம் ஆகிய குழிப்பள்ளங்களும் இப்போது இயக்கத்தில் இல்லாத [[குயூப்பர் காற்றுவெளி வான்காணகமும் இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன.
  • நெப்டியூனுக்கு அப்பால் உள்ள குறுங்கோள்கள் நிலவும் பட்டை குயூப்பரால் முன்கணிக்கப்பட்டதால், குயூப்பர் பட்டை என வானியலாளர்களால் வழங்கப்படுகிறது. என்றாலும் இவர் அவை இப்பொது கோள் ஈர்ப்பால் இழுக்கப்பட்டு அங்கே ஒன்றிரண்டு நிலவலாம் அல்லது ஏதும் இல்லாமலும் போகலாம் என்றும் கூறியுள்ளார்.
  • இவரது பெயரால் அமெரிக்க வானியல் கழகக் கோள் அறிவியல் பிரிவு குயூப்பர் பரிசு என ஒரு பரிசை நிறுவி வழங்கி வருகிறது. இது கோள் அறிவியலில் பெரும்பணி ஆற்றிய வாழ்நாள் பங்களிப்பாளர்களுக்குத் தரப்படுகிறது. கார்ல் சேகன், ஜேம்சு வான் ஆலன், யூகின் சூமேக்கர் ஆகியோர் இப்பரிசைப் பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "NASA Solar System Exploration". December 2, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 12, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. Lunar Exploration, by Paolo Ulivi (2004)

வெளி இணைப்புகள்[தொகு]

Official
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரார்டு_குயூப்பர்&oldid=3573322" இருந்து மீள்விக்கப்பட்டது