உள்ளடக்கத்துக்குச் செல்

மருதநாயகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருதநாயகம்
இயக்கம்கமல்ஹாசன்
தயாரிப்புகமல்ஹாசன்
கதைகமல்ஹாசன்
சுஜாதா
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
விஷ்ணுவர்தன்
நாசர்
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மருதநாயகம் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் கமல்ஹாசனின் இலட்சியத் திரைப்படமாக விளங்கும் இத்திரைப்படம் பணச்சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து உருவாக்கப்படாத நிலையில் உள்ளது.

நடிகர்கள்

[தொகு]

தொடக்கமும் தாமதமும்

[தொகு]

1997-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. அவரே இயக்குநர் பொறுப்பையும் ஏற்று இருந்தார். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்'.

நிதி நெருக்கடி காரணமக 'மருதநாயகம்' படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் அளித்த பல பேட்டிகளில் 'மருதநாயகம்' பற்றிய கேள்விக்கு "அப்படத்தின் பட்ஜெட்டிற்கு எந்த ஒரு தயாரிப்பாளராவது முன்வந்தால் மீண்டும் தொடங்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இசை

[தொகு]

இப்படத்தின் இசையை இசைஞானி இளையராசா அமைக்கிறார். 2016 மார்ச்சு 4 அன்று இரவு இணையத்தில் இப்படத்திற்காக இளையராசா உருவாக்கிய பாடல் வெளியாகியுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதநாயகம்_(திரைப்படம்)&oldid=4052412" இலிருந்து மீள்விக்கப்பட்டது