உள்ளடக்கத்துக்குச் செல்

வெங்கடேஷ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டக்குபாதி வெங்கடேஷ்
Daggubati Venkatesh
சீசீஎல் - கட்டம் மூன்று நிகழ்ச்சியின் துவக்கத்தில் வெங்கடேஷ்.
பிறப்புவெங்கடேஷ் டக்குபாதி
திசம்பர் 13, 1960 (1960-12-13) (அகவை 63)
சென்னை, தமிழ் நாடு, இந்தியா
இருப்பிடம்பிலிம் நகர், ஐதராபாத்து, இந்தியா
மற்ற பெயர்கள்விக்டோரி வெங்கடேஷ்
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
எம். ஐ. ஐ. எஸ்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1986 – தற்சமயம்
பெற்றோர்டி. ராமா நாயுடு டக்குபாதி
ராஜேஸ்வரி டக்குபாதி
வாழ்க்கைத்
துணை
நீராஜா (1985 –தற்போது வரை)
உறவினர்கள்சுரேஷ் பாபு டக்குபாதி (சகோதரர்)
அகினேனி நாகார்ஜூனா (சகோதரியின் முன்னால் கணவர்)
ராணா டக்குபாதி (சகோதரரின் மகன்)
நாக சைதன்யா அக்கினேனி (சகோதரியின் மகன்)

வெங்கடேஷ் டக்குபாதி (ஆங்கில மொழி: Daggubati Venkatesh) என்பவர் இந்தியத் தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஏழு நந்தி விருதுகளையும் நான்கு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் ஏறத்தாழ எழுபது தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

வெங்கடேஷ் டக்குபாதி புகழ்பெற்ற இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான,[1] ராமா நாயுடு டக்குபாதி மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு டிசம்பர் 13, 1960 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவருக்கு சுரேஷ் பாபு டக்குபாதி என்ற ஒரு மூத்த சகோதரரும் லட்சுமி என்கின்ற ஒரு இளைய சகோதரியும் உள்ளார்கள். இவரின் தங்கையை அகினேனி நாகார்ஜூனா 1984ல் மணந்தார், அவர்கள் 1990ல் திருமணமுறிவு பெற்றனர். வெங்கடேஷ் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள டான் போஸ்கோவில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை வர்த்தகப் பட்டம் பெற்றார். தனது முதுகலை வணிக மேலாண்மை பட்டத்தை அமெரிக்காவில் அமைந்துள்ள மாண்டெர்ரி பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[2] படிப்பை முடித்து இந்தியா திரும்பிய இவர் திரைப்பட தயாரிப்பாளராக விரும்பியபோதிலும் தெலுங்கு திரைப்பட நடிகராக மாறினார்.

திரைப்படங்கள்

[தொகு]

2010களில்

[தொகு]

ஆதாரம்

[தொகு]
  1. "ராமா நாயுடுவின் அரசியல் வாழ்க்கை". தி இந்து. 2009-04-13 இம் மூலத்தில் இருந்து 2009-04-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090417062302/http://www.hindu.com/2009/04/13/stories/2009041354990500.htm. பார்த்த நாள்: சூன் 23, 2013. 
  2. "The Leading Celebrity Profile Site on the Net". celebritiesprofile.info. Archived from the original on 2012-06-27. பார்க்கப்பட்ட நாள் சூன் 23, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடேஷ்_(நடிகர்)&oldid=3718213" இலிருந்து மீள்விக்கப்பட்டது