உள்ளடக்கத்துக்குச் செல்

தலைமுறைகள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைமுறைகள் (திரைப்படம்)
இயக்கம்பாலு மகேந்திரா
தயாரிப்புசசிகுமார்
கதைபாலு மகேந்திரா
இசைஇளையராஜா
நடிப்புசசிகுமார் சுப்பிரமணி
இரம்யா சங்கர்
வினோதினி
பாலு மகேந்திரா
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புபாலு மகேந்திரா
கலையகம்கம்பனி புரடக்சன்
விநியோகம்சினிமா பட்டறை
வெளியீடு20 திசம்பர் 2013 (2013-12-20)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தலைமுறைகள் (Thalaimuraigal) பாலு மகேந்திராவின் இயக்கத்தில் 2013 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்.[1] இத்திரைப்படத்தினை எம். சசிகுமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் இளையராஜவின் இசையில்[2], பாலு மகேந்திராவின் எழுத்து, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கத்தில் 2013 இல் இத்திரைப்படம் வெளியானது.

கதை[தொகு]

தலைமுறை என்னும் இடைவெளிகளைத் தாண்டிய நிலையில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவையும் அன்பையும் சொல்கின்றது இத்திரைப்படம். திடுக் திருப்பங்கள் இல்லாமல் பாடல்கள் இல்லாமல், வழவழப்பான நகைச்சுவை இல்லாமல், சண்டைகள் இல்லாமல் எளிய மானுடர்களின் வாழ்வை, உறவுகளின் உன்னதத்தை ரசிகர்களுக்கு உயிர்ப்புடன் கடத்தியுள்ளார் இயக்குநர் பாலு மகேந்திரா.[3]

நடிகர்கள்[தொகு]

மதிப்புரைகள்[தொகு]

படத்தில் பாலுமகேந்திரா அவர்களே முதன்மைக் கதைப்பாத்திரமாக நடித்திருக்கிறார், தமிழ்திரையில் இப்படியொரு கதைப்பாத்திரத்தை இதன் முன்பு நான் கண்டதேயில்லை, பாலுமகேந்திரா பிரமாதப்படுத்தியிருக்கிறார், கண்கலங்க வைக்கும் நடிப்பு என்கிறார் எஸ். இராமகிருஷ்ணன் .[4]

சான்றுகள்[தொகு]

  1. "Thalaimuraigal - Balu Mahendra is back". Sify. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
  2. "Thalaimuraigal first look revealed". Times Of India. 2013-09-21. Archived from the original on 2013-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-09-22.
  3. https://cinema.vikatan.com/movie-review/41860.html[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://www.sramakrishnan.com/?p=3574

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைமுறைகள்_(திரைப்படம்)&oldid=3999846" இலிருந்து மீள்விக்கப்பட்டது