உள்ளடக்கத்துக்குச் செல்

உல்லாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உல்லாசம்
இயக்கம்ஜே. டி. ஜெரி
தயாரிப்புஅமிதா பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட்
கதைஜே. டி. ஜெரி
வசனம்பாலகுமாரன்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புஅஜித் குமார்
விக்ரம்
ரகுவரன்
மகேஷ்வரி
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
வெளியீடுமே 23, 1997
நாடு இந்தியா
மொழிதமிழ்

உல்லாசம் (Ullaasam) 1997ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்துள்ளனர். அ.ப.க.லி நிறுவனம் தயாரித்த இந்தத் திரைபடத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் விக்ரம் மற்றும் ரகுவரன் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்[தொகு]

ரகுவரனின் மகன் விக்ரம், எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் அஜித் இவர்கள் நால்வருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டமே இத்திரைப்படத்தின் கதையாகும். எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகனான அஜித், அவர்களது எதிர்வீட்டில் இருக்கும் உள்ளூர் தாதாவான ரகுவரன் மேலும் அவர் செய்யும் ரவுடித்தனங்களின் மேலும் ஈர்ப்பு ஏற்படுகிறது. அதனால் ரகுவரனுடன் இணைந்து அஜித்தும் ரவுடி செயல்களில் ஈடுபடுகிறார். அஜித்தின் தந்தையான எஸ். பி. பாலசுப்பிரமணியம் இதனை எவ்வளவோ கண்டித்தும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரகுவரனின் மகனான விக்ரமோ அமைதியாக நல்வழியில் வாழ விரும்புகிறார். எனவே விக்ரமை தனது மகனாக நினைத்து தன்னுடன் வளர்க்கிறார். சிறப்பாக பாடல்களைப் பாடும் விக்ரமும் சிறப்பாக நடனம் ஆடுவதில் விருப்பம் உள்ளவரான அஜித்தும் ஒரே கல்லூரியில் பயில்கிறார்கள். அதே கல்லூரியில் பயிலும் மகேஷ்வரியை அவர்கள் இருவருமே விரும்புகிறார்கள். ஆனால் மகேஷ்வரியோ அஜித்தை விரும்புகிறார். இந்நிலையில் விக்ரமின் காதலைப் பற்றி அறிந்து கொள்ளும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் விக்ரமுக்காக காதலை விட்டுத் தருமாறு தனது மகன் அஜித்திடம் வேண்டுகிறார். அஜித்தும் தனது காதலை விக்ரமுக்காக தியாகம் செய்கிறார். இறுதியாக மகேஷ்வரிக்கு யாருடன் திருமணம் நடந்தது என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

நடிகர் அமிதாப் பச்சனின் படத்தயாரிப்பு நிறுவனமான அமிதாப் பச்சன் பிலிம் கார்ப்பரேசன் தயாரித்த முதல் தமிழ் திரைப்படமான இதில் அஜித் குமார் மற்றும் விக்ரம் உடன் கதாநாயகியாக இணைந்து நடிக்க, நடிகை ஸ்ரீவித்யாவின் உறவினரான நடிகை மகேஷ்வரியை தேர்வு செய்தனர். ரகுவரன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்ரீதேவி உள்ளிட்ட பிரபல நடிகர்களோடு ஒளிப்பதிவாளராக ஜீவாவும் நடன இயக்குநராக ராஜு சுந்தரமும் பங்கேற்றதால் இத்திரைப்படத்தின் மேலான எதிர்பார்ப்பு அதிகரித்தது.[1] நடிகை குஷ்புவின் சகோதரர் அப்துல்லாவும், நடிகை நக்மாவின் சகோதரியும் தான் இப்படத்தில் நடிப்பதாக இருந்தாலும் அது நடக்காமல் போனது.[2] இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் தமிழ்த் திரைப்படத் துறையில் உள்ள முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன் முத்தே முத்தம்மா எனும் பாடலைப் பாடியுள்ளார்.[3] பெப்சி தொழிலாளர்கள் 1997ல் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால் இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானது.[4] மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு அஜித் குமாருக்கு நடந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சையால் நடனக் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நடிப்பதில் சிரமம் உண்டானதால் இத்திரைப்படம் மேலும் தாமதமானது.[5]

வெளியீடு[தொகு]

உல்லாசம் திரைப்படத்தில் சிறந்த நடிகர்கள் நடித்திருந்தாலும் இத்திரைப்படத்தில் சிறப்பாகச் சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை என விமர்சிக்கபட்டது.[4][6] அஜித் குமார் இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரம் உடன் இணைந்து நடித்ததால் விக்ரம் ரசிகர்களின் அன்பையும் பெற்றார். இத்திரைப்படத்தில் இவர் ஒரு மென்மையான கதாபாத்திரத்தில் தோன்றியதால் இப்படம் வெளியான பிறகு தனக்கு இருக்கும் பெண் ரசிகர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதாக குறிப்பிடுகிறார்.[7]

பாடல்கள்[தொகு]

கார்த்திக் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.[8] இத்திரைப்படத்தின் பாடல்களை கங்கை அமரன், அறிவுமதி, பழனிபாரதி, பார்த்தி பாஸ்கர், மற்றும் அருண் மொழி ஆகியோர் எழுதியுள்ளனர்.

பாடல் பாடியவர்கள் நீளம்
சோ லாரே ஹரிணி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், வெங்கட் பிரபு
இளவேனில் தாலாட்டும் உன்னிகிருஷ்ணன்
கொஞ்சும் மஞ்சள் ஹரிணி, ஹரிஹரன்
முத்தே முத்தம்மா கமல்ஹாசன், சுவர்ணலதா, பவதாரிணி
உல்லாசம் உல்லாசம் ஹரிணி, சுவர்ணலதா, பவதாரிணி
வாலிபம் வாழ சொல்லும் அஜித் குமார், விக்ரம், பவதாரிணி
வீசும் காற்றுக்கு ஹரிணி, உன்னிகிருஷ்ணன்
யாரோ யார்யாரோ இளையராஜா, பவதாரிணி

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.rediff.com/movies/jul/05ulla.htm
  2. http://groups.google.com/group/soc.culture.tamil/browse_thread/thread/b1b2594ae2304d9b/9a23e55dcef6df11?lnk=gst&q=#9a23e55dcef6df11
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-22. பார்க்கப்பட்ட நாள் 2014-08-27.
  4. 4.0 4.1 http://www.rediff.com/movies/1999/jul/06ajit.htm
  5. http://www.rediff.com/movies/1999/sep/15ajit.htm
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-27.
  7. http://www.rediff.com/entertai/2000/mar/27vikram.htm
  8. "நடிகர் மோகனுக்கு கமல் பாடிய பாட்டு... 'பொன்மானைத் தேடுதே'! 36 ஆண்டுகளுக்கு முன்பு கமல் - மோகன் கூட்டணிப் பாடல்!". இந்து தமிழ். 22 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்லாசம்&oldid=4008185" இலிருந்து மீள்விக்கப்பட்டது