சுசிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுசிமா (Susima) (கி.மு.304 - கி.மு. 270) இவர் மெளரியப் பேரரசின் இளவரசரும், இரண்டாம் மெளரியப் பேரரசரான பிந்துசாரரின் மூத்த மகன் மற்றும் பிந்துசாரரின் மரபுரிமையான வாரிசும் ஆவார். பேரரசர் பிந்துசார்ருக்கு அடுத்ததாக சிம்மாசனத்தை அலங்கரிக்க இருந்தார். [1] ஆனால், இளைய ஒருவழிச்சகோதரனான அசோகரால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்பு அசோகர் மூன்றாம் மெளரியப் பேரரசர் ஆனார்.

பிறப்பு மற்றும் குடும்பம்[தொகு]

சுசிமா இரண்டாம் மெளரியப் பேரரசர் பிந்துசாரரின் மூத்த மகனாவார். அசோகரின் தாயாரான சுபத்ராங்கியின் சக்களத்தி அரசியாக சுசிமாவின் தாயார் இருந்தார். [2] பிந்துசாரருக்கு அசோகரை விட சுசிமாவின் மீதே விருப்பம் இருந்தது.

நிர்வாகம்[தொகு]

சுசிமா தட்சசீலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அசோகர் உஜ்ஜைனிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். சுசிமாவின் அதிகாரிகளால் மக்கள் ஏராளமான துன்பத்திற்கு ஆளாகினர். அதனால், மக்கள் சுசிமாவிற்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். அசோகர் தட்சசீலத்திற்குச் சென்ற போது புரட்சியாளர்கள் பரிசுகளுடன் வரவேற்றுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, Upinder (2009), A history of ancient and early medieval India : from the Stone Age to the 12th century (3rd impr. ed.), New Delhi: Pearson Longman, p. 331, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131716779
  2. Gupta, Subhadra Sen (2009). "Taxila and Ujjaini". Ashoka. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8184758073.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசிமா&oldid=2772099" இலிருந்து மீள்விக்கப்பட்டது