ஹே ராம்
ஹே ராம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கமல்ஹாசன் |
தயாரிப்பு | கமல்ஹாசன் |
கதை | கமல்ஹாசன் |
திரைக்கதை | கமல்ஹாசன் |
வசனம் | கமல்ஹாசன் (தமிழ்) மனோகர் ஷியாம் ஜோஷி (இந்தி) |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஷாருக் கான் ஹேம மாலினி ராணி முகர்ஜி கிரீஷ் கர்னாட் நசிருதீன் ஷா வசுந்தரா தாஸ் வி. எஸ். ராகவன் |
ஒளிப்பதிவு | திரு |
படத்தொகுப்பு | ரேணு சலுஜா |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் |
வெளியீடு | பெப்ரவரி 18, 2000 |
ஓட்டம் | 202 நிமிடம். (தமிழ்) 199 நிமிடம். (இந்தி) |
மொழி | தமிழ், ஹிந்தி |
ஹே ராம், 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் தமிழ், இந்தி என இரு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ஷாருக் கான், ராணி முகர்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வகை[தொகு]
கதை[தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சாக்கேத் ராம் (கமல்ஹாசன்)ஒரு பிராமணராவார், மற்றும் அவரின் நண்பரான அம்ஜத் அலி கான் (சாருக் கான்) ஒரு இஸ்லாமியர் இருவரும் அகழ்வாராய்ச்சியாளர்கள். 1940 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியில் இருவரும் மிக முக்கிய பங்கைவகிக்கின்றனர். அங்கிருந்து பிரியும் இவர்கள் பின்னர் கலவரங்களின் மத்தியில் சந்திப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பாக்கித்தான் பிரிவினையின்போது கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறைக்கு தன் மனைவி (ராணி முகர்ஜி) கொல்லப்படுகிறார். இசுலாமியர்களுக்கு அளவுக்கு அதிகமாக இடம் கொடுத்த மகாத்மா காந்தியே இதற்கு காரணம் என்று இந்துத்துவ குழுக்களால் சாக்கேத் ராம் மூளைச் சலவை செய்யப்படுகிறார். மனைவியை இழந்த துயரமும், பழிவாங்கும் உணர்வும், மூளை சலவையும் சேர்ந்து இசுலாமியர்களையும், காந்தியையும் வெறுக்கத்தொடங்குகிறார். மேலும் நண்பர் லால்வானியின் (சௌரப் சுக்லா) குடும்பம் வன்முறையால் சிதறுண்டதை அறிந்தபின், அந்த வெறுப்பு வளுவடைகிறது. மகாத்மா காந்தியை கொல்வதற்காக இந்துத்வா அமைப்பினால் இவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
காந்தியைக் கொல்வதற்காக தன் இரண்டாம் தாரத்தையும் விடுத்து தில்லிக்கு செல்லும் முன்பாக வாரணாசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடி துறவறம் ஏற்கிறார் சாகேத் ராம். தனது குறிக்கோளை அடைய டெல்லிக்குச் செல்கின்றார். அங்கு தனது கையடக்கத் துப்பாக்கியுடன் ஒரு விடுதியில் தங்கியிருக்கும் பட்சத்தில் காவல்துறையினரால் தேடப்பட்ட போது கையடக்கத் துப்பாக்கியை ஒரு ஊர்தி மேல் போட்டு விட்டார். அவ்வூர்தியும் இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவே அங்கு செல்கின்றார் சாக்கேத் ராம் அங்கு தனது பழைய நண்பரும் காந்தியை பின்பற்றுபவருமான அம்ஜத்தை சந்திக்கின்றார். அங்கு தனது துப்பாக்கியைப் பெற்றுக் கொள்ளுகிறார் சாக்கேத் ராம். அப்போது சாகேத் ராமின் நோக்கத்தை அறிந்த அம்ஜத் காந்தியின் உயிருக்கு பதிலாக தனது உயிரை எடுத்துக் கொள்ளுமாறு சாகேத் ராமை கோருகிறார். அங்கு நடந்த சம்பவங்களில் அம்ஜத்தின் நெருங்கிய உறவினர்கள் சிலரின் மரணத்திற்கு சாகேத் ராம் தன்னை அறியாமல் காரணமாகிறார். இருந்தாலும் சாகேத் ராமை காட்டிக் கொடுக்காமல் அம்ஜத் உயிர் இழக்கிறார். அம்ஜத்தின் மரணம் சாகேத் ராமை உலுக்குகிறது. மதவெறியால் ஏற்படும் இழப்புகளை உணர்ந்து காந்தியிடம் மன்னிப்பு கேட்கச் செல்லும் பொழுது கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுகள் காந்தி மீது பாய்கின்றது. பின்னாட்களின் காந்தியின் அகிம்சைக் கொள்களின் மகிமைகளை அறிந்து அவரது காலணிகளை சாகேத் ராம் பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.
