வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வசூல் ராஜா MBBS
இயக்கம்சரண்
தயாரிப்புஜெமினி பிலிம்ஸ்
வசனம்கிரேசி மோகன்
இசைபரத்வாஜ்
நடிப்புகமல்ஹாசன்
சினேகா
பிரபு
பிரகாஷ்ராஜ்
நாகேஷ்
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு12 ஆகஸ்ட் 2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வசூல் ராஜா MBBS 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், நாகேஷ், மாளவிகா போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்தித் திரைப்படமான முன்னாபாய் எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மறு தயாரிப்பாகும்.[1]

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாபாத்திரம்
கமல்ஹாசன் ராஜாராமன் (ராஜா / வசூல் ராஜா)
சினேகா ஜானகி விஸ்வநாத் (பாப்பு)
பிரகாஷ் ராஜ் விஸ்வநாத்
பிரபு வட்டி
கிரேசி மோகன் மார்கபந்து / மார்க்ஸ்
ஜெயசூர்யா ஜாகீர்
நாகேஷ் ஸ்ரீமன் வெங்கட்ராமன், ராஜாவின் தந்தை
ரோகினி ஹட்டங்காடி கஸ்தூரி, ராஜாவின் அம்மா
கருணாஸ் அமித்
மாளவிகா பிரியா
நிதின் சத்யா நீலகண்டன்
ரகசியா "சீனா தானா" பாடலில் சிறப்பு தோற்றம்

பாடல்கள்[தொகு]

சரண் இயக்கிய இத்திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியவை. 2004 ஆவது ஆண்டில் சூலை மாதத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகின.[2]

எண் பாடல் பாடகர்கள் நீளம்
1 "காடு திறந்தே" ஹரிஹரன், சாதனா சர்கம் 5.24
2 "கலக்கப்போவது யாரு" கமல்ஹாசன், சத்யன் 4.37
3 "லவ் பண்ணுடா" கமல்ஹாசன் 5.13
4 "பத்துக்குள்ளே நம்பர்" கிருஷ்ணகுமார் குன்னத், ஸ்ரேயா கோஷல் 5.19
5 "சகலகலா டாக்டர்" பரத்வாஜ் 4.31
6 "சீனா தானா" கிரேஸ் 4.38

வெளியீடு[தொகு]

உலகம் முழுதும் 285 திரையரங்குகளில் வெளியான இப்படம் சுமார் 400 மில்லியன் இந்திய ரூபாய்களை வசூல் செய்து சாதனை படைத்தது.[3] உலகம் முழுவதும் சுமார் 10 மில்லியன் பார்வையாளர்கள் இப்படத்தை பார்த்துள்ளனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]