ராஜ் கபூர் (இந்தி நடிகர்)
ராஜ் கபூர் Raj Kapoor | |
---|---|
1950இல் சோவியத் ஒன்றியத்தில் ராஜ் கபூர் | |
பிறப்பு | சிருஷ்டி நாத் கபூர் 14 திசம்பர் 1924 பெசாவர், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010), பிரித்தானியாவின் இந்தியா (இன்றைய கைபர் பக்துன்வா மாகாணம், பக்கித்தான்) |
இறப்பு | 2 சூன் 1988 புது தில்லி, இந்தியா | (அகவை 63)
மற்ற பெயர்கள் |
|
குடியுரிமை | இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1935–1988 |
அமைப்பு(கள்) | ஆர். கே. பிலிம்சு |
வாழ்க்கைத் துணை | கிருஷ்ணா மல்கோத்ரா (தி. 1946) |
பிள்ளைகள் | ரிசி கபூர், இரந்திர் கபூர், இராஜிவ் கபூர்[1]உட்பட 5 பேர். |
புகழ்ப்பட்டம் |
|
கையொப்பம் |
ராஜ் கபூர் (Raj Kapoor) (சிருஷ்டி நாத் கபூர்:14 டிசம்பர் 1924 – 2 ஜூன் 1988) ரன்பீர் ராஜ் கபூர்[2] என்றும் அழைக்கப்படும் இவர் பாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய ஒரு இந்திய நடிகரும், திரைப்பட இயக்குநரும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார்.[3] இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் செல்வாக்குமிக்க நடிகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர்,[4][5] இந்தியத் திரைப்படங்களின் சார்லி சாப்ளின் என்று குறிப்பிடப்படுகிறார்.[6][7][8][9]
இளமை வாழ்க்கை
[தொகு]கபூர் குடும்பத்தைச் சேர்ந்த பிரிதிவிராசு கபூரின் மூத்த மகனாக பெசாவரில் பிறந்த ராஜ் கபூர், பல படங்களை தயாரித்தும் நடித்தும் இருந்தார். இவர் மூன்று தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் 11 பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். சார்லி சாப்ளினால் ஈர்க்கப்பட்ட இவர், ஆவாரா (1951) மற்றும் ஸ்ரீ 420 (1955) போன்ற படங்களில் தி டிராம்ப் படக்கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்தார்.[10][11] கான் திரைப்பட விழாவில் இவரது "ஆவாரா" (1951). "பூட் போலிஷ்" (1954) ஆகிய படங்கள் பால்மே டி ஓர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டன.[12]|group=upper-alpha}}[13] ஆவாராவில் இவரது நடிப்பு டைம் பத்திரிகையின் எல்லா காலத்திலும் சிறந்த பத்து நடிப்புகளில் ஒன்றாக பட்டியலிட்டது. இவரது திரைப்படங்கள் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்த்தன. குறிப்பாக ஆசியா மற்றும் ஐரோப்பாவில் இவருக்கு ஏராளமான இரசிகர்கள் இருந்தனர்.
ஆசியா, மத்திய கிழக்கு, கரீபியன், ஆப்பிரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சில பகுதிகளில் இவரது திரைப்படங்கள் உலகளாவிய வணிக ரீதியான வெற்றிகளைப் பெற்றன.[14] கலைகளுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1971 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருதை வழங்கி கௌரவித்தது.[15] திரைப்படத் துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகெப் பால்கே விருது 1988 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இவருக்கு வழங்கப்பட்டது.
தொழில் வாழ்க்கை
[தொகு]தனது பத்து வயதில், ராஜ் கபூர் முதல் முறையாக 1935 ஆம் ஆண்டு இன்குலாப் என்ற இந்தித் படத்தில் தோன்றினார்.[16]
1947 ஆம் ஆண்டில் கிதார் சர்மாவின் காதல் நாடகமான நீல் கமல் மூலம் பேகம் பாரா மற்றும் மதுபாலாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[17] இந்த படம் திரையரங்க வசூலில் ஓரளவு வெற்றியைப் பெற்றது. ஆனால் இவரது பிற வெளியீடுகளான ஜெயில் யாத்ரா, தில் கி ராணி மற்றும் சித்தோர் விஜய் ஆகியவை சரியாக ஓடவில்லை.[18]
1948 ஆம் ஆண்டில், இவர் ஆர். கே. பிலிம்ஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, இசை நாடகமான ஆக் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதில் இவர் நர்கிசு, பிரேம்நாத் மற்றும் காமினி கௌஷல் ஆகியோராகும் நடித்திருந்தார்.[19][20] இத்திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[21]
