பிக் பாஸ் தமிழ் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிக் பாஸ் தமிழ் (பருவம் 2)
Bigg Boss Tamil 2.jpg
நல்லவர் யார்? கெட்டவர் யார்?
வழங்கியவர்கமல்ஹாசன்
நாட்களின் எண்.105
இல்லர்களின் எண்.17
வெற்றியாளர்ரித்விகா
இரண்டாம் இடம்ஐஸ்வர்யா தத்தா
நாடுஇந்தியா
நிகழ்வுகளின் எண்.106
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்விஜய் தொலைக்காட்சி
வெளியீடுசூன் 17, 2018 (2018-06-17) –
30 செப்டம்பர் 2018 (2018-09-30)
பருவ காலவரிசை
← முன்னையது
பருவம் 1
அடுத்தது →
பருவம் 3

பிக் பாஸ் தமிழ் 2 (Bigg Boss Tamil 2) என்பது 18 சூன் முதல் 30 செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டை சேர்ந்த பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஆகும். இந்த பருவத்தையும் பிரபல தமிழ் நடிகர் கமல் ஹாசன் என்பவர் தொகுப்புரை ஆற்றி நடத்தினார். [1]

இந்த இரண்டாம் பருவமானது 15 வசிப்பாளர்கள் கலந்து கொள்ளக்கூடியதாகவும், 60 ஒளிப்படமிகள் கொண்டதாகவும் உள்ளது.[2] பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பதிப்பின் வாசகமாக 'நல்லவர் யார்? கெட்டவர் யார்?' என்ற சொற்றொடர் உள்ளது.[3] சென்னையின் புறநகர்ப் பகுதியான செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி திரைப்பட நகரத்தில் இதற்கான ஆடம்பர வீடு அமைக்கப்பட்டது.[4][5] தவறுகளைச் செய்யும் போட்டியாளர்களுக்கு தண்டனை அதிகரிப்பதற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டில் சிறைச்சாலை அறையும் அமைக்கப்பட்டுள்ளது.[6][7]

இந்த பருவத்தில் வெற்றியாளராகவும் மற்றும் 50 லட்சம் ரொக்கப் பரிசைப் பெற்றவர் நடிகை ரித்விகா ஆவார். நடிகை ஐஸ்வர்யா தத்தா இரண்டாம் இடத்தைப் பிடித்து 5 லட்சம் ரொக்கப் பரிசை வென்றார். மற்ற இறுதிப் போட்டியாளராக நடிகைகள் விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் வந்தனர். பிக் பாஸ் வரலாற்றில் இறுதி சுற்றுக்குல் பெண்கள் மட்டும் நுழைந்த போட்டியாளர் என்றால் அது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியாகும்.

ஒளிபரப்பு[தொகு]

ஒவ்வொரு நாளின் அத்தியாயங்களும் முந்தைய நாளின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமை அத்தியாயங்களில் அந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளரின் போட்டி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

பருவங்கள் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு
பருவம் 2 இரவு 9 மணி முதல் 10:30 மணி வரை

குடும்ப உறுப்பினர்கள்[தொகு]

அசல் நுழைவு[தொகு]

 1. யாஷிகா ஆனந்த், நடிகை, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்துள்ளார்.
 2. பொன்னம்பலம், நடிகர், பல தமிழ்த்திரைப்படங்களில் முன்னணி வில்லன் நடிகராக நடித்துள்ளார்.
 3. மஹத் ராகவேந்திரா, நடிகர், மங்காத்தா, ஜில்லா ஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
 4. டேனியல் ஆன்னி போப், நடிகர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரங்கூன் ஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
 5. வைஷ்ணவி, ஊடகவியலாளர், தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களில் ஒருவராகிய சாவியின் பேத்தி, ரேடியோ மிர்ச்சியில் வானொலி ஒலிபரப்பாளராக உள்ளார்.
 6. ஜனனி, நடிகை, இவர் தெகிடி, அதே கண்கள் போன்ற படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 7. அனந்த் வைத்தியநாதன், குரல் நிபுணர், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர்/சீனியர் நிகழ்ச்சிகளின் குரல் பயிற்சியாளரக உள்ளார்.
 8. ரம்யா என்.எஸ்.கே.., பின்னணிப் பாடகர், தந்தைவழியில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம் ஆகியோரின் பேத்தி, தாய்வழியில் கே. ஆர். ராமசாமியின் பேத்தி
 9. சென்றாயன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.
 10. ரித்விகா, நடிகை, மெட்ராஸ், கபாலி ஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
 11. மும்தாஜ், நடிகை, பல தமிழ் படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 12. தாடி பாலாஜி, நடிகர், பல தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார், விஜய் டிவி-இல் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்.
 13. மமதி ச்சாரி, நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்ற முகங்களைக் கொண்டவர்.
 14. நித்யா, தாடி பாலாஜியின் மனைவி.
 15. ஷாரிக் ஹாஸன், நடிகர் மற்றும் தடகள வீரர், ரியாஸ் கான், உமா ரியாஸ் கான் ஆகியோரின் மகன். மற்றும் பென்சில் (2016) திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
 16. ஐஸ்வர்யா தத்தா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வைல்ட்கால்ட் நுழைவு[தொகு]

