அழியாத கோலங்கள்
அழியாத கோலங்கள் | |
---|---|
![]() | |
இயக்கம் | பாலு மகேந்திரா |
தயாரிப்பு | தேவி பிலிம்ஸ் |
இசை | சலில் சௌதுரி |
நடிப்பு | ஷோபா பிரதாப் போத்தன் கமல்ஹாசன் |
ஒளிப்பதிவு | பாலுமகேந்திரா |
படத்தொகுப்பு | டி. வாசு |
வெளியீடு | திசம்பர் 7, 1979 |
நீளம் | 2966 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அழியாத கோலங்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷோபா, பிரதாப் போத்தன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். பாலு மகேந்திரா கன்னட மொழியில் கோகிலா எனும் படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமாகும், இது தமிழில் இயக்கிய முதல் படமாகும்.
இப்படத்தின் இரண்டாம் பாகமாக "அழியாத காலங்கள் 2" எனும் திரைப்படம் 29 நவம்பர் 2019 அன்று வெளியானது.[1]
நடிகர்கள்[தொகு]
- ஷோபா - இந்துமதி[2]
- பிரதாப் போத்தன்
- கமல்ஹாசன் - கௌரிசங்கர் (சிறப்பு தோற்றம்)
- மாஸ்டர் மனோகர் - ரகுபதி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
பாடல்கள்[தொகு]
சலில் சௌதுரி அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[3] பாடல் வரிகள் கங்கை அமரன் எழுதியுள்ளார்.
# | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
1 | "பூ வண்ணம் போல நெஞ்சம்" | பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா | கங்கை அமரன் |
2 | "கெடச்சா உனக்கு" | எஸ். ஜானகி | |
3 | "நான் என்னும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
4 | "பூ வண்ணம் போல நெஞ்சம்" | பி. சுசீலா |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அழியாத கோலங்கள்-2 படத்தில் நடித்தது பெருமை; அர்ச்சனா, ரேவதி மகிழ்ச்சி". தினத்தந்தி. 21 டிசம்பர் 2019. 23 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "'ஊர்வசி' ஷோபா... மகத்துவ நாயகி; தனித்துவ நடிகை! - நடிகை ஷோபா பிறந்தநாள் இன்று". இந்து தமிழ். 23 செப்டம்பர் 2020. 23 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "பிளாஷ்பேக்: தமிழ் மலையாளத்தில் சாதனை படைத்த வங்க இசை அமைப்பாளர்". தினமலர். 7 செப்டம்பர் 2020. 23 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.