காதலா! காதலா!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காதலா! காதலா!
இயக்கம்சிங்கீதம் சீனிவாச ராவ்
தயாரிப்புபிரதாப். எல். தேனப்பன்
கதைகிரேஸி மோகன்
கமல்ஹாசன்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புகமல்ஹாசன்
பிரபு தேவா
சௌந்தர்யா
ரம்பா
ஒளிப்பதிவுதிரு
படத்தொகுப்புஎன். பி. சதிஷ்
கலையகம்சரசுவதி பிலிம்ஸ்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடு10 ஏப்ரல் 1998
மொழிதமிழ்
ஆக்கச்செலவு6 கோடி

காதலா! காதலா! என்பது 1998 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரபு தேவா, செளந்தர்யா, ரம்பா, வடிவேலு, நாகேஷ், எம். எஸ். விஸ்வநாதன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரதாப். எல். தேனப்பன் தயாரித்த இத்திரைப்படம் கார்த்திக் ராஜா இசையமைப்பில் 1998 ஏப்ரல் 10 அன்று வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த அவ்வை சண்முகி திரைப்படத்தைத் தொடர்ந்து இத்திரைப்படத்தையும் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. ஆனாலும் 1997இல் நடந்த பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தினால் அவரால் இப்படத்தை இயக்க முடியாமல் போனது. ஆகவே இப்படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார்.[1] நடிகைகள் மீனா, சிம்ரன் ஆகியோர் வேறு படங்களில் நடித்து கொண்டு இருந்ததால் அவர்களால் இப்படத்தில் நடிக்க இயலவில்லை. ஆகவே இப்படத்தில் ரம்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[2][3][4]

பாடல்[தொகு]

இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

எண் பாடல் பாடியவர்கள்
1 "காசுமேலே" கமல்ஹாசன், உதித் நாராயண்
2 "லைலா லைலா" ஹரிஹரன், பவதாரிணி
3 "மடோன்னா பாடலா நீ" கமல்ஹாசன்
4 "தகிடுதத்தம் அண்ணாச்சி" கார்த்திக் ராஜா
5 "சரவணபவ" கமல்ஹாசன், கார்த்திக் ராஜா, ஸ்ரீபிரியா, சுஜாதா
6 "அணகோன்டா" கமல்ஹாசன், பவதாரிணி
7 "அணகோன்டா 2" ஹரிஹரன், பவதாரிணி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலா!_காதலா!&oldid=2939424" இருந்து மீள்விக்கப்பட்டது