 1. விஜயலட்சுமி ஃபெரோஸ், ஒரு தமிழ் நடிகை மற்றும் தயாரிப்பாளர். திரைப்பட இயக்குநரான அகத்தியனின் மகளான இவர் சென்னை 600028, அஞ்சாதே, சென்னை 600028 II ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காகவும், சன் தொலைக்காட்சித் தொடரான நாயகியில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.

விருந்தினர்கள்[தொகு]

வாரம் நாள் விருந்தினர்(கள்) வந்த நோக்கம்
1 நாள் 0 ஓவியா (பிக் பாஸ் தமிழ் 1-ன் போட்டியாளர்) வீட்டில் உள்ளவர்களுக்கு ஆலோசனைக் குறிப்புகள் கொடுக்க, அவர்களை வாழ்த்த.[8][9]
4 நாள் 26 கார்த்தி, சூரி , பாண்டிராஜ் அவர்களின் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை விளம்பரப்படுத்த.[10][11][12][13]
5 நாள் 30 சினேகன் (பருவம் ஒன்றில் இரண்டாம் இடம்பிடித்தவர்) 5வது வாரத்தில் வீட்டின் ஆடம்பர பட்ஜட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பள்ளியில் பாடம் நடத்த நுழைந்தார்.[14][15][16]
நாள் 32 சென்னையின் ஒரு ஆதரவற்றோர இல்லக் குழந்தைகள் வீட்டில் வசிப்பவர்களுடன் நேரம் செலவிட.[17]
6 நாள் 41 பூஜா குமார், ஆண்ட்ரியா ஜெரெமையா, சத்ய பிரகாஷ், ஜிப்ரான் ஆகியோர். விஸ்வரூபம் 2 திரைப்பட விளம்பரத்துக்காக.[18]
7 நாள் 47 ஆர்யா, சதீஸ், திவ்யதர்சினி, சந்தோஷ் பி. ஜெயக்குமார் கஜினிகாந்த் திரைப்பட விளம்பரத்துக்காக.[19]
8 நாள் 54 ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் (முதல் பருவ போட்டியாளர்கள்) மற்றும் இளன் பியார் பிரேம காதல் திரைப்பட விளம்பரத்திற்காக.[20]
நாள் 56 கமலகாசன் (நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக) 8வது வார வெளியேற்றத்தை அறிவிக்க..[21]
11 நாள் 72 மும்தாஜின் தாய், அண்ணன் மற்றும் மருமகன் வாராந்திர ஆடம்பர வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக முறையே மும்தாஜ், ஜனனி மற்றும் யஷிகாவை ஆச்சரியப்படுத்த.[22]
ஜன‍னியின் தாயார் மற்றும் சகோதரி
யாசிகாவின் சகோதிரனும், சகோதரியும்
நாள் 73 டேனியலின் தாயார் மற்றும் காதலி வாராந்திர ஆடம்பர பட்ஜெட் பணியின் ஒரு பகுதியாக டேனியல், ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா ஆகியோரை ஆச்சரியப்படுத்த.[23]
ஐஸ்வர்யாவின் தாயார்
ரித்விக்காவின் பெற்றோர்
ஒரு கோமாளி வாராந்திர ஆடம்பர பட்ஜெட் பணியின் ஒரு பகுதியாக வீட்டில் உள்ளவர்களை மகிழ்விக்க நுழைவு.[23]
