பபிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2001இல் பபிதா தனது மகளுடன் (இடது)
பிறப்பு20 April 1947
(age 71)
மும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1966–1973
பெற்றோர்ஹரி சிவ்தாசினி
பார்பரா சிவ்தாசினி
வாழ்க்கைத்
துணை
ரண்தீர் கபூர் (m. 1971)
பிள்ளைகள்2 (கரிஷ்மா மற்றும் கரீனா)
உறவினர்கள்பார்க்க கபூர் குடும்பம்

பபிதா (Babita) முன்னாள் நடிகையான இவர் பபிதா ஹரி சிவ்தாசானி என்ற பெயரில் பிறந்தவர், அவரது திருமணப் பெயர் "பபிதா கபூர்", சிந்தி இனத்தை சார்ந்தவர் ஆவார், மற்றும் பிரிட்டீஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர், இந்தி மொழி திரைப்படங்களில் தோன்றியுள்ளார். நடிகர் ஹரி சிவ்தாசினியின் மகள், அவரது சமகால நடிகை சாதனா சிவ்தாசனியின் முதல் உறவினர் ஆவார் அவரது முதல் வெற்றிகரமான படம் படமான "தஸ் லாக்" (1966), ஆனால் அது "ராஸ்" (1967), ராஜேஷ் கன்னா க்கு எதிரான காதல் திரைப்படம், அது அவருக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தது.

1966 ஆம் ஆண்டு முதல் 1973 வரை, அவர், "தஸ் லாக்" (1966), "ஃபர்ஸ்" (1967), "ஹசீனா மான் ஜாயேகி" , "கிஸ்மத்" (1968), "ஏக் ஸ்ரீமான் ஏக் ஸ்ரீமதி" (1969), "டோலி" (1969), "கல் ஆஜ் அவுர் கல்" (1971) மற்றும் "பன்பூல்" (1971) போன்ற பல படங்களில் முன்னணி கதாநாயகியாக பதினைந்து திரைப்படங்களில் நடித்தார். 1971இல் நடிகர் ரண்தீர் கபூருடனான தனது திருமணத்தைத் தொடர்ந்து 1972இல் வெளி வந்த " ஜீத்" மற்றும் "ஏக் ஹசினா தோ தீவானா" ஆகிய இரண்டுத் திரைப்ப்படங்களில் தோன்றியுள்ளார். அதைத் தொடர்ந்து வெளியான "சோனே கே ஹத்" (1973) தோல்வி அடைந்ததும்,அவர் திரைப்பட வாழ்க்கையை விட்டு வெளியேற முடிவு செய்தார். இந்த தம்பதியருக்கு திரைப்பட நடிகைகளான கரிஷ்மா மற்றும் கரீனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

பின்னணி[தொகு]

பபிதா பாக்கித்தானில் இருந்து பகிர்வுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த இந்து மதத்தைச் சார்ந்த நடிகர் ஹரி சிவதாசனிக்கும்,பிரித்தானிய கிறிஸ்தவ தாயான, பார்பரா சிவ்தசானிக்கும் மகளாக மும்பையில் பிறந்தார். அவரது சகோதரி மீனா அத்வானி, "பவர்மாஸ்டர் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பவர் மாஸ்டர் டூல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். [1] சமகாலத்திய நடிகையான சாதான சிவ்தாசினி அவரது முதல் உறவினர் ஆவார்.[2]

சொந்த வாழ்க்கை[தொகு]

1971 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி ரண்தீர் கபூரை மணந்தார்.[3] இந்த தம்பதியருக்கு திரைப்பட நடிகைகளான கரிஷ்மா மற்றும் கரீனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். [4][5][6] அவர் மற்றும் ரண்தீர் பல ஆண்டுகளாக தனித்தனி வீடுகளில் தங்கியிருந்தார்கள், அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்ட போதிலும், விவாகரத்து செய்ய விரும்பவில்லை. பல ஆண்டுகளாக தனியாக வாழ்ந்த பிறகு 2007 இல் இந்த ஜோடி ஐக்கியப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Saif to join girlfriend Kareena and her family for midnight mass". Mid-Day. 23 December 2008 இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150701223912/http://archive.mid-day.com/entertainment/2008/dec/231208-Saif-Ali-Khan-Kareena-Kapoor-Mt-Mary-Babita-Karisma-Shivdasani-Christmas-Samaira.htm. பார்த்த நாள்: 1 July 2015. 
  2. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/I-dont-acknowledge-Babita-Sadhana/articleshow/26720515.cms
  3. 3.0 3.1 Monika Rawal Kukreja (25 April 2017). "Why should I want to divorce Babita?’ asks Randhir Kapoor about his estranged wife". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130811185410/http://articles.timesofindia.indiatimes.com/2010-02-24/news-interviews/28134773_1_junior-nawab-kareena-kapoor-rujuta-diwekar. பார்த்த நாள்: 22 April 2017. 
  4. Meena Iyer (24 February 2010). "Kareena: Yes, I eat! – Times Of India". Articles.timesofindia.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130811185410/http://articles.timesofindia.indiatimes.com/2010-02-24/news-interviews/28134773_1_junior-nawab-kareena-kapoor-rujuta-diwekar. பார்த்த நாள்: 16 October 2012. 
  5. "Kareena, Saif at St Andrew’s Church in Mumbai – Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 26 December 2011 இம் மூலத்தில் இருந்து 2013-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131217230524/http://articles.timesofindia.indiatimes.com/2011-12-26/bollywood/30557019_1_saif-ali-khan-midnight-mass-kareena-kapoor. 
  6. "Kareena, family and friends go to midnight mass at St Andrews". Mid-day.com. 26 December 2008. http://www.mid-day.com/entertainment/2008/dec/261208-Karisma-Kareena-Kapoor-St-Andrew-Mt-Mary-Babita-Saif-Ali-Khan-Amrita-Arora-Shakeel-Ladak-Dino.htm. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Babita
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பபிதா&oldid=3561857" இருந்து மீள்விக்கப்பட்டது