உள்ளடக்கத்துக்குச் செல்

கானா (இசை ஊடக ஓடை சேவை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானா
உருவாக்குனர்டைம்சு இன்டர்நெட்
வெளியீட்டு நாள்ஏப்ரல் 2010; 14 ஆண்டுகளுக்கு முன்னர் (2010-04)
தளங்கள்
உறுப்பினர்கள் 150 மில்லியன்[1]
வலைத்தளம்gaana.com

கானா (Gaana) இந்தியாவின் மிகப்பெரிய சந்தா அடிப்படையில் வணிக நோக்கில் செயல்படும் இசை ஊடக ஓடை வழங்கும் சேவையாகும், இதில் 200 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர சந்தா பயனர்களைக் கொண்டுள்ளது. இது இந்திய இசைகள், பன்னாட்டு இசைகளை வழங்கும் நோக்கில் ஏப்ரல் 2010 இல் டைம்சு இன்டர்நெட் மூலம் தொடங்கப்பட்டது. இதில் அசாமியம், வங்காளம், போச்புரி, ஆங்கிலம், குஜராத்தியம், இந்தி, கன்னடம், உருது, ஒடியா, மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, மைதிலி, மலையாளம் மற்றும் பிற இந்திய பிராந்திய மொழிகள் உட்பட 21 இந்திய மொழிகளின் இசைகள் இடம்பெற்றுள்ளது.[2]

கானா [3] பயனர்கள் தங்கள் கேட்டல்வரிசைகளைப் பொதுவில் வெளியிட அனுமதிக்கிறது, இதனால் பயனர்களால் பிறரின் கேட்டல்வரிசைகளை பார்க்கவும் விரும்பினால் கேட்கவும் முடியும்.[4] ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோசு போன்ற அனைத்து பிரபலமான இயக்க முறைமைகளில் இதனின் செயலியை பயன்படுத்த முடியும்.[5] கானா செயலியின் விலை இந்தியாவுக்குள் 99 (US$1.20) மாதத்திற்கு என்று தொடங்குகிறது, இந்தியாவிற்கு வெளியே கிடைக்காது. முன்பெல்லாம் செயலி 9 செப்டம்பர் 2022 வரை இலவசமாக கிடைத்தது, தற்போது இதனின் நிதி நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் சந்தாவில் மட்டுமே கானா சேவைகளை வழங்குகிறது.[6] கட்டண பதிப்பு விளம்பரமில்லா இசை, மீவரையொளியில் தரமான இசை ஆகியவற்றை வழங்குகிறது, இணைய இணைப்பற்று பயனர்கள் இருக்கும் வேலையில் பாடல்களைக் கேட்பதற்கு செயலிக்குள் பதிவிறக்கி அனுமதிக்கிறது.

வரலாறு[தொகு]

முதலில் 21 சூன் 2005 இல் Gaana.com என்று ஆள்களப் பெயர் பதிவு செய்யப்பட்டு ஏப்ரல் 2010 இல் தொடங்கப்பட்டது.

கானா.காம் பிப்ரவரி 2013 இல் தென்னிந்திய இசை நிறுவனங்கள் சங்கத்துடன் 79 வெவ்வேறு இசை நிறுவனங்களில் இருந்து இசைக்கான உரிமைகளைப் பெற ஒரு கூட்டமைப்பை உருவாக்கியது. இதன் விளைவாக, கானா.காம் 45 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களின் அணுகல் பெற்றது. இதன் விளைவாக கானா டைம்சு இன்டர்நெட்டிற்கு ஆண்டுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டுகிறது.

மைக்ரோமேக்சு அக்டோபர் 2015 இல் கானா.காம் இன் பங்குகளை வாங்கியது [7]

இந்திய அரசாங்கம் டிக்டோக்கைத் தடைசெய்த பிறகு, 8 சூலை 2020 அன்று கானா ஆட்சாட்சு (HotShots) [8] என்றழைக்கப்படும் ஒரு குறுங்கானொளி தளத்தை அறிமுகப்படுத்தியது. 2022 ஆம் ஆண்டில், கானாவை தன் கைவசப்படுத்த பார்தி ஏர்டெல் டைம்சு இன்டர்நெட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தியது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gaana claims 100 million MAUs, launches video and artists focused products". entrackr.com. 2019-04-24.
  2. www.ETBrandEquity.com. "Prashan Agarwal joins Gaana.com as chief operating officer - ET BrandEquity". ETBrandEquity.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-17.
  3. "Music apps PC download music apps for Windows". Gadgetssai (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-09.
  4. "Gaana.com records 1.4 million unique visitors in launch month". தி எகனாமிக் டைம்ஸ். 2011-08-10. https://economictimes.indiatimes.com/gaana-com-records-1-4-million-unique-visitors-in-launch-month/articleshow/9547760.cms. 
  5. "Gaana on song, new initiative 'Originals' clocks 20 mn streaming in five weeks". The Economic Times. 2017-10-09. https://economictimes.indiatimes.com/magazines/panache/gaana-on-song-new-initiative-originals-clocks-20-mn-streaming-in-five-weeks/articleshow/61007963.cms. 
  6. Kalra, Aditya; Vengattil, Munsif (9 September 2022). "EXCLUSIVE Fighting to survive, Tencent-backed Indian music app Gaana turns to subscriptions". Reuters. https://www.reuters.com/technology/exclusive-fighting-survive-tencent-backed-indian-music-app-gaana-turns-2022-09-09/. 
  7. "Micromax buys stake in Gaana, to integrate app with its smartphones". The Indian Express. http://indianexpress.com/article/technology/tech-news-technology/micromax-buys-stake-in-gaana-to-integrate-app-with-its-smartphones/. 
  8. "Gaana debuts a short video platform HotShots". The Economic Times. https://economictimes.indiatimes.com/mobile/gaana-debuts-a-short-video-platform-hotshots/articleshow/76845790.cms. 
  9. Gurbaxani, Amit (2022-08-02). "Airtel In Serious Talks to Acquire Indian Streamer Gaana". Billboard (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானா_(இசை_ஊடக_ஓடை_சேவை)&oldid=3940300" இலிருந்து மீள்விக்கப்பட்டது