வாலி (தமிழ்த்திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாலி (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வாலி
இயக்கம்எஸ்.ஜே.சூர்யா
தயாரிப்புஎஸ். எஸ். சக்கரவர்த்தி
கதைஎஸ்.ஜே.சூர்யா
இசைதேவா
நடிப்புஅஜித்
சிம்ரன்
ஜோதிகா
விவேக்
பாலாஜி
ஒளிப்பதிவுஜீவா
வெளியீடுதமிழ் மே 1, 1999, கன்னடம் 2001
மொழிதமிழ், கன்னடம்

வாலி (Vaali) ஆம் ஆண்டு வெளிவந்த 1999 தமிழ்த் திரைப்படமாகும். படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்ரனும், ஜோதிகாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இதே திரைப்படம் கன்னடத்தில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு தேவாவின் இசையமைப்பில் உருவாக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் திரையிடப்பட்டு பெங்களூரில் 100 நாட்களுக்கு ஓடி சாதனைபடைத்த படம்.

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இக்கதை இராமாயணத்தில் வரும் சுக்ரீவனின் சகோதரனான வாலியைப் சுக்ரீவனின் மனைவியை வைத்திருப்பது போன்றே இக்காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களைப் பற்றியது. அஜித்குமார் நாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடமேற்றுள்ளார். தேவாவும் சிவாவும் இரட்டைச் சகோதரர்கள். காது கேட்காதவரும் ஊமையுமான தேவா இவர்களில் மூத்தவர். தனது குறைபாடுகளை யாரும் கண்டுபிடிக்காதவாறு செய்வதில் இவர் அனைவரது பாராட்டுகளையும் பெறுவார். விளம்பர நிறுவனத்தில் தலைமைப் பீடத்தில் இருக்கும் தேவா ஒரு பொருளை ஆசைப்பட்டால் அப்பொருளை அடையாமல் விடமாட்டார். அச்சமயம் சிவா விரும்பிய பெண்ணான பிரியா மீது எதிர்பாராத வண்ணம் தேவாவுக்கு காதலிக்கிறார். பின்னர் தேவா தனது தம்பியும் அப்பெண்ணை காதலிப்பதனை அறிந்து கடுங்கோபம் கொள்கின்றார். பல சமயம் பிரியாவை தன் வசம் அடைய முனைந்தும் தோற்றுவிடுகின்றார். ஒரு சமயம் சிவா பணிவிடயமாக வெளியூர் செல்ல நேரிடுகின்றது. இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொள்ளும் தேவா பிரியாவிடம் தான் சிவா என நம்பவைத்து பிரியாவும் சிவாவும் தேனிலவிற்குச் சென்ற வீட்டிற்கு உள் நுழைகின்றார். இதனைத் தெரிந்துகொள்ளும் பிரியா எவ்வாறு தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்றார் என்பதே திரைக்கதை முடிவு.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடியவர்
1 ஜீ பிரியா எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா
2 நிலவைக் கொண்டுவா உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
3 வானில் காயுதே மனோ, அனுராதா ஸ்ரீராம், சூர்யா
4 ஏப்ரல் மாதத்தில் உன்னிகிருஷ்ணன், ஹரிஹரன்
5 சோனா சோனா ஹரிஹரன், அஜித் குமார்

வசூல்[தொகு]

  • 270 நாட்கள் திரையில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • 100 நாட்களிற்கு மேலாக இதன் கன்னட டப்பிங் திரைப்படம் கர்நாடகத்தில் ஓடியது.

வெளியிணைப்புகள்[தொகு]