உள்ளடக்கத்துக்குச் செல்

பவதாரிணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவதாரிணி
இயற்பெயர்பவதாரிணி
பிறப்பு(1976-07-23)23 சூலை 1976
மதராசு
(தற்போது சென்னை),
தமிழ்நாடு, இந்தியா
இறப்பு25 சனவரி 2024(2024-01-25) (அகவை 47)
கொழும்பு,
மேற்கு மாகாணம், இலங்கை
தொழில்(கள்)பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர்

பவதாரிணி (Bhavatharini, 23 சூலை 1976 – 25 சனவரி 2024) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளரும் ஆவார்.[1] இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார்.[2] இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக் இராசா, யுவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.[3][4]

இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.[5]

தொடக்க வாழ்க்கை

[தொகு]

மதராசு (தற்போது சென்னை) மாநகரில் 23 சூலை 1976 அன்று பிறந்தார் பவதாரிணி. சென்னையில் ரோசரி மாட்ரிக் பள்ளியிலும், சென்னை ஆதார்சு வித்தியாலயம் என்ற மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார்.

பாடல்கள்

[தொகு]
பாடல்திரைப்படம்இசையமைப்பாளர்இணைந்து பாடியவர்கள்
"என் வீட்டுச் சன்னல்"இராமன் அத்துல்லாஇளையராசாஅருண்மொழி[6]
"தாலியே தேவை இல்லை நீ தான்"தாமிரபரணிஉவன் சங்கர் இராசாஅரிகரன்[7]
"மயில் போல"பாரதிஇளையராசா-[8]
"மெர்க்குரி பூவே"புதிய கீதையுவன் சங்கர் ராஜாநிதீசு கோபாலன், போனி சக்கரபோர்த்தி[9]

பாடகராக

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாடல் மொழி இசையமைப்பாளர் உடன் பாடியவர்/கள் குறிப்புகள்
1984மைடியர் குட்டிச்சாத்தான்தித்தித்தேய் தாளம்மலையாளம்இளையராஜா
1990அஞ்சலிசம்திங் சம்திங்தமிழ்
இரவு நிலவு
அஞ்சலி அஞ்சலி
வானம் நமக்கு
மொட்ட மாடி
1995ராசய்யா (திரைப்படம்)மஸ்தானா மஸ்தானா அருண்மொழி (பாடகர்) & எஸ். என். சுரேந்தர்பின்னணிப் பாடகராக அறிமுகம்
1996இரட்டை ரோஜா (திரைப்படம்)உன்னை விடமாட்டேன் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
அலெக்சாண்டர்கார்த்திக் ராஜா அனுபமா, மகாநதி சோபனா, யுவன் சங்கர் ராஜா, எஸ். பி. பி. சரண்
நதியோரம் பி. உன்னிகிருஷ்ணன்
எனக்கொரு மகன் பிறப்பான் (1996 திரைப்படம்)சம் சம் கார்த்திக் ராஜா
மாணிக்கம்சுந்தரரே முழு எஸ். பி. பாலசுப்பிரமணியம்
சந்தானம் தேய்ச்சாச்சி
1997உல்லாசம்முத்தே முத்தம்மா
யாரோ யாரோ
தேடினேன் வந்ததுஆல்ப்ஸ் மழைக்காற்றுசிற்பி
ராமன் அப்துல்லாஎன் வீட்டு ஜன்னல்இளையராஜா
காதலுக்கு மரியாதை (திரைப்படம்)என்னைத் தாலாட்ட ஹரிஹரன்
ஓ பேபி விஜய்
நேருக்கு நேர்துடிக்கிற காதல் (எவர் கண்டார்)தேவா
1998நாம் இருவர் நமக்கு இருவர்நடனகலாராணிகார்த்திக் ராஜா
காதலா! காதலா!மடோனா பாடலா
கிழக்கும் மேற்கும்அக்கா நீ சிரிச்சாஇளையராஜா
பூங்காற்றே
செந்தூரம்ஆலமரம்
கல்யாண கலாட்டாஆதாம் ஏவாள்யுவன் சங்கர் ராஜா
KaliyoonjalKalyaanappallakkil Velippayyanமலையாளம்இளையராஜா
1999பொண்ணு வீட்டுக்காரன்இளைய நிலாவேதமிழ்
டைம்தவிக்கிறேன் தவிக்கிறேன்
மனம் விரும்புதே உன்னைகுட்டிக் குயிலாய்
2000காதல் ரோஜாவேசிரித்தாலே
காக்கைச் சிறகினிலேகாயத்ரி கேட்கும்
Kochu Kochu SanthoshangalPalappoomazhaமலையாளம்
பாரதிமயில் போல பொண்ணு ஒண்ணுதமிழ் பின்னணி பாடகிக்கான தேசிய விருது
கருவேலம்பூக்கள் (திரைப்படம்)பல்லக்கு வந்திருக்கு
இளையவன் (2000 திரைப்படம்)நிலவில் அமுது
2001பிரண்ட்ஸ்தென்றல் வரும் அரிகரன்
வாஞ்சிநாதன்Adi Renduகார்த்திக் ராஜா
Hoo Anthiya Uhoo AnthiyaBelli Chandiranuகன்னடம்
UsirePreethisuve Preethisuveஇளையராஜா
கண்ணா உன்னை தேடுகிறேன்வஞ்சி கொடிதமிழ்
ஆண்டான் அடிமை என்ன என்ன பாட
2002அழகிஒளியிலே தெரிவது Karthik
தமக்கு தமக்கு தம்
என் மன வானில்முத்து முத்து
ரமணாவானம் அதிரவே
சொல்ல மறந்த கதைஏதோ ஒன்னு
ஆல்பம் முட்டைக்குள்கார்த்திக் ராஜா
2003புதிய கீதைமெர்க்குரி பூவேயுவன் சங்கர் ராஜா
பிதாமகன்Kodi Yethi Vaippomஇளையராஜா
கொஞ்சி பேசலாம் கொஞ்சி பேசலாம்
இரகசியமாய் கண்களும் கண்களுமகார்த்திக் ராஜா
திரீ ரோசஸ்அன்பால் உன்னை
ஓ ஓ செக்சி
2004விஷ்வதுளசிவிஷ்வதுளசிம. சு. விசுவநாதன்
2005ஒரு நாள் ஒரு கனவு காற்றில் வரும் கீதமேஇளையராஜா
கரகாட்டக்காரிகாட்டுக் கிளி
அது ஒரு கனாக்காலம்Killi Thattu
பொன் மேகலைAalapanai
PonmudipuzhayorathuNaadaswaram kettoமலையாளம்
ரைட்டா தப்பாThottuviduதமிழ்கார்த்திக் ராஜா
2006அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறதுKanavae Kalaigiratheயுவன் சங்கர் ராஜா
Elaiyudhir Kaalam
தாமிரபரணி (திரைப்படம்)Thaaliyae Thevaiyillai
2007Naalaiya Pozhuthum UnnoduPesa Paraasaசிறீகாந்து தேவா
AnumanaspadamRela Rela Relaதெலுங்குஇளையராஜா
2008உளியின் ஓசைகாலத்தை வென்றதமிழ்
தனம் (2008 திரைப்படம்)கண்ணனுக்கு என்ன
சக்கர வியூகம்இது தான் சக்கரவியூகம்கார்த்திக் ராஜா
2009அழகர் மலைஉன்னை எனக்குஇளையராஜா
கண்ணுக்குள்ளேபாட்டு கேட்க
PaaGumm Summ Gummஇந்தி
2010கோவாஏழேழு தலைமுறைக்கும்தமிழ்யுவன் சங்கர் ராஜா
2011மங்காத்தா (திரைப்படம்)நீ நான்
2012Gundello GodariNanu Neethoதெலுங்குஇளையராஜா
மயிலுYatheதமிழ்
2014 அனேகன் (திரைப்படம்) ஆத்தாடி ஆத்தாடி ஹாரிஷ் ஜெயராஜ் திப்பு & தனுஷ்
2021மாநாடு (திரைப்படம்)Meherezylaaயுவன் சங்கர் ராஜா
2022மாமனிதன்பண்ணப்புரத்துஇளையராஜா, யுவன் சங்கர் ராஜா Credited as Raja Bhavatharini

