பிக் பாஸ் தமிழ் 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக் பாஸ் தமிழ் (பருவம் 4)
தப்புனா தட்டி கேட்பேன் நல்லத தட்டி கொடுப்பேன்
வழங்கியவர்கமல்ஹாசன்
நாட்களின் எண்.105
இல்லர்களின் எண்.18
வெற்றியாளர்ஆரி அர்ஜுனன்
இரண்டாம் இடம்பாலாஜி முருகதாஸ்
நாடுஇந்தியா
நிகழ்வுகளின் எண்.106
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்விஜய் தொலைக்காட்சி
வெளியீடுஅக்டோபர் 4, 2020 (2020-10-04) –
17 சனவரி 2021
பருவ காலவரிசை
← முன்னையது
பருவம் 3
அடுத்தது →
பருவம் 5

பிக் பாஸ் தமிழ் 4 (Bigg Boss 4) என்பது 2020 அக்டோபர் 4 முதல் 2021 சனவரி 17 வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இது பிக் பாஸ் தமிழின் நான்காவது பருவம் ஆகும்.[1] இந்த நான்காவது பருவத்தையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க,[2] 18 வசிப்பாளர்கள் கலந்து கொள்ளக்கூடியதாகவும், 60 ஒளிப்படமிகள் கொண்டதாகவும் உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வு 17 சனவரி 2021 அன்று ஒளிபரப்பாகி, 106 நாட்களுடன் நிறைவு பெற்றது. முதல் வெற்றியாளர் ஆரி அர்ஜுனா மற்றும் இரண்டாம் வெற்றியாளர் பாலாஜி முருகதாஸ் ஆவார்கள்.[3]

ஒளிபரப்பு[தொகு]

ஒவ்வொரு நாளின் அத்தியாயங்களும் முந்தைய நாளின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமை அத்தியாயங்களில் அந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளரின் போட்டி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

ஒளிபரப்பான திகதி திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு
4 அக்டோபர் 2020 - 10 சனவரி 2021 இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை இரவு 9:30 மணி முதல் 11 மணி வரை
11 சனவரி 2021 - 17 சனவரி 2021 இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை மாலை 6 மணிக்கு

போட்டியாளர்கள் நிலை[தொகு]

போட்டியாளர்கள் நுழைந்த நாள் வெளியேறியநாள் நிலை
ஆரி அர்ஜுனா நாள் 1 நாள் 105 வெற்றியாளர்
பாலாஜி முருகதாஸ் நாள் 1 நாள் 105 2வது இடம்
ரியோ ராஜ் நாள் 1 நாள் 105 3வது இடம்
ரம்யா பாண்டியன் நாள் 1 நாள் 105 4வது இடம்
சோமுசேகர் நாள்1 நாள் 105 5வது இடம்
கேப்ரியெல்லா சார்ல்டன் நாள் 1 நாள் 102 தானாக வெளியேறினார்
ஷிவானி நாராயணன் நாள் 1 நாள் 98 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
ஆஜீத் கலிக் நாள் 1 நாள் 91 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
அனிதா சம்பத் நாள் 1 நாள் 84 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
அர்ச்சனா சந்தோக் நாள் 11 நாள் 77 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
நிஷா நாள் 1 நாள் 70 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
ஜித்தன் ரமேஷ் நாள் 1 நாள் 69 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
சனம் ஷெட்டி நாள் 1 நாள்63 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
சம்யுக்தா கார்த்திக் நாள் 1 நாள் 56 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
சுசித்ரா நாள் 28 நாள் 49 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
சுரேஷ் சக்ரவர்த்தி நாள் 1 நாள் 35 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
வேல்முருகன் நாள் 1 நாள் 28 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்
ரேகா நாள் 1 நாள் 14 மக்கள் வாக்களிப்பால் வெளியேற்றப்பட்டார்

தங்குபவர்கள்[தொகு]

தோற்றத்தின் வரிசையில் பங்கேற்பாளர்கள் மற்றும் வீட்டிற்குள் நுழைந்தவர்கள்:[4][5]

