அபிராமி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிராமி
பிறப்புதிவ்யா கோபிகுமார்[1]
சூலை 26, 1983 (1983-07-26) (அகவை 40)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
பணிநடிகை, தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1995–2004,
2014 - தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ராகுல் பவனன்
(2009 முதல் தற்போது வரை)

அபிராமி (ஒலிப்பு) (திவ்யா கோபிகுமார், பிறப்பு: 26 ஜூலை 1983) இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர், புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை, 2009 திசம்பர் 27 அன்று திருமணம் செய்து கொண்டார்.[2][3] இவர்களது திருமணத்திற்கு திரைப்படத்துறையில் இருந்து யாரும் அழைக்கப்படாமல் மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் , பதினைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களிப்புகள்[தொகு]

வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பன்னிரண்டு இதர மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் ரிஷிமூலம் எனும் தொடரின் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

2019 || சார்லி சாப்லின்- 2 || மைதிலி ராமகிருஷ்ணன் || 2021 || மாறா || செல்வி || 2021 || சுல்தான் || அன்னலெட்சுமி ||

சான்றுகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "அபிராமியுடன் ஒரு பேட்டி". thehindu.com. 2003-05-14. Archived from the original on 2016-01-24. பார்க்கப்பட்ட நாள் 2015-06-02.
  2. டைம்ஸ் ஆப் இந்தியாவுடனான அபிராமியின் பேட்டி (ஆங்கிலத்தில்)
  3. "വിവാഹം ആരെയും അറിയിക്കാതെ..." Mangalam.com. 2014-03-10. பார்க்கப்பட்ட நாள் 2015-06-02.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2001 வானவில் பிரியா
மிடில் கிளாஸ் மாதவன் அபிராமி
தோஸ்த் அனாமிகா
சமுத்திரம் இலட்சுமி
சார்லி சாப்ளின் மைதிலி ராமகிருஷ்ணன்
2002 கார்மேகம் அபிராமி
சமஸ்தானம் ஆயிசா
2004 விருமாண்டி அண்ணலட்சுமி
2015 36 வயதினிலே சுசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிராமி_(நடிகை)&oldid=3836115" இலிருந்து மீள்விக்கப்பட்டது