நாள் 74 சென்றாயனின் பெற்றோரும், மனைவியும் வாராந்திர ஆடம்பர பட்ஜெட் பணியின் ஒரு பகுதியாக சென்றாயன், பாலாஜி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரை ஆச்சரியப்படுத்த.[24]
நித்யா பாலாஜி (முன்னாள் போட்டியாளர்) மற்றும் போஷிகா பாலாஜி
விஜயலட்சுமியின் கணவரும், மகனும்
13 நாள் 85 - 91 காயத்ரி ரகுராம், ஆர்த்தி கணேஷ், சினேகன், சுஜா வருணி, வையாபுரி (பருவம் 1 போட்டியாளர்கள்) இவர்கள் ஒரு வாரம் வீட்டின் விருந்திரனராக தங்க நுழைந்தனர்.[25]
நாள் 88 - 89 ஆரவ் (பருவம் ஒன்றின் வெற்றியாளர்) இறுதிக்கட்டத்துக்கு நுழையும் நுழைவுச்சாட்டான டிக்கெட் டு பினாலேவுக்கான பணியை அறிவிக்கவும், இவரது திரைப்படமான இராஜ பீமன் படத்தின் முதல் சுவரொட்டியை வெளியிடவும் வீட்டுக்கு வந்தார்.[26]
14 நாள் 97 சம்விதா மற்றும் ஜெயகுமார் (அமேசான் குறுஞ்செய்தி போட்டி வெற்றியாளர்கள்) வாரத்தின் ஆடம்பர பட்ஜெட்டில் வாங்கப்பட்ட பொருட்களை வழங்க.[27]
15 நாள் 99 வைஷ்ணவி பிரசாத் மற்றும் ரம்யா என்எஸ்கே (முன்னாள் போட்டியாளர்கள்) இறுதிக்கட்டத்தில் வீட்டில உள்வர்களுடன் நேரத்தை செலவிடவும், அவர்களுக்கு அறிவுரை வழங்கவும், அவர்களை வாழ்த்தவும்.[28][29][30][31]
நாள் 100 ஷாரிக் ஹுசேன் கான் மற்றும் நித்யா பாலாஜி (முன்னாள் போட்டியாளர்கள்)
நாள் 101 யாஷிகா ஆனந்த் மற்றும் தாடி பாலாஜி (முன்னாள் போட்டியாளர்கள்)
நாள் 102 சென்றாயன் மற்றும் மகத் ராகவேந்திரா (முன்னாள் போட்டியாளர்கள்)
நாள் 103 பொன்ம்பலம் மும்தாஜைத் தவிர முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் இறுதிப் போட்டி கொண்டாட்டத்துக்கு முன்னதாக.[32]
நாள் 104 ஐஸ்வர்யாவின் நன்பர் ஸ்வரூபா ஐஸ்வர்யா, ரித்விகா, ஜன‍னி, விஜயலட்சுமி ஆகியோருடன் நேரத்தைச் செலவிட.[33]
கலையரசன்
அசோக் செல்வன்
கிருஷ்ணா மற்றும் சுனைனா
நாள் 105
பொன்னம்பலத்தைத் தவிர அனைத்து முன்னாள் போட்டியாளர்களும் பிக்பாஸ் 2இன் இறுதி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதால்.
விஜய் தேவரகொண்டா பிக் பாஸ் தமிழ் 2 கோப்பையை வெளிப்படுத்துவதற்கு.
நடனமாடிகள் பிக் பாஸ் வீட்டிலிருந்து நான்காம் இடம்பிடித்த ஜானானியை வெளியே அழைத்துச் செல்ல.
ஆரவ் (முதல் பருவ வெற்றியாளர்) மூன்றாம் இடம் பிடித்த விஜயலட்சுமியை வெளியே அழைத்துச் செல்ல.
கமலகாசன் (நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக) ரித்விக்கா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரை இறுதியில் பிக்பாஸ் மேடைக்கு அழைத்துச் செல்ல.

