உள்ளடக்கத்துக்குச் செல்

சரிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரிகா
சரிகா 2010 இல்
பிறப்புசரிகா தாக்கூர்
5 திசம்பர் 1960 (1960-12-05) (அகவை 63)
இந்தியா, தில்லி
இனம்மராத்தி, ராஜ்புத்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1967 - தற்போதுவரை
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
கமலகாசன் (தி. 1988⁠–⁠2004)
பிள்ளைகள்சுருதி ஹாசன் (பிறப்பு 1986)
அக்சரா ஹாசன் (பிறப்பு 1991)

சரிகா தாக்கூர் (Sarika Thakur) (பி. 5 திசம்பர் 1960), இவர் பொதுவாக சரிகா, என அறியப்படுபவர் ஆவார்.இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.

இவர் 2005 ஆம் ஆண்டில் பர்சானியா என்னும் ஆங்கில திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைகான தேசிய விருதினைப் பெற்றார்.

செப்டம்பர் 14, 2007 அன்று புது தில்லியில் 53 வது தேசிய திரைப்பட விருது விழாவில், ஆங்கில மொழித் திரைப்படமான "பர்சானியா" திரைப்படத்திற்காக திருமதி சரிகாவுக்கு 2005 இல் சிறந்த திரைப்பட நடிகை விருது வழங்கிய பிரதிபா தேவிசிங் பாட்டீல்

முன் வாழ்க்கை[தொகு]

சரிகா தாக்கூர் புதுதில்லியில் பிறந்தவர், இவர் பாதி மராத்தியர் மற்றும் பாதி இராசபுத்திரர் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1] சரிகாவின் இளம்வயதிலேயே இவரது தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் குடும்பம் வறுமைக்கு ஆட்பட்டது. இதனால் இவர் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இவர் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பையும் பெறவில்லை. இவரின் தாயார் இவரிடம் கடுமையாக வேலை வாங்கினார். இவர் தன் வாழ்வில் உச்சநிலையில் இருந்தபோது, இவரது தாயாரால் பொது இடத்தில் தாக்கப்பட்டார்.[2]

வாழ்க்கை[தொகு]

சரிகா குழந்தை நட்சத்திரமாக நான்கு வயதில் மும்பை பாலிவுட்டில் தன் திரைப்பட வாழ்வைத் துவக்கினார்,[2] இவர் 1960 இல் தன் முதல் படத்தில் மாஸ்டர் சூரஜ் என்ற சிறுவனாக நடித்தார். 1967 இல் இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமான ஹமாராஜ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரின் நடிப்பு கவணிக்க வைத்தது. இப்படத்தின் தலைப்பில் பேபி சரிகா என குறிப்பிடப்பட்டார். இதன் பிறகு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். வளர்ந்த பிறகும், இவர் பல இந்தி, மராத்தி, திரைப்படங்களில் நடித்தார். நடிகர் கமல்ஹாசனைத் திருமணம் செய்தார், பின் மணவிலக்குப் பெற்றார்.

திரைப்படங்கள்[தொகு]

