உள்ளடக்கத்துக்குச் செல்

புதுப்பேட்டை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புதுப்பேட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புதுப்பேட்டை
இயக்கம்செல்வராகவன்
தயாரிப்புலட்சுமி மூவி மேக்கர்ஸ்
கதைசெல்வராகவன்
வசனம்பாலகுமாரன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசோனியா அகர்வால்,
ஸ்னேகா,
தனுஷ்
வெளியீடுமே 26, 2006
ஓட்டம்166 நிமிடங்கள்
மொழிதமிழ்
ஆக்கச்செலவு21 கோடி (ஐஅ$2.5 மில்லியன்)

புதுப்பேட்டை (2006) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திரைப்பட நடிகர் தனுசின் சகோதரரான செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சினேகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]
  • தனுஷ் 'கொக்கி' குமார். புதுப்பேட்டையில் வாழும் சாதாரண ஆள். பின்னர் கொடுங்குற்றவாளி ஆகிறார்
  • சோனியா அகர்வால் - செல்வி, மணியின் தங்கை, குமாரின் மனைவி
  • சினேகா - கிருஷ்ணவேணி, அன்புவிடம் வேலை செய்யும் வேசி. பின்னர் குமாரை திருமணம் செய்துகொள்கிறார்
  • அழகம்பெருமாள் - தமிழ்செல்வன், அரசியல்வாதி, அன்பு மற்றும் குமாரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்
  • பாலா சிங் - அம்பு, தமிழ்செல்வனின் வலது கை
  • பிருத்வி ராஜ் - மூர்த்தி, தமிழ்செல்வன் மற்றும் அன்புவின் எதிரி
  • நிதிஷ் வீரா - மணி, அன்புவின் அடியாள் மற்றும் குமாரின் நண்பன்[1]
  • மூணார் ரமேஷ் - சேகர், குமாரின் தந்தை
  • தென்னவன் - செல்வம்
  • பாரதி மணி - முதலமைச்சர்
  • முருகதாஸ்- அன்புவின் அடியாள்[1]
  • விஜய் சேதுபதி- அன்புவின் அடியாள்[1]
  • சாய் தீனா - அன்புவின் அடியாள்
  • புதுப்பேட்டை சுரேஷ் - ரவி, அன்புவின் அடியாள்
  • பசி சத்யா - குமாரின் குழந்தையை வளர்ப்பவள்

துணுக்குகள்[சான்று தேவை]

[தொகு]
  • தமிழ்நாட்டில் 162 திரைகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் சென்னையில் வசூலில் முதல் இடத்தை வகித்தது.
  • உலகளவில் 250 திரைகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது.
  • 3 கோடி ரூபாய் வரையிலான வசூலை இத்திரைப்படம் பெற்றது.
  • தமிழில் 35 mm அளவில் வெளிவந்த முதற்திரைப்படமாகும்.

விமர்சனம்

[தொகு]

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "கதை சொல்கிற விதத்திலும், தரத்திலும் தனக்கென்று இருக்கிற தனிபாணியில் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறார் செல்வராகவன். அதேநேரம், காட்ட வந்த யதார்த்த உலகத்துக்குள் கதையம்சத்தை இன்னும் சற்று கோவையாகச் செதுக்கியிருந்தால்... அந்த உலகத்தின் பயங்கரத்தை நிஜ வாழ்க்கையில் கடந்து வராதவர்களும் கூட முழுசாக ரசித்திருக்க முடியும். தமிழ் சினிமாவில் இது புது... பேட்டைதான்!" என்று எழுதி 45/100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Recognising Vijay Sethupathi | WunderStars. Wunderbar Films. 14 March 2015. Event occurs at 1:12. Archived from the original on 3 February 2022. Retrieved 3 February 2022 – via யூடியூப்.
  2. "சினிமா விமர்சனம்: புதுப்பேட்டை". விகடன். 2006-06-11. Retrieved 2025-05-23.

வெளியிணைப்புகள்

[தொகு]