வாராந்திர சுருக்கம்[தொகு]

வாரம் 1 நுழைவு
 • யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத் ராகவேந்திரா, டேனியல் ஆன்னி போப், வைஷ்ணவி, ஜனனி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா என்.எஸ்.கே., சென்றாயன், ரித்விகா, மும்தாஜ், தாடி பாலாஜி, மமதி ச்சாரி, நித்யா, ஷாரிக் ஹாஸன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் துவக்க நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீட்டின் தலைவர்
 • ஜனனி
தலைவருக்கான போட்டியளர்கள்
 • மஹத் மற்றும் மும்தாஜ்
சிறையில்
 • யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
 • அனந்த், மும்தாஜ், நித்யா, ரித்விகா
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • வீட்டில் வசிப்பவர்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் கருத்து கூறுவது.[34]
 • ஃபீலா பீலா (வீட்டில் உள்ளவர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்படுவர். ஒரு குழுவைச் சேர்ந்தவர் கூறும் கதையை உண்மையா பொய்யா என கண்டறியவேண்டும்.)[34]
 • இவர் யார் என்று தெரிகிறதா (வீட்டில் உள்ளவர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்படுவர், ஒரு குழுவைச் சேர்ந்தவர் கூறும் கதையை எழுதியவர் யார் என கண்டறிய வேண்டும்.)[35]
 • சொன்னபடி கேளு (வீட்டு உறுப்பினர்கள் 2 பேராக 8 அணிகளாக பிரிக்கப்படுவர், ஒவ்வொரு குழுவும் உறையினில் எழுதப்பட்டதைப் பின்பற்ற வேண்டும்.)[35]
வெளியேற்றம்
 • யாருமில்லை.[36]
வாரம் 2
வீட்டின் தலைவர்
 • நித்யா
தலைவருக்கான போட்டியளர்கள்
 • பிக்பாசால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
சிறையில்
 • யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
 • அனந்த், மமதி, மும்தாஜ், பொன்னம்பலம்
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • இந்த வீட்டை யார் சிறப்பாக நிர்வாகம் செய்யக்கூடியவர்கள் ஆண்களா பெண்களா? (வீட்டில் வசிப்வர்கள் பாலின அடிப்படையில் இரு அணிகளாக பிரிக்கப்படுவர். முதலில் ஆண்கள் குழு முதலாளிகளாகவும் பெண்கள் குழு வேலைக்காரர்களாகவும் இருப்பர். ஆண்கள் குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு பெண் பணியார் நியமிக்கப்படுவார் அவரிடம் வேலை வாங்கவேண்டும். பின்னர் பெண்கள் அணியினர் முதலாளிகளாகவும் ஆண்கள் வேலைக்காரர்களாகவும் என மாற இவர்கள் அவர்களிடம் வேலைவாங்க வேண்டும்.)[37][38]
வெளியேற்றம்
 • 14ஆம் நாள் மமதி வெளியேற்றப்பட்டார்.[39]
வாரம் 3
வீட்டின் தலைவர்
 • வைஷ்ணவி
தலைவருக்கான போட்டியளர்கள்
 • சென்றாயன்
சிறையில்
 • யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
 • அனந்த், பாலாஜி, மும்தாஜ், நித்யா, பொன்னம்பலம்
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • தண்ணியில கண்டம் (வீட்டில் வசிப்பவர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்படுவர். ஒவ்வொரு அணிக்கும் துளைகள் இடப்பட்ட ஒரு தண்ணீர் தொட்டி ஒப்படைக்கப்படும். அதில் உள்ள நீரைக் கைகளைக் கொண்டு வெளியேறாமல் தடுத்தபடி இருக்கவேண்டும். ஒரு குழு உறுப்பினர் ஆங்கிலத்தில் பேசினாலோ, ஒலிவாங்கையை அணியாமலோ இருந்தால் எதிரணியிடம் தண்ணீரை இழக்க நேரிடும்.)[40]
வெளியேற்றம்
 • 21ஆம் நாள் அனந்த் வெளியேறினார்.[41]
வாரம் 4
வீட்டின் தலைவர்
 • ரம்யா, நித்யா
தலைவருக்கான போட்டியளர்கள்
 • வீட்டில் உள்ள அனைவரும்
சிறையில்
 • பொன்னம்பலம், யாசிகா, நித்யா, மகத்
வெளியேற்ற பரிந்துரை
 • பாலாஜி, நித்யா, பொன்ம்பலம், யாசிகா
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • திட்டம்போட்டு திருடுறக் கூட்டம் (வீட்டில் வசிப்பவர்கள் திருடர், காவல்துறையினர், பொதுமக்கள் என மூன்று அணிகளாக பிரிக்கப்படுவர். காவலர்களும், பொதுமக்களும் திருடர்களை திருடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். காவலர்கள் தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிப்பர்.)[42]
