ஹேகியா சோபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹேகியா சோபியா
Hagia Sophia
Hagia Sophia Mars 2013.jpg
ஹேகியா சோபியாவின் ஒரு தோற்றம்
ஹேகியா சோபியா is located in Istanbul
ஹேகியா சோபியா
Location within Istanbul
ஆள்கூறுகள் 41°00′31″N 28°58′48″E / 41.008548°N 28.979938°E / 41.008548; 28.979938ஆள்கூற்று: 41°00′31″N 28°58′48″E / 41.008548°N 28.979938°E / 41.008548; 28.979938
இடம் காண்ஸ்டாண்டிநோபுள் (இன்றைய இசுதான்புல், துருக்கி)
வடிவமைப்பாளர் இசிடோர் மைலீட்டசு (Isidore of Miletus)
திரால்லசு நகர அந்தேமியசு
வகை

கீழை மரபுவழிப் பெருங்கோவில்: கி.பி. 537–1204
உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் (1204–1261)
கிழக்கு மரபுவழிப் பெருங்கோவில்: கி.பி. 1261–1453
உதுமானியப் பேரரசு சார்ந்த இசுலாமியத் தொழுகையிடம்: கி.பி. 1453–1931

கலைக்கூடம் (1935–இன்றுவரை)
கட்டுமானப் பொருள் செதுக்குக் கல், செங்கல்
நீளம் 82 m (269 ft)
அகலம் 73 m (240 ft)
உயரம் 55 m (180 ft)
துவங்கிய நாள் 532
முடிவுற்ற நாள் 537
(1482 ஆண்டுகளுக்கு முன்னர்)
 (537)

ஹேகியா சோபியா (/ˈhɑː.ɪə sˈfi.ə/; கிரேக்க மொழி: Ἁγία Σοφία, "புனித ஞானம்"; இலத்தீன்: Sancta Sophia / Sancta Sapientia; துருக்கியம்: Ayasofya) துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் உள்ளது. முன்னர் கிழக்கத்திய மரபுவழிக் கிறித்தவப் பிரிவினரின் பெருங்கோவிலாக விளங்கிய இது, பின்னர் 1453 இல், மசூதியாக மாற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் இது ஒரு அருங்காட்சியகம் ஆக்கப்பட்டு, அயசோஃப்யா அருங்காட்சியகம் என அழைக்கப்படுகின்றது. இது உலகின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. எட்டாவது அதிசயம் என வர்ணிக்கப்படும் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. ஓட்டோமான் பேரரசு நிகழ்த்திய படையெடுப்பைத் தொடர்ந்து காண்ஸ்டாண்டிநோபுள் வீழ்ச்சியுற்றபோது, இப்பெருங்கோவிலை ஓட்டோமான்கள் கைப்பற்றினர். இதன் விளைவாகக் கிறித்தவம் நலிவடையத் தொடங்கியது.

ஹேகியா சோபியா, இஸ்தான்புல், துருக்கி, ஜூன் 1994
ஹேகியா சோபியாவின் உட்தோற்றம், இஸ்தான்புல், துருக்கி, ஜூன் 1994

தொடக்க கால வரலாறு[தொகு]

இக்கட்டடத்தை உருவாக்கும் பணி கி.பி. 532-537இல் நடந்தது. அதிலிருந்து கி.பி. 1453ஆம் ஆண்டுவரை அக்கட்டடம் கீழை மரபுவழித் திருச்சபையின் பெருங்கோவிலாகவும், திருச்சபை முதுமுதல்வரின் ஆட்சியிருக்கையாகவும் விளங்கியது.[1] கி.பி. 1204–1261 காலக்கட்டத்தில் மட்டும் அப்பெருங்கோவில் உரோமன் கத்தோலிக்க இலத்தீன் பிரிவினரின் கையகம் வந்தது. உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்கு மாறியது.

