உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கர்லால் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கர்லால்
இயக்கம்டி. என். பாலு
தயாரிப்புடி. என். பாலு
கதைடி. என். பாலு
திரைக்கதைடி. என். பாலு
இசைஇளையராஜா,
கங்கை அமரன்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
சீமா
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
நடனம்கீதா
வெளியீடு15 ஆகஸ்ட் 1981 (தமிழ்)
6 பிப்ரவரி 1982 (தெலுங்கு)
நீளம்3554 மீட்டர்
நாடு இந்தியா
மொழிதமிழ்

சங்கர்லால் (Sankarlal) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். தெலுங்கு மொழியில் அந்தகாடு எனும் பெயரில் வெளியானது.

இயக்குநர் டி. என். பாலு அவர்கள், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள் உயிரிழந்தார். பஞ்சு அருணாசலம், இப்படம் நிறைவடைவதற்கு உதவி புரிந்தார். மீதி படத்தை, ஒளிப்பதிவாளர் என். கே. விசுவநாதன், மற்றும் கமல்ஹாசன் அவர்களே இயக்குநராக பணிபுரிந்து படத்தை முழுவதுமாக முடித்தனர்.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீபிரியா கமல் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் இப்படத்தில் நடிக்க தேதி ஒதுக்கீடு செய்வதில் ஸ்ரீபிரியா மற்றும் இயக்குநர் டி. என். பாலு இடையே முரண்பாடு ஏற்பட்டதால் இப்படத்திலிருந்து விலகினார்.[2]

பாடல்கள்

[தொகு]

இளையராஜா ( இளங்கிளியே.. பாடல் மட்டும் ), மற்றும் கங்கை அமரன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்தனர்.

'கெல் கெல் மெயின்' (Khel Khel Mein -1975) எனும் இந்தி திரைப்படத்தின், ஒரு பாடலான "ஏக் மெயின் ஆர் ஏக் டூ.. (Ek Main Aur Ek Tu…) எனும் பாட்டு, இத்திரைப்படத்தில் முழுவதுமாக, மீண்டும் பயன்படுத்தப்பட்டது.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1. "இளங்கிளியே இன்னும் விளங்கலியே".. எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன் 04:33
2. "அட வாடா கண்ணு".. எஸ். பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன் 04:24
3. "கஸ்தூரி மான் ஒன்று".. எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் புலமைப்பித்தன் 04:36
4. "தேடினேன்".. மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 04:24
5. "உண்மை என்றும் வெல்லும்".. வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன் பஞ்சு அருணாசலம் 04:13
6. "பாதி கல்லில்"..(படத்தில் இல்லை) எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன், கமல்ஹாசன் புலமைப்பித்தன் 04:27

மேற்கோள்கள்

[தொகு]
  1. "எங்க வீட்டுக்கு வந்துடுங்கன்னு எல்லாரும் கூப்பிடுறாங்க! - 'சுந்தரி' அப்பத்தா வரலட்சுமி". ஆனந்த விகடன். 19 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "அவன் அவள் அது - படத்தில் வாடகைத்தாய் வேடத்தில் ஸ்ரீபிரியா". மாலை மலர். 2 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்லால்_(திரைப்படம்)&oldid=4152681" இலிருந்து மீள்விக்கப்பட்டது