 • பார் பார் தேகோ (2016)
 • டேவிட் (2013) ..
 • கிளப் 60 (2013) .... டாக்டர். சய்ரா
 • ஜப் தக் ஹை ஜான் (2012) .... டாக்டர் ஜோயா அலி கான்
 • ஷூபைட் (2012) .... அதிதி
 • சொசைட்டி (2010)
 • கச்சா லிம்பு (2009)
 • ஹாரி புட்டர் : எ காமெடி ஆப் திரோஸ் (2008) .... ஹரி புட்டரின் தாயார்
 • Y.M.I. யே மேரா இந்தியா (2008) .... சுஷ்மா தல்ரிஜா
 • தஹான் (2008) .... தஹான் தாயார்
 • மனோரமா சிக்ஸ் பீட் அண்டர் (2007) .... மனோரமா
 • பேஜா ஃப்ரை (2007) .... ஷீத்தல் ஆர் தடனி
 • புனித ஈவில் (2006) .... இப்சிதா
 • கல்: நேற்று மற்றும் நாளை (2005) .... இரா ஹக்சர்
 • பர்ஜானியா (2005) .... ஸ்னெஹ்னாஜ்
 • அமெரிக்க பகல் (2004) .... டோலி
 • ரகு ரோமியோ (2003) .... கட்சி விருந்தினர்
 • புன்னகை பூவே (2003)
 • ஆக்ரி சங்குரஷ் (1997) .... சீத்தா
 • சந்தோஷ் (1989) .... முன்னி / சாரிகா
 • அஜீப் இத்தாப்A (1989) .... அபர்ணா / அர்பனா
 • காரிடர் (1988)
 • ஸ்வாடீ (1986) .... நடன மாது / பாடகி
 • ஷர்ட் .... ரூஹி
 • தில்வாலா (1986) .... சப்னா
 • மங்கள் தாதா (1986)
 • ஜிந்தா லாஷ் (1986)
 • ஏக் தாக்கு சாகிர் மெயின் (1985) .... ரஞ்சனா
 • ராம் தேரே கிட்னி நாம் (1985) .... லில்லி ( "தேவதை" காட்சியில்)
 • ஏக் பூல் (1985) (டிவி)
 • கரிஷ்மா (1984) .... நீத்தா
 • காங்வா (1984)
 • ராம் தேரா தேஷ் (1984) .... லில்லி டிசோசா
 • ஆஸ்மான் (1984)
 • ஆக்கல்மந்த் (1984) .... வழக்கறிஞர் ஷோபா
 • ராஜ் திலக் (1984) .... ஜிப்சி
 • படே தில் வாலே (1983) .... ஜூஹி சின்ஹா ​​/ ஜூஹி வி குப்தா
 • நாஸ்திக் (1983) மாலா (பேபி சாரிகா போன்ற) ....
 • பக்கா தாக்கு (1983)
 • ரசியா சுல்தான் (1983)
 • விதாடா (1982) .... நீலிமா
 • பட்லி கி ஆக் (1982) .... ஆஷா
 • மிஹர்பானி (1982)
 • டீஸ்ஸ்ரீ ஆன்க்ஹ் (1982) .... ரேகா
 • யே வாதா ரஹா (1982) .... ரீட்டா சக்சேனா
 • ஸ்ரீமான் ஸ்ரீமதி (1982) .... அருணா குப்தா
 • சாட்டே பே சட்டா (1982) .... ஷீலா
 • தவுலத் (1982) .... சுஷ்மா
 • தில் ஹி தில் மெய்ன் (1982) .... குலாபோ / ராணி
 • சன்னடா (1981)
 • டாஷ்ஹட் (1981) .... கிரண்
 • கிராந்தி (1981) .... ஷீத்தல்
 • நை இம்ராத் (1981)
 • ப்ளாட் நம்பர் 5 (1981)
 • சாரதா (1981) .... அனிதா கோலி
 • ஜோதி பேன் ஜ்வாலா (1980) .... ஆஷா
 • நஸ்ரான பியார் கா (1980) .... அனுராதா
 • பியாரா துஷ்மன் (1980)
 • யே கைசா இன்சாப்? (1980) .... சுதா
 • பின் பேரே ஹம் தேரே (1979) .... ஷிகா
 • கிரிஷா பிரவேஷ் (1979) .... சப்னா
 • ஜானே பஹார் (1979) .... குக்கு ராய்
 • ஜானி துஷ்மன் (1979) .... பிந்தியா
 • ராக்கி கி ஸெவ்காந்த (1979) .... பாரோ / டினா
 • டில் டில் டாலிகா (1979)
 • தில் அவுர் தீவார் (1978) .... லட்சுமி ராய்
 • டிக் ... டிக் ... டிக் .... மிஸ் இந்தியா
 • அன்பத் (1978) .... கீதா 'அன்பத்'
 • தேவதா (1978) ...... லில்லி
 • மடு மல்டி (1978)
 • பரத் (1977) மராத்தி திரைப்படம் (நூதன், சச்சினின் ஷிரம் லாலு)
 • பண்டல் பாஜ் (1976) .... தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்
 • ரக்ஷா பந்தன் (1976) .... ஆஷா
 • குஷ்பு (1975) .... காளி
 • கீத் கீதா சல் (1975) .... ராதா
 • காகஸ் கி நவோ (1975)
 • வந்தனா (1975)
 • ஹார் ஜீட் (1972) (பேபி சாரிகா)
 • சோட்டி பஹூ (1971) .... கோபி
 • ஜவான் முஹபத் (1971) (பேபி சாரிகா) .... ரேகா சரீன்
 • தேவி (1970) தீபக் (மோபட் சுராஜ் ) ....
 • பேட்டி (1969) .... லிட்டில் நந்தா
 • பாலாக் (1969) (பேபி சாரிகா) .... தீபக் 'தீபு'
 • ஜோதி (1969)
 • சாத்யகம் (1969) (பேபி சாரிகா) .... காபூலில் எஸ் அர்சர்யா
 • ஆஷிர்வாத் (1968) (பேபி சாரிகா) .... நீனா
 • ஹமாராஜ் (1967 /I) .... சாரிகா
 • மஜ்ஹலி தீதி (1967) .... உமா - ஹேமாங்னி

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு
காட்சி
அலை வரிசை
பாத்திரம்
2014 யுத் (தொ.கா. தொடர்) சோனி கௌரி சேகர்
2015 தர் சப்கோ லக்தா ஹை எபிசோட் லெவன் இன் &டிவி மிஸ் கோன்சிகா

மேற்கோள்கள்[தொகு]

 1. "I get devastated at the idea of marriage: Shruti Haasan". பார்க்கப்பட்ட நாள் 18 January 2014.
 2. 2.0 2.1 "Times of India". Times of India. p. 6. பார்க்கப்பட்ட நாள் 31 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிகா&oldid=3944398" இலிருந்து மீள்விக்கப்பட்டது