பிக் பாஸ் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Bigg Boss Tamil
பிக் பாஸ்
வழங்கியவர்கமல்ஹாசன்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
சீசன்கள்1, 2,3
எபிசோடுகள் எண்ணிக்கை202 (as of September 30 2018)
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பாளர்கள்ஸ்டார் விஜய்
திரைப்பிடிப்பு இடங்கள்சென்னை
ஓட்டம்60 நிமிடங்கள் (தோராயமாக.)
தயாரிப்பு நிறுவனங்கள்எண்டெமால் இந்தியா
ஒளிபரப்பு
திரைப்படம்1080i HDTV,478i SDTV

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார்.[1][2]

பருந்துப்பார்வை[தொகு]

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக் பாசை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ இது ஜான் டி மோல் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது டச்சு பிக் பிரதர் வடிவத்தை முலமாகக் கொண்டது. இதில் போட்டியாளர்கள் ("ஹவுஸ்மேட்ஸ்" என்று அறியப்படுபவர்கள்) இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடன் குடியிருக்கும் சகப் போட்டியாளர்கள் இருவரைத் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு வெளியேற்றுவதற்கு அவர்களுக்குள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.இதில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் வெளியேறும் ஒருவரை மக்கள் ஓட்டு தீர்மானிக்கும். இறுதி வாரத்தில், வீட்டில் மீதமிருக்கும் மூவரில், யார் வெற்றியாளர் என்பதைப் பொதுமக்களின் வாக்களிப்புக்கு விடப்படும். பிற பிக் பிரதர் நிகழ்ச்சிகளைப் போலன்றி, இந்தியப் பதிப்பானது வீட்டில் தங்க, பிரபலங்களைப் பயன்படுத்துகிறது, பொது மக்களிலிருந்து யாரையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில்லை.

வீடு[தொகு]

இந்த வீடு அழகானதாக அமைக்கப்பட்டும், அனைத்து வகைகளிலும் நவீன வசதிகளைக் கொண்டதாகவும் உள்ளது, ஆனால் இரண்டு படுக்கையறைகள், நடுவீடு (வாழும் பகுதி), சமையலறை, சேமிப்பறை (ஸ்டோர் ரூம்), இரண்டு கழிப்பறை மற்றும் இரண்டு குளியல் அறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வீடு அழகான அறைக்கலன்களைக் கொண்டும், வீட்டு வளாகத்தில் நீச்சல் குளம், ஒரு பூங்கா, உடற் பயிற்சி சாதனங்கள் போன்றவை உள்ளன. பிக் பாஸ் வீட்டு உறுப்பினர்களுடன் குரல் வழியில் பேச கம்யூன் அறை என்ற அறை உள்ளது, கம்யூன் அறைக்கு வீட்டில் இருப்பவர்களில் யாரை வேண்டுமானாலும் பிக்பாஸ் அழைத்து கலந்துரயாடுவார். வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, இணைய இணைப்பு, பேனா, தாள், புத்தகம், செய்தித்தாள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.

விதிகள்[தொகு]

அனைத்து விதிகளும் பார்வையாளர்களிடம் கூறப்படவில்லை என்றாலும், மிக முக்கியமான விதிகள் தெளிவாக உள்ளன. பங்கேற்பாளர்கள் தமிழைத் தவிர வேறு மொழியில் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அனுமதிக்கப்படும்போது தவிர எந்த நேரத்திலும் இவர்கள் வீட்டு வளாகத்தை விட்டு வெளியேற முடியாது. பிக்பாசுடன் பேசிய விசயங்களில் அவர் யாருடனும் கலந்துரையாடக்கூடாது என்று கூறிய விசயங்களை யாருடனும் கலந்துரையாடக் கூடாது. பகல் நேரத்தில் தூங்கக்கூடாது. தங்களுக்கான உணவை தாங்களே சமைத்து உண்ணவேண்டும். வீட்டு சமையல், வீட்டை சுத்தப்படுத்துதல், கழிவறை, குளியலறை ஆகியவ வேலைகளை வீட்டிலிருப்பவர்கள் குழுவாக பிரிந்து செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு நுண்பேசி (மைக்ரோபோன்) வழங்கப்பட்டிருக்கும் அதை எப்பொதும் தங்கள் கழுத்தில் மாட்டி இருக்க வேண்டும். போட்டியின்போது போட்டியாளர்கள் ஒரே அறையில் போடப்பட்ட கட்டில்களிலில்தான் உறங்கவேண்டும். நீச்சல் குளத்தை ஒரு சமயத்தில் 5 பேர் மட்டுமே பயன்படுத்துவேண்டும். ஏதாவது தீவிரமான சிக்கல் இருந்தால், போட்டியாளர் நேரடியாக வெளியேற்றப்படலாம்.