வெளியேற்றம்
 • நித்யா 28 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.[43]
வாரம் 5
வீட்டின் தலைவர்
 • மகத்
தலைவருக்கான போட்டியளர்கள்
 • பாலாஜி மற்றும் சாரிக்
சிறையில்
 • பாலாஜி
வெளியேற்ற பரிந்துரை
 • ரம்யா, ஐஸ்வர்யா, பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • கனாகாணும் காலங்கள் (பள்ளி சார்ந்த பணிகள்.)[44]
வெளியேற்றம்
 • 35ஆம் நாள் ரம்யா வெளியேற்றப்பட்டார்.[45]
வாரம் 6
வீட்டின் தலைவர்
 • யாருமில்லை
தலைவருக்கான போட்டியளர்கள்
 • யாருமில்லை
சிறையில்
 • பாலாஜி மற்றும் மகத்
வெளியேற்ற பரிந்துரை
 • ஐஸ்வர்யா, மகத், மும்தாஜ், பொன்னம்பலம், வைஷ்ணவி, யாஷிகா
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • எங்க ஏரியா உள்ள வராத (வீட்டில் வசிப்பவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்படுவர். இரு அணிகளுக்கும் வைக்கப்படும் போட்டிகளில் வெல்பவர்களின் அணிக்கு வீட்டின் சில பகுதிகள் உரிமை ஆக்கப்படும். தோன்ற அணியினர் அந்தப் பகுதியில் நுழைய வென்ற அணியினர் கூறும் பணிகளைச் செய்து அதன்பிறகே நூழைய இயலும்.)[46]
வெளியேற்றம்
 • 42 ஆம் நாள் வைஷ்ணவி இரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார்.[47]
வாரம் 7
நுழைவு
 • இரகசிய அறையில் 4 நாட்கள் இருந்த நிலையில் 46 ஆம் நாள் வைஷ்ணவி வீட்டில் மீண்டும் நுழைந்தார்.[19]
வீட்டின் தலைவர்
 • ஐஸ்வர்யா
தலைவருக்கான போட்டியளர்கள்
 • அனைவரும்
சிறையில்
 • ஐஸ்வர்யா, டேனியல், ஜனனி, பாலாஜி தவிர அனைவரும்
வெளியேற்ற பரிந்துரை
 • பாலாஜி, மகத், மும்தாஜ், பொன்னம்பலம், ரித்விகா, ஷாதிக்
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • ராணி மகாராணி (ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக ஆக்கப்படுவார், வீட்டில் உள்ளவர்கள் அவர் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும்.)[48]
வெளியேற்றம்
 • 49 ஆம் நாள் ஷாரிக் வெளியேற்றப்பட்டார்.[49]
வாரம் 8
வீட்டின் தலைவர்
 • ஷாரிக், யாஷிகா
தலைவருக்கான போட்டியளர்கள்
 • ரித்விகா (ஷாரிக்), ஷாரிக்கால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (யாஷிகா)
சிறையில்
 • யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
 • ஜனனி, பொன்னம்பலம், சென்றாயன்
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • என்னைப்போல் ஒருவன் (வீட்டில் இருப்வர்கள் இரு அணிகளாக பிரிக்கப்படுவர், அணியில் உள்ள ஒவ்வொருவரும் எதிரணியில் உள்ள ஒருவரைப்போல நடந்துகொள்ளவேண்டும்.)[50]
வெளியேற்றம்
 • 56ஆம் நாள் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டார்.[21]
வாரம் 9
வீட்டின் தலைவர்
 • ஐஸ்வர்யா
தலைவருக்கான போட்டியளர்கள்
 • ஜனனி
சிறையில்
 • யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
 • டேனியல், ஜனனி, ரித்விகா, சென்றாயன், வைஷ்ணவி
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • பொம்மலாட்டம் (வீட்டில் இருப்பவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்படுவர். வெளியில் இருந்துவரும் மூலப் பொருட்களைக் கொண்டு இரு அணிகளும் பொம்மைகளைச் செய்யவேண்டும். இரு அணிகளிலும் உள்ள ஒரு கண்காணிப்பாளர் எதிரணியினர் தயாரித்த பொம்மைகளை சரிபார்த்து ஏற்பர்/நிராகரிப்பர்.)[51]
வெளியேற்றம்
 • 63ஆம் நாள் வைஷ்ணவி வெளியேற்றப்பட்டார்.[52]
வாரம் 10
வீட்டின் தலைவர்
 • யாஷிகா
தலைவருக்கான போட்டியளர்கள்
 • மகத்
சிறையில்
 • யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
 • ஐஸ்வர்யா, பாலாஜி, மகத், மும்தாஜ், சென்றாயன்