நடிகர்கள்[தொகு]
- கமல்ஹாசன்
- ஷாருக் கான்
- ராணி முகர்ஜி
- வசுந்தரா தாஸ்
- ஹேம மாலினி
- கிரீஷ் கர்னாட்
- நசிருதீன் ஷா
- வி. எஸ். ராகவன்
தயாரிப்பு[தொகு]
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் புவியரசு ஒரு பத்திரிக்கையில் அளித்த பேட்டியில், "ஹே ராம் படத்தில் எந்ததெந்தக் கதாப்பாத்திரங்கள் எந்தெந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, அவர்களே நடித்திருந்தார்கள். காந்தி கதாபாத்திரத்திற்கு சாஹிபை போடலாமென ஆலோசனை கூறினேன். அதன்பின்பே நஷ்ருதீன் ஷா படத்திற்குள் வந்தார். திரைக்கதை ஆங்கிலத்திலேயே எழுதியிருந்தார் கமல். அதனை தமிழில் மொழிபெயர்த்தேன். 'என் படத்தில் சப்டைட்டில் போடமாட்டேன்' என்று கமல் பிடிவாதமாய் இருந்தார். 'ஏன்' என்று கேட்டேன். 'இது தமிழ் படமல்ல. இந்தியப் படமென இருக்கட்டும்' என்று திடமாகக் கூறினார்." என்று தெரிவித்துள்ளார்.[1]
இசை[தொகு]
இப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசை அமைத்துள்ளார்.[2]
தமிழ் பாடல்கள்[தொகு]
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|
"ராம் ராம்" | கமல்ஹாசன், சுருதி ஹாசன் | கமல்ஹாசன் |
"நீ பார்த்த" | ஆஷா போஸ்லே, ஹரிஹரன், (கவிதை வாசித்தவர்: ராணி முகர்ஜி) | கமல்ஹாசன், (கவிதை : ஜீவன் ஆனந்ததாஸ்) |
"பொல்லாத மதனபானம்" | மகாலட்சுமி ஐயர், அனுபமா தேஷ்பாண்டே | வாலி, ஜெகதீஷ் கேபுட்கர் |
"வாரணம் ஆயிரம் வைஷ்ணவ ஜன தோ" | கனபாடிகள், விபாஷர்மா | நரசிங் மேத்தா, ஆண்டாள், ஞானக்கூத்தன் |
"இசையில் தொடங்குதம்மா" | அஜொய் சக்ரவர்த்தி | இளையராஜா |
"சந்நியாச மந்திரம்" | கமல்ஹாசன் (கடிதம் படித்தவர்கள் : கமல்ஹாசன், ஹேம மாலினி) |
|
"ராமரானாலும் பாபரானாலும்" | கமல்ஹாசன், ஜாலிமுகர்ஜி | வாலி |
இந்தி பாடல்கள்[தொகு]
1. "ஏய்! ராம்" -கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன்
2. "ஜான்மோன் கி ஜ்வாலா" (ராணி முகர்ஜே ஓதிய ஜிபானானந்த தாஸின் கவிதை) -அஷா போஸ்லே, ஹரிஹரன்
3. "அச கா மதன் பான் குஸ்லா காசா"- ப்ரீத்தி உத்தம், அனுபமா தேஷ்பாண்டே
4. "சன்யாஸ் மந்திரம்" -கமல் ஹாசன்
5. "சாஹே பண்டிட் ஹோ" -கமல் ஹாசன், ஹரிஹரன், ஜாலி முகர்ஜி
6. "பிரேம் பான்" -பிரீத்தி உத்தம்
7. "வைஷ்ணவ் ஜன தோ" -விபா சர்மா
8. "ஹர் கோய் சம்ஜே" -அஜோய் சக்கரபாணி
விருதுகள்[தொகு]
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா (2000)
- சிறந்த துணை நடிகர் - அதுல் குல்கர்ணி
- சிறந்த உடை அலங்காரம் - சரிகா
- சிறந்த தந்திரக் காட்சிகள்- மந்த்ரா
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
- சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
64வது பெங்காள் பிலிம் ஜர்னலிஸ்ட் அசோசியேசன் விருது
- 2000 ஆண்டுக்கான சிறந்த கலைஞர் - கமல்ஹாசன்
ஸ்கிரீன் நாளிதழ் விருது
- சிறந்த பின்னணி இசை - இளையராஜா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ""குருதிப்புனல் கதையைப் படமாக்குவதே கமலின் கனவு...!" - கவிஞர் புவியரசு". ஆனந்த விகடன். 16 பிப்ரவரி 2017. 17 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "என்னுடைய கோபம்...இளையராஜாவின் கண்ணீர்! - கமல்ஹாசன் சொல்லும் 'ஹேராம்' கதை". ஆனந்த விகடன். 31 சனவரி 2019. 12 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.