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ஆர். சபரிராஜ் என்பவரை 3 ஆகத்து 2005 அன்று திருமணம் செய்தார் பவதாரிணி.[4]

மறைவு

[தொகு]

பவதாரிணி கல்லீரல் மற்றும் பித்தப்பைபுற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 47-ஆவது அகவையில் 2024 சனவரி 25 அன்று மாலையில் காலமானார்.[10][11][12][13][14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பவதாரிணி: கடைசி கட்டத்தில் கண்டறியப்பட்ட புற்றுநோய், இலங்கை வந்த ஒரு வாரத்தில் மரணம் - என்ன நடந்தது?", BBC News தமிழ், 2024-01-25, retrieved 2024-07-02
  2. "வைரமுத்து பாடலைப் பாடிய இளையராஜாவின் மகள்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/3625-.html. பார்த்த நாள்: 2 July 2024.
  3. "யுவனுக்கு திருமணம் நடந்தது எனக்கு தெரியாது-கார்த்திக் ராஜா!". தமிழ்த் தார். 2 சனவரி 2015. Archived from the original on 2016-03-05. Retrieved 1 பெப்ரவரி 2015.
  4. 1 2 "Ilayaraja's daughter gets engalged". தி இந்து. August 4, 2005. Archived from the original on December 1, 2016. Retrieved November 30, 2016.
  5. "படங்களுக்கு தேசிய விருது தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்த போராட்டம்: தென்னாட்டுக்கு 26 விருதுகள் கிடைத்தன". மாலை மலர். Retrieved 1 பெப்ரவரி 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Raman Abdullah (1997)". Raaga. Retrieved 1 பெப்ரவரி 2015.
  7. "Thamirabarani (2006)". Raaga. Retrieved 1 பெப்ரவரி 2015.
  8. "இளையராஜாவின் இசை வாரிசுகள்". மாலை மலர். Archived from the original on 2015-09-20. Retrieved 1 பெப்ரவரி 2015.
  9. "Pudhiya Geethai (2003)". Raaga. Retrieved 1 பெப்ரவரி 2015.
  10. "இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்". Daily Thanthi. 25 January 2024. Retrieved 25 January 2024.
  11. "Ilaiyaraaja's daughter and playback singer Bhavatharini dies of cancer". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-01-25.
  12. "Bhavatharini, daughter of musician Ilayaraja, no more". The hindu.
  13. இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்! (இந்துஸ்தான் டைம்ஸ் (தமிழ்) செய்தி)
  14. "இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்". பிபிசி தமிழ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவதாரிணி&oldid=4037110" இலிருந்து மீள்விக்கப்பட்டது