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • உத்தம வில்லன்கள் (வீட்டுவசிப்பாளர்கள் 2 அணிகளாக பிரிக்கப்படுவர், ஒரு பிரிவினர் உச்ச நாயகர்களாகவும் இன்னொரு பிரிவினர் உச்ச வில்லன்களாக இருப்பர். உச்சநாயகர்கள் சிறையின் உள்ள ஒரு போலியை பூட்டுக்களைக் கொண்டு பாதுகாக்கவேண்டும், அதேசமயம் உச்சவில்லன்கள் உச்சநாயகர்களை எரிச்சலூட்டி, பூட்டை திறக்கவேண்டும். இரண்டு அணிகளும் தங்கள் பாத்திரங்களை ஒரு நாள் கழித்து மாற்றிக்கொண்டன, இப்பொழுது சூப்பர் ஹீரோக்கள் அணி குண்டுகளை தயாரிப்பதில் இருந்து சூப்பர் வில்லன்கள் அணியைத் தடுப்பது நோக்கமாக இருந்தது. )[53][54]
வெளியேற்றம்
 • 70ஆம் நாள் மகத் வெளியேற்றப்பட்டார்.
வாரம் 11
வீட்டின் தலைவர்
 • மகத், சென்றாயன்
தலைவருக்கான போட்டியளர்கள்
 • ஐஸ்வர்யா, மும்தாஜ், சென்றாயன் மற்றும் யஷிகா (மகத்), கமல்ஹாசனால் தேர்ந்தெடுக்கப்பட்டார் (சென்றாயன்)
சிறையில்
 • யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
 • பாலாஜி, டேனியல் மற்றும் ஜனனி
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • உறைதல் மற்றும் விடுபடுதல் (பிக் பாஸ் வீட்டுவசிப்பாளர்களை உறையச் சொல்லும்போது உறைந்துவிடவேண்டும் அவர் மீண்டும் விடுபடச் சொல்லும்வரை அசையாமல் இருக்கவேண்டும். இதில் தவறும் வீட்டுவசிப்பாளர்கள் தண்டிக்கப்படுவர்.)[22]
வெளியேற்றம்
 • 77ஆம் நாள் டேனியல் வெளியேற்றப்பட்டார்.[55]
வாரம் 12
வீட்டின் தலைவர்
 • யாசிகா
தலைவருக்கான போட்டியளர்கள்
 • ஐஸ்வர்யா, மும்தாஜ், ரித்விகா, சென்றாயன், விஜயலட்சுமி
சிறையில்
 • யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
 • ஐஸ்வர்யா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், விஜயலட்சுமி
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • தொலை பேசியில் அழைக்கப்படும் வீட்டுவசிப்பாளர் அடுத்த வார வெளியேற்ற பரிந்துரைக்கு நேரடியாக பரிந்துரைக்கப் படுவர். அவர் இந்த வெளியேற்ற பரிந்துரையில் இருந்து தப்ப வேண்டுமானால் அந்த தொலைபேசி அழைப்பில் குறிப்பிடும் ஒரு செயலை ஒரு குறிப்பிட்ட வீட்டுவசிப்பாளரை செய்ய சம்மதிக்க வைத்து, அச்செயலை செய்விக்க வேண்டும்.[56]
வெளியைற்றம்
 • 84ஆம் நாள் சென்றாயன் வெளியேற்றப்பட்டார்.[57]
வாரம் 13
வீட்டின் தலைவர்
 • ரித்விகா
தலைவருக்கான போட்டியளர்கள்
 • வீட்டில் உள்ள அனைவரும்
சிறையில்
 • TBD
வெளியேற்ற பரிந்துரை
 • ரித்விகா, ஐஸ்வர்யா, மும்தாஜ், விஜயலட்சுமி
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • வீட்டிலிருந்த விருந்தினர்களாக தங்கியிருந்த முதல் பருவ போட்டியாளர்களுடன் சில பணிகளில் ஈடுபட்டனர் விருந்தினர்கள் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்தனர்.[26]
 • இறுதிப் போட்டிக்கு நுழையும் போட்டி - சுத்தி சுத்தி வந்தீங்க (வீட்டுவசிப்பாளர்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் நீர் நிறைந்த கிண்ணம் தரப்படும். அந்தக் கிண்ணத்தை ஏந்தி வட்டமான ஒரு மேடையில் சுற்றிவரவேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் தண்ணீர் அளவு குறைந்தவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். இதில் இறுதிவரை தாக்குப்பிடிக்கும் வெற்றியாளர் இறுதிவாரத்துக்கான நுழைவுச்சாட்டை பெற்வார்.)[26]
வெளியேற்றம்
 • 91ஆம் நாள் மும்தாஜ் வெளியேற்றப்பட்டார்
வாரம் 14
வீட்டின் தலைவர்
 • ஒருவரும் இல்லை
தலைவருக்கான போட்டியளர்கள்
 • இல்லை
சிறையில்
 • யாருமில்லை
வெளியேற்ற பரிந்துரை
 • ஐஸ்வர்யா, பாலாஜி, ரித்விகா, விஜயலட்சுமி, யாசிகா
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • வீட்டில் வசிப்பவர்களுக்கு பல்வேறு பணிகள் கொடுக்கப்படும் அதில் ஈடுபடுபவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். இறுதிவரையிலான போட்டிகளில் அதிகபட்ச புள்ளிகளைப் பெறுபவர்களுக்கு எதிர்பாராத பரிசு அளிக்கப்படும்.[58]
வெளியேற்றம்
 • 98ஆம் நாள் பாலாஜியும், யாஷிகாவும் வெளியேற்றப்பட்டனர்.[27][59]
வாரம் 15 இறுதி வரம்
வீட்டின் தலைவர்
 • ஒருவரும் இல்லை
தலைவருக்கான போட்டியளர்கள்
 • ஒருவரும் இல்லை
சிறையில்
 • யாருமில்லை
ஆடம்பர பட்ஜட் பணிகள்
 • இல்லை
இறுதியாளர்கள்

