உள்ளடக்கத்துக்குச் செல்

விருமாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விருமாண்டி
இயக்கம்கமல்ஹாசன்
தயாரிப்புகமல்ஹாசன்
சந்திரஹாசன்
கதைகமல்ஹாசன்
திரைக்கதைகமல்ஹாசன்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
அபிராமி
பசுபதி
நெப்போலியன்
ரோகிணி
ஒளிப்பதிவுகேசவ் பிரகாஷ்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு14 சனவரி 2004
ஓட்டம்165 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விருமாண்டி 2004ல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதனை கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

இத்திரைப்படம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதைப் பெற்றது. இத்திரைப்படம் ரஷோமோன் விளைவு என்றொரு திரைக்கதை வழியை இப்படம் கையாண்டது. கதையின் நாயகன் விருமாண்டியும், கொத்தாள தேவரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மரணதண்டனைக் கைதிகள் குறித்து ஆவணப் படமெடுக்க வருகின்ற ஏஞ்சலியா காட்டமுத்து, இவர்களிடம் நடந்ததை குறித்து கேட்டு பதிவு செய்கிறார். அதன் படி, கொத்தாள தேவர் முதலில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை விவரித்தும், அதன் பின் நாயகன் விருமாண்டி விவரிப்பதும் கதையாக அமைந்தது. இதில் மரணதண்டனை தேவையில்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.[1]

வசுல்ரீதியாக வெற்றி பெற்றாலும்., சாதி அரசியல், மரணதண்டனை போன்ற விவாதப் பொருட்களால் இப்படம் நிறைய விமர்சனங்களை சந்தித்தது.

வகை

[தொகு]

கிராமப்படம்

நடிகர்கள்

[தொகு]

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

விருமாண்டி மற்றும் அவருக்கு நெருக்கமான பங்காளிகளான கொத்தலத் தேவர் மற்றும் நல்லம்ம நாயக்கர் ஆரம்ப காலங்களில் நட்புடன் இருந்து வந்தனர். அவர்களுள் கொத்தலத் தேவர் விருமாண்டிக்கு சொந்தமான நிலச்சொத்துக்களை தானே அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையினால் விருமாண்டியின் மனைவியையும் அவரது பங்காளியினையும் கொலை செய்கின்றார். இதனை அவர் சிறையில் வேறு விதமாக தொலைக்காட்சிப் பேட்டியாளரிடம் கூறுகிறார். இத்திரைப்படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையாகும். விருமாண்டியின் பார்வையிலும் அவரது எதிரியின் பார்வையிலும் திரைக்கதை நகர்வது மேலும் திரைப்படத்தில் விறுவிறுப்பை கூட்டுகின்றன.

இசை

[தொகு]

இப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசை அமைத்துள்ளார்.

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
"ஒன்னவிட" கமல்ஹாசன், சிரேயா கோசல் கமல்ஹாசன்
"அன்னலட்சுமி கண்ணசச்சா" கமல்ஹாசன் இளையராஜா
"நெத்தியில பொட்டுவச்சு" திருவுடையான், சுகுமார், கருணாநிதி முத்துலிங்கம்
"மகராசி மண்ணவிட்டு போணியே" தேனி குஞ்சரமாள் முத்துலிங்கம்
"கருமாத்தூர் காட்டுக்குள்ளே" திருவுடையான், மேரி, சுகுமார், பெரிய கருப்பு தேவர், கருணாநிதி முத்துலிங்கம்
"அந்த காண்டாமணி" இளையராஜா, கமல்ஹாசன், கார்த்திக் ராஜா, திப்பு, எஸ். என். சுரேந்தர் முத்துலிங்கம்
"மாட விளக்கே" கமல்ஹாசன் முத்துலிங்கம்
"கொம்புல பூவ சுத்தி" கமல்ஹாசன் இளையராஜா
"கர்பகிரகம் விட்டு சாமி வெளியேறுது" இளையராஜா, கமல்ஹாசன், கார்த்திக் ராஜா, திப்பு, எஸ். என். சுரேந்தர் முத்துலிங்கம்
"சன்டியரே சன்டியரே" சிரேயா கோசல் இளையராஜா

பெயர் சர்ச்சை

[தொகு]

இப்படத்தின் பெயராக சண்டியர் என்பது தெரிவு செய்யப்பட்டு விளம்பரங்கள் வெளிவந்தன. புதிய தமிழகம் என்றொரு கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இத்தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இப்படம் சாதியின் பெயரால் எடுக்கப்படுகிறது, இப்படம் வெளிவந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரட்சனை உண்டாகும் என்பது அவரது கருத்து. இதனால் தேனி மாவட்டத்தில் இப்படபிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு பாதுகாப்பும் அனுமதியும் வழங்கப்படவில்லை. அதன் பிறகு தமிழக முதல்வரை கமலஹாசன் நேரடியாக சந்தித்து விளக்கம் கொடுத்தார். அங்கு இரு தரப்புக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் விருமாண்டி என்ற கதைநாயகனின் பெயரே திரைப்படத்திற்கு வைக்கப்பட்டது.[2]

இந்த பெயர் சர்ச்சையால் மன உலைச்சலுக்கு ஆளான கமலஹாசன் ஒரு காணொளியைப் பதிவு செய்து வெளியிட்டார். அதில் தமிழக கலாச்சாரத்தினைப் பற்றியும், சமூகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.[3]

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 ""விருமாண்டி" விமர்சனம் -தி இந்து தளம் (ஆங்கிலம்)". Archived from the original on 2004-03-06. பார்க்கப்பட்ட நாள் 2016-06-19.
  2. தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்! - ஈ.ப.பாஸ்கர் விகடன் 12/01/2016
  3. சண்டியர் ஞாபகங்கள்… அப்பிராணி அழகுசுந்தரம் தி இந்து நாளிதழ் ஆகஸ்ட் 3, 2014

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருமாண்டி&oldid=4120957" இலிருந்து மீள்விக்கப்பட்டது