ஜனா
| ஜனா | |
|---|---|
| இயக்கம் | சாஜி கைலாஸ் |
| தயாரிப்பு | எம். காஜா மொகதீன் கே. ஆயிசா |
| கதை | பி. உன்னிகிருஷ்ணன் |
| இசை | பாடல்கள்: தினா பின்னணி இசை சி. இராஜாமணி |
| நடிப்பு | அஜித் குமார் சினேகா சித்திக் |
| ஒளிப்பதிவு | இராஜீவ் இரவி |
| படத்தொகுப்பு | எல். பூமிநாதன் |
| கலையகம் | ரோஜா கம்பைன்ஸ் |
| வெளியீடு | 1 மே 2004 |
| ஓட்டம் | 168 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஜனா (Jana) 2004-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஷாஜி கைலாஸ் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமார், கதாநாயகியாக சினேகா, முன்னணிக் கதாபாத்திரத்தில் ரகுவரன், ராதாரவி, கருணாஸ், ஸ்ரீவித்யா நடித்திருந்தனர்.
கதைச் சுருக்கம்
[தொகு]கிராமத்தில் வாழ்ந்து வரும் ஜனா (அஜித்), அங்கே வாழும் மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார். அங்கு நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கிறார். இதனால் அவரைச் சுற்றிலும் பல எதிரிகள் உருவாகுகின்றனர். அதற்கெல்லாம் ஜனா பொறுமையாக இருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு ஜனாவின் முந்தைய வாழ்க்கையை அறிய முடிகிறது.
மும்பையில் பிரபல இரவுடியான ஜனா அங்கே உள்ள அனைத்து இரவுடிகளும் பார்த்துப் பயப்படும் அளவுக்கு பயங்கரமாக இருக்கிறார். அங்கே பந்தாரியைக் கொன்று விட்டு தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு கிராமத்தில் நல்லவராக வாழ்கிறார்.
நடிகர், நடிகையர்
[தொகு]- அஜித் குமார் - ஜனார்த்தனன் "ஜனா"
- சித்திக் - பந்தரி
- சினேகா - மணிமேகலை
- மனோஜ் கே. ஜெயன் - இந்தியக் காவல் பணி, ஜனாவின் அண்ணன்
- ரகுவரன் - ஜனாவின் தந்தை
- ஸ்ரீவித்யா - ஜனாவின் தாய்
- ராதாரவி - சங்கரபாண்டி
- சத்தியப்பிரியா - மகாலட்சுமி
- பிந்து பணிக்கர் - ஜனாவின் தங்கை
- விஜயன் - சலீம் பாய்
- இளவரசு - ஜனாவின் மச்சான்
- இலதா - ஜனாவின் அத்தை
- மணிவண்ணன் - மணிமேகலையின் மாமா
- சிந்து - தெய்வானை
- மனோரமா - மணிமேகலையின் பாட்டி
- கருணாஸ் - டப்பா
- பாபுராசு - சின்னபாண்டி
- வினு சக்ரவர்த்தி - சட்டமன்ற உறுப்பினர்
- ராசன் பி. தேவ் - அமைச்சர்
- டெல்லி கணேஷ் - சாமிநாதன்
- பொன்னம்பலம் - காவல் ஆய்வாளர்
- ரியாஸ் கான் - பந்தரியின் தம்பி
- வையாபுரி - ஜனாவின் கையாள்
- தியாகு - பாலு
- இரவிராஜ் - விடுதி உரிமையாளர் [1]:1:20:00
- ஜப்பான் குமார் ("தகதிமி தகதிமி பாடலில் காட்சியில் வருபவர்")[1]:12:40
தயாரிப்பு
[தொகு]இத்திரைப்படம் 2002 -ஆம் ஆண்டின் தொடக்கத்தில் "திருடா" என்னும் பெயரில் அறிவிக்கப்பட்டது. இதில் அஜித்குமாருடன் நடிகை திரிஷா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் மற்ற திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் இத்திரைப்படத்தில் நடிக்க இயலவில்லை.[2] அதற்குப் பின்னர் "ஜனா" என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திசம்பர் 2002-இல் தொடங்கியது.[3][4] இத்திரைப்படத்தில் திரிஷாவுக்கு பதிலாக நடிகை சினேகா கதாநாயகியாக நடித்தார்.[5]
வெளியீடு
[தொகு]இத்திரைப்படத்தின் கதாநாயகன் அஜித் குமார் தனது பணியைச் சிறப்பாக செய்திருந்தாலும் இத்திரைப்படத்தின் கதையானது முன்னர் தமிழில் வெளியான "நாயகன், பாட்ஷா திரைப்படங்களுடன் ஒத்து இருப்பதாக அறியப்பட்டது.[6][7][8]
பின்னர் இத்திரைப்படம் தெலுங்கில் ரௌடி டான் என மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதற்குப் பின்னதாக மெயின் ஹூன் சோல்சர் என மொழிமாற்றம் செய்யப்பட்டு குறுந்தகட்டில் வெளியானது.
பாடல்கள்
[தொகு]ஆறு பாடல்கள் உள்ள இத்திரைப்படத்திற்கு தீனா இசையமைத்திருந்தார்.
| எண் | பாடல் | பாடியோர் |
|---|---|---|
| 1 | "ஒரு வானமாய்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
| 2 | "தித்தித்திடவே" | பாம்பே ஜெயஸ்ரீ |
| 3 | "பொதுவா பலருக்கு" | கார்த்திக், அனுராதா ஸ்ரீராம் |
| 4 | "தகதிமி தகதிமி" | திப்பு |
| 5 | "பூச்சாண்டி வந்துட்டான்" | சுனிதா சாரதி |
| 6 | "கொஞ்சம் உறவினையும்" | சங்கர் மகாதேவன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Jana (motion picture). Roja Combines. 2004 – via சன் நெக்ட்ஸ்.
- ↑ "www.ajithkumar.fr.fm". www.ajithkumar.fr.fm. Retrieved 2012-08-06.
- ↑ "Movies: The Ajith Interview". rediff.com. 2002-12-21. Retrieved 2012-08-06.
- ↑ "www.ajithkumar.fr.fm". www.ajithkumar.fr.fm. Retrieved 2012-08-06.
- ↑ "www.ajithkumar.fr.fm". www.ajithkumar.fr.fm. Retrieved 2012-08-06.
- ↑ "AllIndianSite.com - Jana - It's All About movie". Kollywood.allindiansite.com. Archived from the original on 2012-05-11. Retrieved 2012-08-06.
- ↑ "Unleashed Entertainment in Tamil Cinema". Behindwoods.com. Retrieved 2012-08-06.
- ↑ "Jana". The Hindu. 2004-05-07. Archived from the original on 2012-11-10. Retrieved 2012-08-06.