அக்சரா ஹாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்சரா ஹாசன்
கிளப் 60 என்ற திரைப்படத்தை திரையீட்டின்போது அக்சரா ஹாசன்
பிறப்புஅக்சரா ஹாசன்
அக்டோபர் 12, 1991 (1991-10-12) (அகவை 32)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010 முதல் தற்போது வரை
பெற்றோர்கமல்ஹாசன்
சரிகா
உறவினர்கள்சுருதி ஹாசன் (சகோதரி)

அக்சரா ஹாசன் (பி. 12 அக்டோபர் 1991) திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார். இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் 2வது மகளாவார். நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். இவர் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.[1]

சொந்த வாழ்க்கை[தொகு]

அக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார்.[2] இளமையிலேயே கடவுள் நம்பிக்கையை இழந்தார். தற்போது புத்த மத கோட்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார். சென்னையில் உள்ள ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனியில்தான் அக்சரா பால் ரூம் டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். அக்சரா, இங்கிலாந்தின் பால் ரூம் தொழில்முறை நடனக் கலைஞர்கள் பயிற்சி அமைப்பு நடத்திய முதலாவது பரீட்சை தேறியுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

அக்சரா ஹாசன், அக்டோபர் 12, 1991 அன்று சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரிகா தம்பதிக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார்.[3][4] இவரது தந்தை தமிழ் வம்சாவளியையும், அவரது தாயார் மராத்தி மற்றும் ராஜ்புட் வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவர்.[5] சூர்யாவுடன் ஏழாம் அறிவு திரைப்படத்திலும், தனுஷ் உடன் 3 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். அக்சரா ஹாசன் தனது பள்ளிப்படிப்பை சென்னையிலும், பின்னர் பெங்களூர் இண்டஸ் சர்வதேச பள்ளியிலும் பயின்றவராவார்.[6]

பிறப்பும் ,இளமை பருவமும்[தொகு]

அக்சரா ஹாசன் தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் கமல்ஹாசனுக்கும், வட இந்திய புகழ் பெற்ற நடிகை சரிகாவிற்கும் இரண்டாவது மகளாக 1991 அக்டோபர் 12 இல் பிறந்தார். அக்சரா சென்னையில் அபாகஸ் மாண்டிசோரி பள்ளியில் படித்தார். பின்னர் லேடி ஆண்டாள் ஸ்கூலில் படித்தார். இவ்வமையம் இவருடைய தாயும், தந்தையும் பிரிய நேரிட்டதால் இவர் தன் அன்னையுடன் மும்பையில் வசிக்க நேரிட்டது. மற்றொரு உடன் பிறப்பு சகோதரியான ஸ்ருதி ஹாசன் சென்னையிலேயே தந்தையுடன் தங்கிவிட்டார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

2015 ஆம் ஆண்டில் ஷமிதாப் என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் நடித்தார். இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்துவிட்டார்.[7][8][9] பின்னர் தமிழில் அஜித்குமார் உடன் விவேகம் படத்தில் நடித்தார். தன்னுடைய தந்தை இயக்கி வந்த சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனர் ஆக பணிபுரிந்தார். ஆனால் அப்படம் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 2019 ஆண்டில் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். அதே ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான ஜீ5 என்ற இணைய செயலியில் Fingertip என்ற இணையதள நாடக தொடரிலும் நடித்தார்.

பங்காற்றிய திரைப்படங்கள்[தொகு]

நடிகையாக
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2015 ஷமிதாப் அக்சரா பாண்டே இந்தி
2017 லாலீ கி சாதி மே லட்டு தீவானா லாலீ இந்தி
விவேகம் தமிழ்
2019 கடாரம் கொண்டான் ஆட்ரியா தமிழ்
துணை இயக்குநராக
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2016 சபாஷ் நாயுடு தமிழ்
தெலுங்கு
இந்தி
படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது [10]

சான்றுகள்[தொகு]

  1. "அப்பா, அம்மா பிரிந்ததில் வருத்தம் - கமல் மகள் அக்‌ஷரா ஹாசன்". தினத்தந்தி. 10 செப்டம்பர் 2019. http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/10063351/Dad-Mom-broke-Sad-Akshara-Hassan-Kamal-daughter.vpf. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2020. 
  2. "Shruti Haasan's sister Akshara lives in Mumbai with mom". Times of India. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  3. Haasan, Shruti (12 October 2012). "Happy birthday to my darling sister @AksharaHaasan1 !! Have an amazing day and amazing year my thangacchi! Love light joy !". Twitter. பார்க்கப்பட்ட நாள் March 13, 2014.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. Haasan, Shruti (12 October 2013). "Happy birthday to my most beautiful sister @aksharahaasan1 so so proud of the amazing person she has grown to be". Twitter. பார்க்கப்பட்ட நாள் March 13, 2014.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  5. Gupta, Priya (17 May 2013). "I get devastated at the idea of marriage: Shruti Haasan". Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 April 2014.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-27. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-27. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.
  7. "Mani Ratnam to launch Akshara?". msn. 2 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-01-28.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Mani Ratnam to launch Akshara?". bharatwaves. 31 August 2011. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-28.
  9. "Maniratnam to launch Akshara Haasan". telugu.way2movies. 31 August 2011. Archived from the original on 2014-02-25. பார்க்கப்பட்ட நாள் 2014-01-28.
  10. "Kamal Haasan to work with daughters Shruti, Akshara in Sabaash Naidu". Hindustan Times. 2016-04-30. http://www.hindustantimes.com/regional-movies/kamal-haasan-to-work-with-daughters-shruti-akshara-in-sabaash-naidu/story-XamCWuKN3QIU3H99s5UoBP.html. பார்த்த நாள்: 2016-05-20. 

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Akshara Haasan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சரா_ஹாசன்&oldid=3793187" இலிருந்து மீள்விக்கப்பட்டது