  • ரியோ ராஜ்
  • சனம் ஷெட்டி
    • திரைப்பட நடிகை மற்றும் உருமாதிரிக் கலைஞர் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றறவர்.
  • ரேகா
    • முன்னாள் பிரபல நடிகை.
  • பாலாஜி முருகதாஸ்
    • ஒரு உடற்பயிற்சியாளர் மற்றும் வடிவழகர். 2018 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா வெற்றியாளர்.
  • அனிதா சம்பத்
    • பிரபல செய்தி வாசிப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை.
  • சிவானி நாராயணன்
  • ஜித்தன் ரமேஷ்
    • நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்.
  • வேல்முருகன்
    • தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார்.
  • ஆரி அர்ஜுனா
    • தமிழ்த் திரைப்பட நடிகர். நெடுஞ்சாலை (2014), மாயா (2015) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
  • சோமுசேகர்
    • விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பின 'அழகிய தமிழ் மகன்' என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றவர். உடல்பயிற்சியாளர் மற்றும் வடிவழகர்.
  • கேப்ரியெல்லா சார்ல்டன்
    • தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை. ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 இல் வெற்றியாளர்.
  • "அறந்தாங்கி "நிஷா
    • விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு? 5 என்ற நிகழ்ச்சியின் போட்டியாளர், திரைப்பட நடிகை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினி.
  • ரம்யா பாண்டியன்
    • தமிழ்த் திரைப்பட நடிகை. ஜோக்கர் (2016) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
  • சம்யுக்த கார்த்திக்
    • தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி.
  • சுரேஷ் சக்ரவர்த்தி
    • திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர்.
  • ஆஜீத் கலிக்
    • பின்னணி பாடகர்.

வைல்ட்கால்ட் நுழைவு[தொகு]

  • அர்ச்சனா சந்தோக்
    • தொலைக்காட்சி தொகுப்பாளினி.
  • சுசித்ரா
    • வானொலி ஒலிபரப்பாளர்.

பிக் பாஸ் சிறை[தொகு]

ஒவ்வொரு வாரமும் வீட்டுக்கு தேவையான பணத்திற்காக சிறப்பாக செயல்படாத இரண்டு போட்டியாளர்களை சக போட்டியாளர்களின் வாக்கு விகிதத்தில் பிக் பாஸ் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த சிறையில் வீட்டில் இருக்கும் ஆடம்பர வசதிகள் இல்லை. ஒரு கண்ணாடி அறையில் ஒரு உலோக கட்டிலும் தரையில் மற்றொரு படுக்கை உள்ளது.

கிழமை சிறை நாட்கள்
1 எவரும் இல்லை எவரும் இல்லை
2 ரமேஷ் சிவானி நாள் 12
3 ஆரி ஆஜீத் நாள் 19
4 ஆரி அனிதா நாள் 26
5 எவரும் இல்லை எவரும் இல்லை
6
7 பாலாஜி சுசித்ரா நாள் 47
8 ஆரி ரியோ நாள் 54
9 எவரும் இல்லை எவரும் இல்லை
10 ரமேஷ் அனிதா நாள் 67
நிஷா நாள் 69
11 கேப்ரியெல்லா சிவானி நாள் 74
12 ஆஜீத் கேப்ரியெல்லா நாள் 81
13 ஆரி பாலாஜி நாள் 89
14 எவரும் இல்லை எவரும் இல்லை
15 எவரும் இல்லை எவரும் இல்லை

     பெண் போட்டியாளர்      ஆண் போட்டியாளர்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்- ஞாயிறு இரவு 9:30 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் 4
(4 அக்டோபர் 2020 - 10 சனவரி 2021)
அடுத்த நிகழ்ச்சி
தேன்மொழி பி.ஏ
(10 ஜூன் 2020 - 3 அக்டோபர் 2020 )
தேன்மொழி பி.ஏ
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பாஸ்_தமிழ்_4&oldid=3751363" இருந்து மீள்விக்கப்பட்டது