நோர்வே தமிழ்த் திரைப்பட விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா
விளக்கம்சிறந்த திரைப்படம்
நாடுஓஸ்லோ, நோர்வே
முதலில் வழங்கப்பட்டதுதமிழ் (2010)
இணையதளம்http://www.ntff.no/

நோர்வே தமிழ்த் திரைப்பட விழா , (Norway Tamil Film Festival Awards-NTFF) நோர்வேயின் ஓஸ்லோவில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திரைப்பட விழா ஆகும். தமிழ்த் திரைப்படத்துறையில் படம், நடிப்பு, பாட்டு, பாடியவர், இசை, இயக்கம், தொழில் நுட்பம் போன்ற பல பிரிவுகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டி ஊக்குவிப்பதற்காக இவ்விழா நடத்தப்படுகிறது. கவிதை, இசை, பாடல், திரைப்படம் ஆகிய துறைகளில் பிரபலமாக விளங்கும் விஎன் மியூசிக் டிரீம்ஸ் நிறுவனத்தால் இந்த விழா, முதன்முதலாக 2010 ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.[1] உலகத் தமிழ்த் திரைப்படக் கொண்டாட்டமாக இவ்விழா அமைந்துள்ளது.

பரிசுகள்[தொகு]

2011, 2012 ஆம் ஆண்டுகளில் நடந்த இவ்விழாவில் அளிக்கப்பட்ட விருதுகள்:

சிறந்த திரைப்படம்[தொகு]

சிறந்த திரைப்படத்துக்கான விருது 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆண்டு திரைப்படம் தயாரிப்பாளர்
2012 வாகை சூட வா எஸ். முருகானந்தம்
2011 மைனா ஜான் மேக்ஸ்

சிறந்த நடிகர்[தொகு]

சிறந்த நடிகருக்கான விருது 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆண்டு நடிகர் திரைப்படம்
2012 எம். சசிக்குமார் போராளி
2011 வித்தார்த் மைனா

சிறந்த நடிகை[தொகு]

சிறந்த நடிகைக்கான விருது 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆண்டு நடிகை திரைப்படம்
2012 ரிச்சா கங்கோபத்யய் மயக்கம் என்ன
2011 அஞ்சலி அங்காடித் தெரு

சிறந்த துணை நடிகர்[தொகு]

சிறந்த துணை நடிகருக்கான விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆண்டு நடிகர் திரைப்படம்
2012 அப்புக்குட்டி அழகர்சாமியின் குதிரை

சிறந்த துணை நடிகை[தொகு]

சிறந்த துணை நடிகைக்கான விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆண்டு நடிகை திரைப்படம்
2012 தேவதர்சினி மகான் கணக்கு

சிறந்த இசையமைப்பாளர்[தொகு]

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆண்டு இசையமைப்பாளர் திரைப்படம்
2012 இளையராஜா அழகர்சாமியின் குதிரை
2011 ஜி. வி. பிரகாஷ் குமார் மதராசபட்டினம்

சிறந்த பின்னணிப் பாடகர்[தொகு]

சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆண்டு பாடகர் திரைப்படம்
2012 சி. சத்யா எங்கேயும் எப்போதும்

சிறந்த பின்னணிப் பாடகி[தொகு]

சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆண்டு பாடகி திரைப்படம்
2012 சின்மயி வாகை சூட வா

சிறந்த குரல் கொடுப்பாளர்[தொகு]

சிறந்த குரல் கொடுப்பாளருக்கான விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆண்டு கலைஞர் திரைப்படம்
2012 தீபா வெங்கட் மயக்கம் என்ன

நடுவர் சிறப்பு விருது[தொகு]

நடுவர் சிறப்பு விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆண்டு கலைஞர் திரைப்படம்
2012 விஷால் அவன் இவன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-09-01.