ஒரு நடிகராக இவரது பிற்காலப் படங்களான அரவுண்ட் தி வேர்ல்ட் (1966) மற்றும் சப்னோன் கா சௌதாகர் (1968) ஆகியவை தோல்வியடைந்தன. 1970 ஆம் ஆண்டில், மேரா நாம் ஜோக்கர் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தார். இதுவும் திரையரங்க வசூலில் படுதோல்வியடைந்தது. இதனால் இவரது தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனம் கிட்டத்தட்ட மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பின்னர் இந்த படம் பின்னர் இரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. மேலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட படமாக அங்கீகரிக்கப்பட்டது. [22]
அடுத்த ஆண்டு இவர் தனது மகன் ரந்தீர் கபூரின் குடும்ப நாடகமான கல் ஆஜ் அவுர் கல் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த படம் கபூர் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை ஒன்றிணைத்தது. பிருத்விராஜ் கபூர், ராஜ் கபூர் மற்றும் ரந்தீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். அதே போல் பின்னாளில் ரந்தீர் கபூரை மணந்த பபிதாவும் இதில் நடித்திருந்தார். ரந்தீர் இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். 1973 ஆம் ஆண்டில், தனது மகன் ரிசி கபூரை நாயகனாகக் கொண்டு பாபி என்னும் திரைப்படத்தை தயாரித்து இயக்கி இரண்டாவது மகனின் தொழில் வாழ்க்கையைத் துவக்கி வைத்தார். இது மிகப் பெரிய வெற்றி அடைந்தது மட்டும் அல்லாமல் பின்னாளில் மிகவும் பிரபல நடிகையாக விளங்கிய டிம்பிள் கபாடியா இதில்தான் அறிமுகமானார். இப்படம் பதின்வயதினர் காதலைச் சித்தரித்த புதிய தலைமுறைக்கான முதல் படமாகவும் இது விளங்கியது. இந்தப் படத்தில் டிம்பிள் அணிந்த மிகக் குறுகலான நீச்சலுடை அந்த நாளைய இந்தியத் திரைப்படங்களில் மிகவும் தனித்தன்மையுடன் விளங்கியது. அதன் பிறகு அவர் திரைப்படங்களில் குணசித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்கலானார். திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் இயக்குவதிலும் கவனம் செலுத்தலானார்.
1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் முற்பகுதியிலும் பெண் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்களைத் தயாரித்து இயக்கினார். சீனத் அமானுடன் சத்யம் சிவம் சுந்தரம் (1978) , பத்மினி கோலாபுரேவுடன் பிரேம் ரோக் (1982) , மற்றும் மந்தாகினியுடன் ராம் தேரி கங்கா மைலி (1985) ஆகியவை. 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் முற்பகுதியிலும் இவர் குறைவான படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் நௌக்ரி (1978) படத்தில் ராஜேஷ் கன்னாவுடன் ஒரு குறிப்பிடத்தக்க துணை வேடத்திலும், அப்துல்லா (1980) படத்தில் சஞ்சய் கானுடன் பெயரளவிலான கதாபாத்திரத்திலும் நடித்தார். 1979 ஆம் ஆண்டில் 11 வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் நடுவர் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[23] ராஜ் கபூர் முக்கியமான ஒரு வேடத்தில் கடைசியாகத் தோன்றியது வக்கீல் பாபு (1982) என்னும் திரைப்படத்தில்தான். கிம் என்று பெயரிடப்பட்டு 1984வது ஆண்டு வெளியான பிரித்தானிய தொலைக்காட்சிக்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு படத்தில் அவர் கௌரவ வேடம் ஏற்றிருந்தார். இதுவே இவர் இறுதியாக நடித்த வேடம்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]1946 மே 12 அன்று ராஜ் கபூர் கிருஷ்ணா மல்கோத்ரா என்பவரை மணந்தார்.[24]
1940கள் மற்றும் 1950களில் திருமணமான ஆணாக இருந்தபோதிலும், புகழ்பெற்ற நடிகை நர்கிசுடன் கபூர் நீண்டகால காதல் உறவைக் கொண்டிருந்தார். இருப்பினும் இருவரும் இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை.[25] ஆவாரா, ஸ்ரீ 420 உள்ளிட்ட பல படங்களில் இவர்கள் ஒன்றாக நடித்தனர். சங்கம் திரைப்படத்தில் உடன் நடித்த வைஜெயந்திமாலாவுடனும் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
மரணம்.
[தொகு]ராஜ் கபூர் தனது பிற்காலங்களில் ஈழை நோய் காரணமாக அவதிப்பட்டார். 1988 ஆம் ஆண்டில் தனது 63 வயதில் இந்த நோய் தொடர்பான சிக்கல்களால் இறந்தார்.[26] இறக்கும்போது ஹென்னா (ஓர் இந்திய-பாக்கித்தானி காதல் கதை) என்ற ஒரு திரைப்படம் தொடர்பாகப் பணி புரிந்து கொண்டிருந்தார். பிறகு இந்தத் திரைப்படம் இவரது மகன் ரந்தீர் கபூரால் முடிக்கப்பட்டு 1991வது வருடம் திரையிடப்பட்டு மிகப் பெரும் வெற்றியடைந்தது.
