பட்டாம்பூச்சி (திரைப்படம்)
பட்டாம்பூச்சி | |
---|---|
இயக்கம் | ஏ. எஸ். பிரகாசம் |
தயாரிப்பு | பி. ஸ்ரீநிவாசன் (ஸ்ரீ பிரகாஷ் புரொடக்ஷன்ஸ்) |
கதை | ஏ. எஸ். பிரகாசம் |
இசை | பி. ஸ்ரீநிவாசன் |
நடிப்பு | கமல்ஹாசன் ஜெயசித்ரா |
ஒளிப்பதிவு | ஜெ. ஜி. விஜயம் |
படத்தொகுப்பு | கே. நாராயணன் |
வெளியீடு | பெப்ரவரி 21, 1975 |
நீளம் | 4138 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பட்டாம்பூச்சி (Pattampoochi) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3] இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் பிரேம லீலலு எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 11 டிசம்பர் 1976 அன்று ஆந்திரா மாநிலத்தில் வெளியானது.[4]
நடிகர்கள்[தொகு]
- கமல்ஹாசன் - 'சண்டியர்' சிவா[5][6]
- ஜெயசித்ரா - மீனா
- நாகேஷ் - வடிவேலு
- வி. கே. ராமசாமி - வேதாசலம்
- மனோரமா - குமாரி (சிறப்பு தோற்றம்)
- செந்தாமரை - பாஸ்யம்
- பி. ஆர். வரலட்சுமி
- சண்முகசுந்தரம்
- ரத்னகுமார்
- எஸ். எஸ். சௌந்தர்
தயாரிப்பு[தொகு]
குழந்தை நட்சத்திரமாக நடித்து பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் 1974 ஆம் ஆண்டில் 'கன்னியாகுமரி' என்ற மலையாள படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழில் ஆர். சி. சக்தி இயக்கத்தில் 'உணர்ச்சிகள்' படத்தில் முதன்மை கதாநாயகனாக ஒப்பந்தமானார். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு பிரச்சனையால் அப்படம் வெளியாக தாமதமானது. இதனால், ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் 1975 பிப்ரவரி 21ல் வெளியான 'பட்டாம்பூச்சி' தான் கதாநாயகனாக வெளிவந்த கமலின் முதல் தமிழ் படம் என அறியப்படுகிறது.[7]
பாடல்கள்[தொகு]
பி. ஸ்ரீநிவாசன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
1 | "எத்தனை மலர்கள்" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி | கண்ணதாசன் |
2 | "கனியும் கிளியும்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | புலமைப்பித்தன் |
3 | "மதன காமராஜா" | பி. சுசீலா | |
4 | "பசி எடுக்கும் நேரம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |
5 | "சக்கரை பந்தலில்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தண்ணி கருத்திருச்சு...". தினமலர். 26 டிசம்பர் 2014. http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23290&ncat=19&Print=1. பார்த்த நாள்: 18 மே 2021.
- ↑ "Pattampoochi - Official Tamil Full Movie". Bayshore Records. 24 நவம்பர் 2015. https://youtube.com/watch?v=e-gfD24C4pY. பார்த்த நாள்: 1 செப்டம்பர் 2020.
- ↑ "பழம்பெரும் தயாரிப்பாளர் காலமானார்!". நக்கீரன். 22 மே 2020. https://www.nakkheeran.in/cinema/cinema-news/producer-k-raghunathan-passed-away. பார்த்த நாள்: 28 ஆகஸ்ட் 2020.
- ↑ "Pattampoochi advertisement". ஆந்திரா பத்திரிக்கை: p. 8. 11 டிசம்பர் 1976. http://www.pressacademyarchives.ap.nic.in/newspaperframe.aspx?bookid=10603.
- ↑ "காதலெனும் 'தவறான வார்த்தை' தமிழ் சினிமா மூலம் காவியமான கதை!". ஆனந்த விகடன். 14 பிப்ரவரி 2020. https://cinema.vikatan.com/tamil-cinema/bonding-of-love-with-tamil-cinema. பார்த்த நாள்: 1 செப்டம்பர் 2020.
- ↑ "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/512470-mgr-sivaji-kamal.html. பார்த்த நாள்: 13 சனவரி 2021.
- ↑ "சகலவல்ல நாயகரே! கமல்-60". தினமலர். 6 நவம்பர் 2019 6 நவம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify
|archivedate=
, you must also specify|archiveurl=
. https://m.dinamalar.com/detail.php?id=2404931. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2020.