பசுபதி (நடிகர்)
Appearance
பசுபதி | |
---|---|
பிறப்பு | பசுபதி ராமசாமி மே 18, 1969 மதுரை, தமிழ் நாடு, இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 1999 இல் இருந்து - இன்று வரை |
வாழ்க்கைத் துணை | சூர்யா [1] |
பசுபதி (Pasupathy) தமிழ்த் திரைப்பட நடிகரும் மேடை நாடக நடிகரும் ஆவார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். இயல்பான பன்முக நடிப்புத் திறனுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமன்றி மலையாள, தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சென்னையை அடுத்துள்ள பொழிச்சலூர் என்னும் புறநகர்ப் பகுதியில் 1969-ல் பிறந்தவர். இவரது பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்கோட்ட அருகில் உள்ள " அருமளை" என்கிற கிராமம் ஆகும். இவரது தந்தை ராமசாமி ஆர்சுத்தியார்.[2]
நடித்த திரைப்படங்கள்
[தொகு]- அரவான் (2011)
- வெடிகுண்டு முருகேசன் (2008)
- குசேலன் (2008)
- வெயில் (2006)
- ஈ (2006)
- மஜா (2005)
- மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
- விருமாண்டி
- இயற்கை
- தூள்
- அசுரன்