ஆறு (திரைப்படம்)
Appearance
ஆறு | |
---|---|
இயக்கம் | ஹரி |
தயாரிப்பு | சரண் |
கதை | ஹரி (திரைக்கதை) ஹரி (கதை) சுஜாதா (வசனம்) |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | சூர்யா திரிஷா வடிவேலு ராஜ் கபூர் ஆஷிஷ் வித்யார்த்தி |
ஒளிப்பதிவு | ப்ரியன் |
விநியோகம் | ஜெமினி புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 2005 |
ஓட்டம் | 168 நிமிடங்கள். |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆறு (Aaru) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வகை
[தொகு]நடிகர்கள்
[தொகு]- சூர்யா (நடிகர்) - ஆறுமுகம் (ஆறு)
- ஆஷிஷ் வித்யார்த்தி - விஸ்வநாதன்
- ராஜ் கபூர் - பூமி நாதன்
- திரிசா - மகாலட்சுமி
- வடிவேலு (நடிகர்) - சுமோ (சுண்டிமோதரம்)
- கலாபவன் மணி
- மாளவிகா அவினாஷ்
- ஐசுவரியா -சரோஜா
- ஜெய பிரகாஸ் ரெட்டி - ரெட்டி
- தாரிகா
- தம்பி ராமையா
- டெல்லி கணேஷ்
- நிழல்கள் ரவி - மகாலட்சுமியின் தந்தை
- மதன் பாப்
கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
விஷ்வனாதனுக்குக் கூலியாளாக இருக்கும் ஆறு (சூர்யா) தனது எஜமானரான விஷ்வனாதனுக்காக (அசிஷ் விஷ்யாத்ரி) பல கொடிய செயல்களைத் துணிந்து செய்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் பரம எதிரியான ரெட்டியினால் பல பிரச்சனைகள் வரவே அவருக்கு எதிராக ஆறுவை மோதச் சொல்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் சூழ்ச்சியினால் ஆறுவின் நெருங்கிய நண்பர்கள் கொல்லப்படவே பின்னைய காலங்களில் முதலாளியின் சூழ்ச்சிகளை அறிந்து கொள்கின்றார் ஆறு. பின்னர் தனது முதலாளியைப் பழி வாங்குகின்றார்.