மகாலட்சுமி ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகாலட்சுமி ஐயர்
Mahalakshmi Iyer Timeless.jpg
2010இல் மகாலட்சுமி ஐயர்
பின்னணித் தகவல்கள்
பிறப்புமும்பை, மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர், இந்திய பாரம்பரிய இசை, நாட்டுப்புறம், இந்திய பாப்
தொழில்(கள்)பாடகி ,பின்னணிப் பாடகி
இசைக்கருவி(கள்)வாய்ப்பட்டு
இசைத்துறையில்1996 முதல் தற்போது வரை

மகாலட்சுமி ஐயர் (Mahalakshmi Iyer) இந்தி மற்றும் தமிழ் பாடல்கள் பாடும் ஒரு இந்திய பின்னணி பாடகர் ஆவார். தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, அசாமி மற்றும் கன்னடம் போன்ற பல இந்திய மொழிகளிலும் அவர் பாடியுள்ளார்.[1]

தொழில்[தொகு]

மகாலட்சுமி 1996 இல் சங்கர்-எஸ்ஸான்-லாய் இசை இயக்குநராக அறிமுகமான "தஸ்" (1997) என்ற படத்தில் அறிமுகமானார் படத்தின் இயக்குனர் திடீரென காலமானதால் படம் முடிவடையவில்லை. இருப்பினும் படத்தின் பாடல்கள் ஆல்பம் 1999 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதே வாரம் அவர் உதித் நாராயணுடன் "தஸ்" படத்திலும், மணிரத்னம், ஏ. ஆர். ரகுமான் கூட்டணியில் வெளியான தில் சே படத்தில் "ஏ அஜநபீ" என்ற பாடலை பாடினார். இது பின்னணி பாடகியாக அவரது முதல் வெளியீடாக இருந்தது. மகாலஷ்மி ஷங்கர்-எஷான்-லோய் மற்றும் ஏ. ஆர். ரகுமான் ஆகியோரது தொடர்ந்து வந்த பல படங்களில் பல பாடல்களை பாடியுள்ளர்.[2]

பின்னர் அவர் பல ஜிங்கில்கள் மற்றும் அசல் ஆல்பங்களை பாடியுள்ளார் .[3] "மிஷன் காஷ்மீர்" , "யாதீன்"(2001) மற்றும் "சாத்தியா" போன்ற பல வெற்றிகரமான பாடல்களில் பாடினார், மற்றும் ஏ. ஆர். ரகுமான், ஷங்கர்-எஷான்-லோய், விஷால்-சேகர், ஜடின்-லலித் மற்றும் பல மிகப்பெரிய இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். பல "யாஷ் ராஜ் பிலிம்ஸ்" தயாரிப்பில், தூம் 2, "பன்டி அவுர் பாபி" , "சலாம் நமஸ்தே", "ஃபனா", "த ரா ரம் பம்" மற்றும் "ஜூம் பராபர் ஜூம்" போன்ற பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.. "சூர் - தி மெலடி ஆஃப் லைஃப்" (2002), "கபி சாம் தாலே" "ஹார் தராப்" (ரிஸ்தே) (2002) , "சுப் சுப் கே" (பன்டி அவு பாப்லி) (2005), ஆஜ் கி ராத்" (டான்: த சேஸ் பிகன்ஸ் அகெய்ன்)(2006) மற்றும் " போல் நா ஹல்கே ஹல்கே" ( ஜூம் பார்பர் ஜூம்) போன்ற படங்களில் அவரது பாடல்கள் குறிப்பிடத்தக்கதாக அறியப்பட்டது.[4] ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளியான சிலம்டாக் மில்லியனயர் படத்தில் இடம் பெற்று சிறந்த பாடலுக்கான அகாடமி விருது பெற்ற "ஜெய் ஹோ" என்ற பாடலை பாடினார். குறிப்பாக, பாட்டு மற்றும் வசனங்களைக் கொண்ட ஹிந்திபகுதியைப் பாடினார். (அவற்றில் பெரும்பாலானவை சுக்விந்தர் சிங் பாடியது). [5]

சொந்த வாழ்க்கை[தொகு]

மகாலட்சுமி ஒரு தமிழ் இசைக் குடும்பத்தில் இருந்து வந்தார். அவரது தாயார் பாரம்பரிய கர்னாடிக் இசைப் பாடகர் ஆவார். அவருக்கு மூன்று சகோதரிகள் கல்பனா, பத்மினி மற்றும் ஷோபா ஆகியோரும் இவரைப் போலவே சிறு வயதில் ஹிந்துஸ்தானி இசை கற்றுக் கொண்டனர். இவர் மும்பையின் செம்பூர் பகுதியில் வளர்ந்தார். மும்பை ஆர். ஏ. போடர் கல்லூரியில் பொருளாதாரம் பட்டம் பெற்றவர் ஆவார்.[சான்று தேவை]

விருதுகள்[தொகு]

  • "ஆதார் படத்திற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ஆல்பா விருது
  • "சுனா எட்டி காராத்"திற்காக மகாராஷ்டிரா கலா நிகேதன் விருது
  • "ரஜினி முருகன் படத்தில் "உன் மேல ஒரு கண்ணு" பாடலுக்காக 2016இல், 64வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த பெண் பின்னணி பாடகி – தமிழ் பாடகிக்கான மகாராஷ்டிரா மாநில விருதினைப் பெற்றார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாலட்சுமி_ஐயர்&oldid=2691800" இருந்து மீள்விக்கப்பட்டது