இறுதி வாரத்தில் பிக்பாசில் வெற்றிபெற மக்களின் வாக்குகளை எதிர்நோக்கி இருந்த இறுதியாளர்கள் பின்வறுமாறு:

ஐஸ்வர்யா த‍த்தா
ஜன‍னி ஐயர்
ரித்விகா
விஜயலட்சுமி பெரோஸ்
வெற்றியாளர் ரித்விகா
இரண்டாம் இடம் ஐஸ்வர்யா த‍த்தா
மூன்றாம் இடம் விஜயலட்சுமி பெரோஸ்
நாக்காம் இடம் ஜன‍னி ஐயர்

மேற்கோள்கள்[தொகு]

 1. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-season-2-the-reality-shows-launch-date-revealed/articleshow/64447687.cms?from=mdr
 2. "சேரெல்லாம் சைஸ் மாறிப் போச்சு.. பாத்ரூமுக்குள்ளேயே தம்மடிக்கலாம்.. புதுப் பொலிவுடன் பிக் பாஸ் வீடு!" (in ta). tamil.filmibeat.com. 2018-06-14. https://tamil.filmibeat.com/television/bigboss-season-2-house-new-additions-054071.html. 
 3. "Bigg Boss Tamil season 2 promo 2: Who is the good guy, asks Kamal Haasan" (in en). hindustantimes.com. 2018-05-20. https://m.hindustantimes.com/tv/bigg-boss-tamil-season-2-promo-2-who-is-the-good-guy-asks-kamal-haasan/story-ndBDtmNrlWEw84TzrigCHN.html. 
 4. "Bigg Boss Tamil Season 2: New promo videos featuring Kamal Haasan released - Times of India". The Times of India. https://m.timesofindia.com/tv/news/tamil/bigg-boss-tamil-season-2-new-promo-videos-featuring-kamal-haasan-released/articleshow/64481042.cms. 
 5. "Bigg Boss House Photos (New): Colourful Bigg Boss Tamil season 2 House visit" (in en-US). WORLDHAB. 2018-06-15. https://www.worldhab.com/new-bigg-boss-tamil-season-2-house/. 
 6. "புதிய ஜெயில் அறையுடன் 'பிக் பாஸ் - சீசன் 2'வின் அசத்தலான செட்! EXCLUSIVE புகைப்படங்கள்!! - NDTV Tamil Cinema" (in ta). NDTV Tamil Cinema. 2018-06-14. http://movies.ndtv.com/tamil/kollywood/bigg-boss-2-tamil-all-set-for-action-1867559. 
 7. "‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் ஜெயில்: இந்த முறை என்ன மாதிரியெல்லாம் தண்டனை இருக்கப் போகுதோ..." (in ta). The Hindu Tamil. http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article24162309.ece. 
 8. Bigg Boss Tamil 2 highlights: Oviya re-enters, this time as a guest; Kamal Haasan returns with a bang
 9. "ஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்? #BiggBossTamil" (ta) (2018-06-18). பார்த்த நாள் 18 June 2018.
 10. "Bigg Boss Tamil 2 written update, July 13, 2018: Actors Karthi, Soori and Director Pandiraj cheer up the inmates - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-2-written-update-july-13-2018-actors-karthi-soori-and-director-pandiraj-cheer-up-the-inmates/articleshow/64986887.cms. 
 11. "Karthi and Soori enter Bigg Boss house! - Tamil Movie News - IndiaGlitz.com". IndiaGlitz.com. https://www.indiaglitz.com/karthi-and-soori-enter-bigg-boss-house-tamil-news-217272. 
 12. "Bigg Boss Promo 2 - July 13 2018" (in en-US). Behind Talkies. 2018-07-13. https://behindtalkies.com/karthi-troll-bigg-boss-housemates/. 
 13. S, KARTHIKEYAN. "பிக்பாஸ் வீட்டுக்குள் 'கடைக்குட்டி சிங்கம்'..!" (in TA-IN). Eenadu English Portal. Archived from the original on 14 ஜூலை 2018. https://web.archive.org/web/20180714164346/http://tamil.eenaduindia.com/Entertainment/Kollywood/2018/07/13171210/Karthi-and-Soori-enter-Bigg-Boss-house.vpf. 
 14. "Bigg Boss Tamil 2 weekly updates: Ramya, Aishwarya, Balaji, Ponnambalam, Janani Iyer face elimination- Entertainment News, Firstpost" (in en-US). Firstpost. https://www.firstpost.com/entertainment/bigg-boss-tamil-2-weekly-updates-ramya-aishwarya-balaji-ponnambalam-janani-iyer-face-elimination-4773861.html. 
 15. "சினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு" (in ta). Filmibeat. 2018-07-18. https://tamil.filmibeat.com/television/snehan-shocks-bigg-boss-2-tamil-viewers-054590.html. 
 16. "Episode 30 Highlights: பள்ளி பருவத்திற்கே அழைத்துச் செல்லப்பட்ட பிக்பாஸ் குடும்பத்தினா் - Samayam Tamil" (in ta). samayam Tamil. 2018-07-18. https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/big-boss-2-tamil-snehan-arrived-in-big-boss-house-again/articleshow/65030585.cms. 
 17. Bigg Boss Tamil Season 2 Jul 19 Preview: Housemates Turn Emotional As Orphaned Kids Pay Them A Visit
 18. Bigg Boss Tamil 2 weekly updates: Contestants escape eviction; Vishwaroopam 2 team visits the house
 19. 19.0 19.1 Bigg Boss 2 Tamil, episode 48: Ghajinikanth team in house, Vaishnavi out of secret room
