மூன்றாம் பிறை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூன்றாம் பிறை
இயக்குனர் பாலுமகேந்திரா
இசையமைப்பு இளையராஜா
நடிப்பு கமலஹாசன்
ஸ்ரீதேவி
சில்க் ஸ்மிதா
பூர்ணம் விசுவநாதன்
வெளியீடு 1982
கால நீளம் 143 நிமிடங்கள்
மொழி தமிழ்

மூன்றாம் பிறை 1982ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும்.இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமலஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமலஹாசன் 1984 இல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

காதல்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

விபத்தின் காரணமாக மன நோயாளியாக்கப்படும் விஜி (ஸ்ரீதேவி) பின்னர் தவறுதலாக விலைமாதுவாக விற்கப்படுகின்றார். அவரை அங்கு சந்தித்துக் கொள்ளும் நல்ல மனம் கொண்ட சீனுவாசன் (கமலஹாசன்) எனும் ஆசிரியரால் காப்பாற்றப்பட்டு பின் அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். பின்னர் விஜிமீது காதல் கொள்ளும் சீனுவாசன், விஜிக்கு மன நோயின் பாதிப்பு இல்லாமல் போனபின் ரயில் நிலையத்தில் விஜியிடம் பேச இயலும் பல முயற்சிகள் செய்தும் அவரால் பேச முடியாது போகவே விஜியும் அவரைப் பைத்தியக்காரன் என்று பார்வையிடவும் திரைக்கதை முடிவு பெறுகின்றது.

பாடல்கள்[தொகு]

எண். தலைப்பு பாடகர்(கள்) பாடல்வரிகள் நீளம்
1 கண்ணே கலைமானே கே. ஜே. யேசுதாஸ் கண்ணதாசன் 04:13
2 கண்ணே கலைமானே (சோகம்) கே. ஜே. யேசுதாஸ் 01:09
3 நரி கதை கமலஹாசன், ஸ்ரீதேவி வைரமுத்து 04:05
4 பொன்மேனி உருகுதே எஸ். ஜானகி கங்கை அமரன் 04:35
5 பூங்காற்றே கே. ஜே. யேசுதாஸ் கண்ணதாசன் 04:22
6 வானெங்கும் தங்க எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 04:34

விருதுகள்[தொகு]

1984 தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா (இந்தியா)

  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த நடிகர்- கமலஹாசன்
  • வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒளிப்பதிவு- பாலுமகேந்திரா