ஓட்டொமான் பேரரசு (உதுமானியப் பேரரசு இக்கோவிலைக் கைப்பற்றியது 1453இல் ஆகும். கிறித்தவ சமயத்தின் போதனைகளை விளக்கும் விதத்தில் அக்கோவிலில் எண்ணிறந்த கலை ஓவியங்கள் இருந்தன. அவற்றை இசுலாமிய ஆளுநர்கள் பெரும்பாலும் அழித்துவிட்டனர். அல்லது அக்கலை ஓவியங்களுக்கு மேலே இசுலாமியக் கலை அமைப்புகளைத் திணித்தனர். ஹாகியா சோபியா ஒரு முசுலிம் தொழுகைக் கூடமாக மாற்றப்பட்டது.

1453–1931 ஆண்டுக்காலத்தில் முசுலிம் தொழுகைக் கூடமாகச் செயல்பட்ட ஹாகியா சோபியா கட்டடம் சமயச் சார்பற்ற கட்டடமாக மாற்றப்பட்டது. 1935ஆம் ஆண்டு பெப்ருவரி 1ஆம் நாளிலிருந்து அது ஒரு கலைக்கூடமாக மாற்றப்பட்டது.[2]

தொடக்க காலக் கோவில் அர்ப்பணம்[தொகு]

ஆறாம் நூற்றாண்டில் ஹாகியா சோபியா பெருங்கோவில் கட்டப்பட்டபோது அதற்கு அளிக்கப்பட்ட கிரேக்கப் பெயர் ”Ναός τῆς Ἁγίας τοῦ Θεοῦ Σοφίας” (Shrine of the Holy Wisdom of God = ”இறைவனின் தூய ஞானத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம்”). கிறித்தவக் கொள்கைப்படி, கடவுளின் ஞானமாக விளங்குபவர் கடவுளின் வார்த்தை ஆவார். அவரே மனிதராக இவ்வுலகில் உருவெடுத்த இயேசு கிறித்து ஆவார்.[3] இயேசு கிறித்து மனிதராகப் பிறந்த விழா திசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது.[3]

இக்கோவில் சுருக்கமாக “புனித ஞானம்” (கிரேக்கம்: ஹாகியா சோபியா; இலத்தீன்: Sancta Sophia) என்று அழைக்கப்பட்டது.[4][5]

கோவிலின் குவிமாடம்[தொகு]

ஹாகியா சோபியா கோவிலின் குவிமாடம் உலகப் புகழ் பெற்றது. பிரமாண்டமாக அமைந்துள்ள அக்குவிமாடம் பைசான்சிய கலைக்கு உன்னத எடுத்துக்காட்டாக விளங்குகிறது.[6]அது கட்டடக் கலையின் போக்கையே மாற்றியதாகக் கருதப்படுகிறது.[7]ஏறக்குறைய ஆயிரம் ஆண்டளவாக இக்கோவில் உலகனைத்திலுமுள்ள எல்லாக் கிறித்தவக் கோவில்களிலும் மிகப் பெரிய பெருங்கோவிலாக விளங்கியது. 1520இல் எசுப்பானியா நாட்டு செவீயா பெருங்கோவில் (Seville) கட்டப்பட்ட வரை ஹாகியா சோபியா கோவில் பரப்பளவில் முதலிடம் பெற்றது.