 20. Bigg Boss Tamil 2 written update, 10 August 2018: Aishwarya Dutta becomes captain for the second time
 21. 21.0 21.1 Bigg Boss Tamil 2 eviction: Ponnambalam is the sixth contestant to be eliminated from Kamal Haasan's show
 22. 22.0 22.1 Bigg Boss Tamil 2 written update, 28 August 2018: Nithya's letter leaves Bhalajie heartbroken
 23. 23.0 23.1 Bigg Boss Tamil 2 written update, 29 August 2018: Aishwarya Dutta's mom apologises to Bhalajie and Mumtaz
 24. Bigg Boss Tamil 2 written update, 30 August 2018: Sendrayan gets a pleasant surprise
 25. Bigg Boss Tamil 2 written update, 10 September 2018: Season 1 contestants visit the house
 26. 26.0 26.1 26.2 Bigg Boss Tamil 2 weekly updates: Mumtaz evicted; Arav launches first look of Raja Bheema
 27. 27.0 27.1 Bigg Boss Tamil 2 written update, 22 September 2018: Bhalajie evicted from reality show hosted by Kamal Haasan
 28. Bigg Boss Tamil 2 written update, 24 September 2018: Vaishnavi Prasad and Ramya NSK played a crazy prank with the inmates
 29. Bigg Boss Tamil 2 written update, 25 September 2018: Garbage throwing act leaves Nithya distressed over Aishwarya
 30. Bigg Boss Tamil 2 written update, 26 September 2018: Bhalajie enters the house; Inmates revisit the controversial moments
 31. Bigg Boss Tamil 2 written update, 27 September 2018: Sendrayan and Mahat Raghavendra visit the house
 32. Bigg Boss Tamil 2 day 104 highlights: Finalists and ex-contestants gather for a reunion - The Times of India
 33. "Bigg Boss Tamil 2 grand finale - Live updates: Janani Iyer eliminated from the show". IB Times. பார்த்த நாள் 29 September 2018.
 34. 34.0 34.1 Bigg Boss Tamil 2 Written update, June 19th, 2018: Janani Iyer finishes the luxury budget task successfully
 35. 35.0 35.1 Bigg Boss Tamil 2 written update, June 21, 2018: Inmates lose points for breaking the rules
 36. Bigg Boss Tamil 2: Meet the contestants of Kamal Haasan’s show
 37. Bigg Boss 2 Tamil, episode 10: Mumtaz refuses to obey her ‘masters’
 38. Bigg Boss Tamil 2 written update, June 28, 2018: Men’s team became assistants for the luxury budget task
 39. Bigg Boss Tamil 2 eviction: Mamathi Chari eliminated from Kamal Haasan-hosted show
 40. Bigg Boss 2 Tamil, episode 17: Vaishnavi’s decision as captain questioned by Sharik
 41. Bigg Boss Tamil 2 eviction: Ananth Vaidyanathan eliminated from Kamal Haasan's show
 42. Bigg Boss 2 Tamil, episode 24: Ponnambalam doesn’t understand double entendre, but delivers it well
 43. Boss Tamil 2 third elimination: Nithya evicted from Kamal Haasan-hosted show
 44. Bigg Boss Tamil 2 written update, July 17, 2018: The housemates become students
 45. Bigg Boss Tamil elimination: Ramya evicted from Kamal Haasan's show
 46. Bigg Boss 2 Tamil, episode 38: Aishwarya feels housemates are victimising her
 47. Bigg Boss 2 Tamil, episode 43: Vaishnavi sent to secret room, housemates think she is evicted
 48. Bigg Boss 2 Tamil, episode 45: Aishwarya dumps trash on Balaji’s head
 49. Bigg Boss Tamil 2 written update, August 5, 2018: Shariq Hassan gets evicted from the house
 50. Bigg Boss Tamil 2 written update, August 7, 2018: Housemates enjoy the role reversal task
 51. Bigg Boss Tamil 2 written update, August 14, 2018: Daniel and Mahat get into an ugly fight
 52. Bigg Boss 2 Tamil, episode 64: Vaishnavi is evicted, Mahat feels betrayed by Yaashika
 53. Bigg Boss Tamil 2 written update, August 22, 2018: Mahat takes upper hand on Mumtaz, Daniel during the new task
 54. Bigg Boss Tamil 2 written update, August 23, 2018: Daniel and Mahat get into a fight
 55. Bigg Boss Tamil 2 eviction: Danny is the ninth contestant to be eliminated from Kamal Haasan's show
 56. Bigg Boss Tamil 2 written update, September 4, 2018: Aishwarya Dutta tricks Sendrayan
 57. Bigg Boss Tamil 2 written update, September 9, 2018: Sendrayan gets evicted
 58. Bigg Boss Tamil 2 written update, 17 September 2018: Vijayalakshmi and Yashika ace their tasks
 59. Bigg Boss Tamil 2 elimination: Yashika evicted; Riythvika Aishwarya, Vijayalakshmi enter grand finale

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பாஸ்_தமிழ்_2&oldid=3222855" இருந்து மீள்விக்கப்பட்டது