ஒளிபரப்பு[தொகு]

பிக் பாஸ் ஸ்டார் விஜயில் ஒளிபரப்பப்படுகிறது. ஒவ்வொரு நாளின் அத்தியாயங்களும் முந்தைய நாளின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சனி ஞாயிற்றுக் கிழமை அத்தியாயங்களில் அந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளரின் போட்டி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

போட்டியாளர்கள் பருவம் 1[தொகு]

ஆரவ் நிஃபீஸ், பரணி,ஓவியா ஹெலன் (நெல்சோன்), காயத்ரி ரகுராமன், வையாபுரி, கஞ்சா கருப்பு, சக்தி, ஸ்ரீ, அணுயா, ரைசா, ஆர்த்தி, கணேஷ் வெங்கட்ராமன், ஸ்னேகன், ஜூலியானா (ஜூலி), நமீதா, பிந்து, காஜல், ஹரீஷ் கல்யாண், சுஜா வருணி ஆகியோர்.

போட்டியாளர்கள் பருவம் 2[தொகு]

தாடி பாலாஜி,பொன்னம்பலம்,சென்றாயன், ரித்விகா,யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா,மும்தாஜ், மஹத் ராகவேந்திரா, டேனியல் அன்னி போப்,விஜயலட்சுமி,சாரிக் ஹாசன், நித்தியா பாலாஜி,மஹதிசாரி,ஆனந்த் வைத்தியநாதன்,ரம்யா NSK,வைஷ்ணவி பிரசாத்,ஜனனி ஐயர்

போட்டியாளர்கள் பருவம் 3[தொகு]

பாத்திமா பாபு,லாஸ்லியா,சாக்‌ஷி அகர்வால்,ஜாங்கிரி மதுமிதா,கவின், அபிராமி வெங்கடாச்சலம்,சரவணன்,வனிதா விஜயகுமார்,சேரன்,ஷெரின்,மோகன் வைத்யா,தர்ஷன் தியாகராஜா, சாண்டி,முகென் ராவும்,ரேஷ்மா பசுபுலேட்டி,மீரா மிதுன், கஸ்தூரி

தொடர் விவரங்கள்[தொகு]

பருவம் முதன்மை நடுவர் வாசகம் துவங்கும் நாள் முடியும் நாள் நாட்கள் வசிப்பளார்கள் வெற்றியாளர் இரண்டாம் இடம்
பருவம் 1 கமல்ஹாசன் ஓடவும் முடியாது , ஒளியவும் முடியாது
(Can't run and can't hide.)
25 சூன் 2017 30 செப்டம்பர் 2017 98 19 ஆரவ் சினேகன்
பருவம் 2 நல்லவர் யார்? , கெட்டவர் யார்?
(Who's good? Who's bad?)
17 சூன் 2018 30 செப்டம்பர் 2018 105 17 ரித்விகா[3] ஐஸ்வர்யா தத்தா
பருவம் 3 இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைஃப்.
(This is not only a show, It is our life.)
23 சூன்

2019

06 அக்டோபர் 2019 105 17 முகென் ராவ் சாண்டி மாஸ்டர்

     Male Contestants      Female Contestants

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பாஸ்_தமிழ்&oldid=2811411" இருந்து மீள்விக்கப்பட்டது