பூமராங் (2019 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமராங்
சுவரிதழ்
இயக்கம்ஆர். கண்ணன்
தயாரிப்புஆர். கண்ணன்
கதைஆர். கண்ணன்
இசைராதன்
நடிப்புஅதர்வா
மேகா ஆகாஷ்
இந்துஜா ரவிச்சந்திரன்
சதீஸ்
ஆர். ஜே. பாலாஜி
உபன் படேல்
ஒளிப்பதிவுபிரசன்னா குமார்
படத்தொகுப்புஆர். கே. செல்வா
கலையகம்மசாலா பிக்ஸ்
விநியோகம்ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்
எம் கே ஆர். பீ புரோடக்சன்ஸ்
வெளியீடுமார்ச்சு 8, 2019 (2019-03-08)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூமராங் (Boomerang) என்பது 2019 ஆம் ஆண்டு  தமிழில் வெளியான அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும்.[1] ஆர். கண்ணன் எழுதி, தயாரித்து இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் அதர்வா, மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உபேன் படேல் எதிர்மறையான கதாபாத்திரத்திலும், சதீஸ், ஆர். ஜே. பாலாஜி ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். பிரசன்னா குமார் ஒளிப்பதிவாளராகவும், ஆர்.கே.செல்வா எடிட்டராகவும் பணி புரிந்துள்ளனர். ராதன் இசையமைத்துள்ளார். இத் திரைப்படம் 8 மார்ச் 2019 அன்று வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்[தொகு]

விபத்தொன்றில் சிக்கும் சிவாவின் முகம் சிதைவடைகின்றது. அதே நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சக்தி மூளை கடுமையாக பாதிக்கப்பட்டதால் இறக்கிறார். சிவாவின் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கமைய சக்தியின் தாயாக கருதப்படும் கவுரி திருசெல்வன் (சுஹாசினி மணிரத்தினம்) சக்தியின் முகத்தை முக மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் சிவாவிற்கு பொருத்துவதற்கு அனுமதிக்கிறார். புதிய முகத்தில் தோற்றமளிக்கும் சிவா தனது குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக ஒரு தொழிலை தொடங்க திட்டமிடுகிறார். எதிர்வரும் நாட்களில்  பல சிக்கல்களை எதிர்கொள்ள கொள்கிறார். சில அந்நியர்களால் ஓரிரு முறை தாக்கப்பட்ட பிறகு, சிவாவும் அவரது நண்பர் கோபாலும் ( சதீஷ் ), அவரது முகத்தை மாற்று அறுவை சிகிச்சை பற்றி பலருக்குத் தெரியாததால், பிரச்சனைகள் அவரது முகத்தை குறிவைத்து நடக்கின்றன என்றும்,  அவரை அல்ல என்பதையும் உணர்கிறார்கள். சக்தியை பற்றி அறிந்து கொள்ள கவுரி திருசெல்வனை நாடுகிறார்கள். சிவாவிற்கு முகத்தை தானம் செய்த சக்தி உண்மையில் தனது மகன் அல்ல என்று அவர் கூறுகிறார். மற்றொரு நண்பரிடமிருந்து, சக்தி திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அறிகிறான். சக்தி இருக்கும் இடத்தை அறிய சிவா கோபால் மற்றும் அவரது காதலி ஜிகி ( மேகா ஆகாஷ் ) ஆகியோருடன் திருச்சிக்கு புறப்படுகிறார். சக்தி, சண்முகத்தை (ஆர். ஜே. பாலாஜி) பற்றி மாயாவிடம் (இந்துஜா) இருந்து அறிந்து கொள்கிறார். சக்தி விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுக்கின்றார். அதன் போது எதிர்கொள்ளும் சவால்களை முறியடித்து சக்தியின் இறப்பிற்காக பழிவாங்குவதே மீதிக்கதை....

நடிகர்கள்[தொகு]

 • அதர்வா - சிவாவாகவும், சக்தியாகவும் இரட்டை வேடங்களில்
 • மேகா ஆகாஷ் - ஜிகி
 • இந்துஜா - மாயா
 • சதீஷ் - கோபால்
 • சண்முகம் - ஆர். ஜே. பாலாஜி
 • உபேன் படேல் - சூரஜ்
 • மயில்சாமி
 • ரவி மரியா - கவுன்சிலர் மயில்வாகனம்
 • ராஜேந்திரன் - திரைப்பட தயாரிப்பாளர்
 • ராஜா இளங்கோவன்
 • மாளவிகா அவினாஷ் - சிவாவின் தாய்
 • ஜீவா ரவி - சிவாவின் தந்தை
 • ஷங்கர் சுந்தரம் -  சக்தியின் தந்தை
 • சுஹாசினி மணிரத்தினம் - கவுரி திருசெல்வன்
 • ராம்குமார் கணேசன் - சேனல் உரிமையாளர் ஆகாஷ் 

தயாரிப்பு[தொகு]

அக்டோபர் 2017 ஆம் ஆண்டில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தை இயக்கி தயாரிப்பதாக ஆர்.கண்ணன் அறிவித்தார்.[2] கதாநாயகியாக நடிக்க மேகா ஆகாஷ் கையெழுத்திட்டார்.  உபேன் படேல் திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். திரைப்படத்தில் அதர்வாவின் ஒரு குறிப்பிட்ட தோற்றத்திற்கான வடிவமைப்பாளர்களான ப்ரீதிஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிசோசா ஆகியோர் பணிபரிந்தனர்.[3][4]

வெளியீடு[தொகு]

இத்திரைப்படம் தொழில்துறை அளவிலான வேலைநிறுத்தத்தின் விளைவாக தயாரிப்பு தாமதப்படுவதற்கு முன்பு, 2018 மார்ச் மாதத்திற்குள் 90% நிறைவடைந்தது.[5] இந்த படம் முக்கியமாக சென்னை, அருப்புகோட்டை, விருதுநகர் மற்றும் தேனியில் 45 நாட்கள் படமாக்கப்பட்டது. பூமராங் 8 மார்ச் 2019 அன்று வெளியிடப்பட்டது.[6][7]

இப்படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் ஜீ தமிழிற்கு விற்கப்பட்டு, திரையரங்கில் திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு 2019 ஏப்ரல் 14 இல் திரையிடப்பட்டது.

ஒலிப்பதிவு[தொகு]

ராதனின் இசையமைப்பில் சோனி மியூசிக் இந்தியா வெளியிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]