கௌரவம்
[தொகு]இவரை கௌரவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறையால் 14 டிசம்பர் 2001 அன்று ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மார்ச் 2012 இல் மும்பையின் பாந்த்ராவிலுள்ள ஒரு நடைபாதையில் இவரது பித்தளை சிலை திறந்து வைக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனம் தனது கூகுளின் கேலிச்சித்திரத்தில் இவரது 90 வது பிறந்த நாளை நினைவுகூர்ந்தது.[27]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chaudhuri, Shantanu Ray. "Raj Kapoor's daughter who sparked a kitchen revolution with Niky Tasha". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.
- ↑ "Did you know that Raj Kapoor's real name was 'Ranbir' Raj Kapoor?". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/did-you-know/did-you-know-that-raj-kapoors-real-name-was-ranbir-raj-kapoor/articleshow/64064075.cms.
- ↑ *"Raj Kapoor and the Golden Age of Indian Cinema". hcl.harvard.edu. 19 February 2015. Archived from the original on 18 January 2018.
- Shrivastava, Anuradha (14 December 2016). "Happy Birthday Raj Kapoor, the greatest 'Showman' of Indian cinema". indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ * [1]
- ↑ *Chatterjee, Prerna (14 December 2018). "Raj Kapoor, The Greatest Showman of Indian Cinema". The Print. https://theprint.in/features/raj-kapoor-the-greatest-showman-of-indian-cinema/163297/.
- "Remembering The Greatest Showman of Indian Cinema – Raj Kapoor". Saregama Blog (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-12-14. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.*Singh, Onkar. "Remembering Indian cinema's greatest showman". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
- ↑ Mathur, Megha (2015-04-16). "From Raj to Ranbir Kapoor: Charlie Chaplin's Best Desi Avatars". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
- ↑ "Raj Kapoor's Birth Anniversary: 5 Memorable films of the Actor-director". News18 (in ஆங்கிலம்). 2020-12-14. பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
- ↑ "How original is Bollywood ?". Rediff.com. https://www.rediff.com/movies/2002/oct/31bolly.htm&ved=2ahUKEwj7yKn89LL0AhWBF4gKHe4bA7Q4ChAWegQIAhAB&usg=AOvVaw2q-_izNePDxsYuy4xt3BXY.
- ↑ "Raj Kapoor | Indian actor and director | Britannica". britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
- ↑ "Remembering Raj Kapoor, the showman of Indian Cinema, on his 92nd Birth Anniversary". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
- ↑ Viking, Nasreen Munni Kabir; Publisher; Rs 499, Penguin Books India; Price. "When Waheeda sat on Raj". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Happy Birthday Raj Kapoor: The best films of the awaara hero of Bollywood". 14 December 2016.
- ↑ "HBD RK". India Today. 14 December 2016.
- ↑ "What Made Raj Kapoor Russia's Favourite Comrade?". 8 June 2021.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "5 Facts About The Iconic Raj Kapoor Worth Revisiting". 2 June 2023.
- ↑ Viplava, Vinoda (2013-01-01). Hindi Cinema Ke 150 Sitare (in இந்தி). Prabhat Prakashan. p. 1893. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81063-71-2.
- ↑ "The eventful 1947 was a breakthrough year for Dilip Kumar, Raj Kapoor and Indian cinema". 5 April 2023.
- ↑ "Aag (1948)". அழுகிய தக்காளிகள்.
- ↑ Singh, Kushwant (6 November 1976). "Screen-Struck India". The Emporia Gazette: p. 2. https://www.newspapers.com/clip/1396924/screenstruck_india_kushwant_singh/.
- ↑ "Aag (1948)". 22 July 2010. https://www.thehindu.com/features/cinema/Aag-1948/article16206193.ece.
- ↑ "How 'Misunderstood Classic' Mera Naam Joker Wrecked Raj Kapoor and then". 6 May 2023.
- ↑ "11th Moscow International Film Festival (1979)". MIFF. Archived from the original on 3 April 2014. பார்க்கப்பட்ட நாள் 14 January 2013.
- ↑ Pradhan, Bharathi S. (13 December 2009). "Bye bye, Bina". The Telegraph (Calcutta, India) இம் மூலத்தில் இருந்து 11 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120911143821/http://www.telegraphindia.com/1091213/jsp/7days/story_11857115.jsp.
- ↑ Patel, Bhaichand (19 November 2007). "Clangorous Liaisons". Outlook India.
- ↑ "Remembering Indian cinema's greatest showman". movies.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 22 October 2010.
- ↑ "Raj Kapoor movies featured in Google doodle as it celebrates his 90th birth anniversary". 14 December 2014. Archived from the original on 14 December 2014.
நூற்பட்டியல்
[தொகு]- Nanda, Ritu (2002). Raj Kapoor: Speaks. Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-04952-3.
- Bruzzi, Stella; Gibson, Pamela Church (2000). Fashion Cultures: Theories, Explorations, and Analysis. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-20685-3.
- Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1994). Encyclopedia of Indian Cinema. London: British Film Institute; New Delhi: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-579-58146-6.
- Kishore, Valicha (1988). The Moving Image: A study of Indian cinema. Hyderabad: Orient Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-861-31681-6.