குறிப்புகள்[தொகு]

 1. Müller-Wiener (1977), p. 112.
 2. Magdalino, Paul, et al. "Istanbul: Buildings, Hagia Sophia" in Grove Art Online. Oxford Art Online. http://www.oxfordartonline.com. accessed 28 February 2010.
 3. 3.0 3.1 Janin (1953), p. 471.
 4. McKenzie, Steven L. (1998). The Hebrew Bible Today: An Introduction to Critical Issues. M. Patrick Graham. Louisville, KY: Westminster John Knox Press. பக். 149. ISBN 0-664-25652-X. http://books.google.com/books?id=owwhpmIVgSAC&pg=PA149&dq=%22Jesus+Christ+as+the+Holy+Wisdom+of+God%22#v=onepage&=%22Jesus%20Christ%20as%20the%20Holy%20Wisdom%20of%20God%22&f=false. 
 5. Binns, John (2002). An Introduction to the Christian Orthodox Churches. Cambridge: Cambridge University Press. பக். 57. ISBN 0-521-66738-0. http://books.google.com/books?id=MOA5vfSl3dwC&pg=PA57&dq=%22Its+dedication+to+the+Wisdom+of+God+identified+it+with+Christ%22#v=onepage&q=%22Its%20dedication%20to%20the%20Wisdom%20of%20God%20identified%20it%20with%20Christ%22&f=false. 
 6. Fazio, Michael; Moffett, Marian; Wodehouse, Lawrence (2009). Buildings Across Time (3rd ). McGraw-Hill Higher Education. ISBN 978-0-07-305304-2. 
 7. Simons, Marlise (22 August 1993). "Center of Ottoman Power". New York Times. http://www.nytimes.com/1993/08/22/travel/center-of-ottoman-power.html. பார்த்த நாள்: 4 June 2009. 

நூல் தொகுப்பு[தொகு]

 • Ernest Mamboury (1953). The Tourists' Istanbul. Istanbul: Çituri Biraderler Basımevi. 
 • Raymond Janin (1953). La Géographie Ecclésiastique de l'Empire Byzantin. 1. Part: Le Siège de Constantinople et le Patriarcat Oecuménique. 3rd Vol. : Les Églises et les Monastères. Paris: Institut Français d'Etudes Byzantines. 
 • Wolfgang Müller-Wiener (1977) (in German). Bildlexikon zur Topographie Istanbuls: Byzantion, Konstantinupolis, Istanbul bis zum Beginn d. 17 Jh. Tübingen: Wasmuth. ISBN 978-3-8030-1022-3. 
 • Turner, J. (1996). Grove Dictionary of Art. Oxford: Oxford University Press. ISBN 0-19-517068-7. 
 • Mainstone, Rowland J. (1997). Hagia Sophia: Architecture, Structure, and Liturgy of Justinian's Great Church (reprint edition). W W Norton & Co Inc.. ISBN 0-500-27945-4. .
 • Hoffman, Volker (1999) (in German). Die Hagia Sophia in Istanbul. Bern: Lang. ISBN 3-906762-81-5. 
 • Hagia Sophia Church[தொடர்பிழந்த இணைப்பு], also known as Church of Holy Wisdom.
 • Necipoĝlu, Gulru (2005). The Age of Sinan: Architectural Culture in the Ottoman Empire. London: Reaktion Books. ISBN 978-1-86189-244-7. 
 • Ronchey, Silvia; Braccini, Tommaso (2010) (in Italian). Il romanzo di Costantinopoli. Guida letteraria alla Roma d'Oriente. Torino: Einaudi. ISBN 978-88-06-18921-1. 
 • Boyran, Ebru; Fleet, Kate (2010). A social History of Ottoman Istanbul. Cambridge: Cambridge University Press. ISBN 978-0-521-19955-1. 
 • Brubaker, Leslie; Haldon, John (2011). Byzantium in the Iconoclast era (ca 680–850). Cambridge: Cambridge University Press. ISBN 978-0-521-43093-7. 
 • Hagia Sophia. [1]. Accessed 23 Sept 2014.

மேல் ஆய்வுக்கு[தொகு]

 • Alchermes, Joseph D. (2005). "Art and Architecture in the Age of Justinian". in Maas, Michael. The Cambridge Companion to the Age of Justinian. Cambridge: Cambridge U.P.. பக். 343–375. ISBN 978-0-521-52071-3. 
 • Balfour, John Patrick Douglas (1972). Hagia Sophia. W.W. Norton & Company. ISBN 978-0-88225-014-4. 
 • Cimok, Fatih (2004). Hagia Sophia. Milet Publishing Ltd. ISBN 978-975-7199-61-8. 
 • Doumato, Lamia (1980). The Byzantine church of Hagia Sophia: Selected references. Vance Bibliographies. ASIN B0006E2O2M. 
 • Goriansky, Lev Vladimir (1933). Haghia Sophia: analysis of the architecture, art and spirit behind the shrine in Constantinople dedicated to Hagia Sophia. American School of Philosophy. ASIN B0008C47EA. 
 • Harris, Jonathan, Constantinople: Capital of Byzantium. Hambledon/Continuum (2007). ISBN 978-1-84725-179-4
 • Howland Swift, Emerson (1937). The bronze doors of the gate of the horologium at Hagia Sophia. University of Chicago. ASIN B000889GIG. 
 • Kahler, Heinz (1967). Haghia Sophia. Praeger. ASIN B0008C47EA. 
 • Kinross, Lord (1972). Hagia Sophia, Wonders of Man. ASIN B000K5QN9W. 
 • Kleinbauer, W. Eugene; Anthony White (2007). Hagia Sophia. London: Scala Publishers. ISBN 978-1-85759-308-2. 
 • Kleinbauer, W. Eugene (2000). Saint Sophia at Constantinople: Singulariter in Mundo (Monograph (Frederic Lindley Morgan Chair of Architectural Design), No. 5.). William L. Bauhan. ISBN 978-0-87233-123-5. 
 • Richard Krautheimer (1984). Early Christian and Byzantine Architecture. New Haven, CT: Yale University Press. ISBN 978-0-300-05294-7. 
 • Mainstone, R. J. (1997). Hagia Sophia: Architecture, Structure, and Liturgy of Justinian's Great Church. London: Thames & Hudson. ISBN 978-0-500-27945-8. 
 • Mainstone, Rowland J. (1988). Hagia Sophia. Architecture, structure and liturgy of Justinian's great church. London: Thames & Hudson. ISBN 0-500-34098-6. 
 • Mango, Cyril; Ahmed Ertuğ (1997). Hagia Sophia. A vision for empires. Istanbul. 
 • Nelson, Robert S. (2004). Hagia Sophia, 1850–1950: Holy Wisdom Modern Monument. Chicago: University Of Chicago Press. ISBN 978-0-226-57171-3. 
 • Özkul, T. A. (2007). Structural characteristics of Hagia Sophia: I-A finite element formulation for static analysis. Elsevier. 
 • Swainson, Harold (2005). The Church of Sancta Sophia Constantinople: A Study of Byzantine Building. Boston, MA: Adamant Media Corporation. ISBN 978-1-4021-8345-4. 
  • Scharf, Joachim:Der Kaiser in Proskynese. Bemerkungen zur Deutung des Kaisermosaiks im Narthex der Hagia Sophia von Konstantinopel. In: Festschrift Percy Ernst Schramm zu seinem siebzigsten Geburtstag von Schülern und Freunden zugeeignet, Wiesbaden 1964, S. 27–35
 • Yucel, Erdem (2005). Hagia Sophia. Scala Publishers. ISBN 978-1-85759-250-4. 
 • Hagia Sophia from the Age of Justinian to the Present. Princeton Architectural. 1992. ISBN 978-1-878271-11-2. 
 • Weitzmann, Kurt, ed., Age of spirituality: late antique and early Christian art, third to seventh century, no. 592, 1979, Metropolitan Museum of Art, New York, ISBN 978-0-87099-179-0

கட்டுரைகள்[தொகு]

கல்பதிகை ஓவியங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வெளிப் படிமங்கள்
360° panoramic view (virtual tour)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேகியா_சோபியா&oldid=2140111" இருந்து மீள்விக்கப்பட்டது