இரட்டை ரோஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரட்டை ரோஜா
இரட்டை ரோஜா தொடர்.jpg
வகை
இயக்குனர்மணிகண்ட குமார்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்நாராயணன்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்ஸ்ருதி ஸ்டூடியோஸ்
ஒளிபரப்பு
சேனல்ஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்12 ஆகத்து 2019 (2019-08-12) –
ஒளிபரப்பில்

இரட்டை ரோஜா என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ஆகும். இது இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் சகோதரிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குடும்பப் பின்னணியைக் கொண்டது. இந்த தொடர் 12 ஆகத்து 2019 முதல் ஒளிபரப்பானது. [1] இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அக்கா செல்லலு என்ற தெலுங்கு மொழி தொடரின் தமிழ் தயாரிப்பாகும்.[2]

இந்தத் தொடரின் நாயகிகளான அனுவாகவும், அபியாகவும் இரட்டைக் கதாபாத்திரங்களில் சாந்தினி தமிழரசன்[3] நடிக்கிறார். அண்ணனாக நிமேஷ் சாகரும், தம்பியாக அக்‌ஷயும் நடிக்கிறார்கள். மணிகண்ட குமார் இந்தத் தொடரை இயக்க, ஸ்ருதி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் நாராயணன், இந்தத் தொடரையும் தயாரிக்கிறார்.[4][5][6]

கதைச்சுருக்கம்[தொகு]

இரட்டை சகோதரிகளான அனு, அபி இருவரும் ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும், எதிரெதிர் துருவங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அக்கா அனு சுயநலம் கொண்டவள். தனக்கான விஷயத்தை மட்டுமே யோசிப்பவள். தங்கை அபி அனுவுக்கு நேரெதிர், அபி. குடும்பத்துக்காகவே யோசிப்பவள். இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பியை மணப்பதால் ஏற்படும் பிரச்சினைகளும், தீர்வுகளும்தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • ஷிவானி நாராயணன் (பகுதி:1-157) → சாந்தினி தமிழரசன் (பகுதி: 157-தற்போது)[7]
  • அபி - குடும்பத்துக்காகவே யோசித்து, அவர்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் துணியும் தன்மையுள்ளவளாக இருக்கிறார்.
  • அனு - அக்காவான அனு, தனக்கான விஷயத்தை மட்டுமே யோசிப்பவர், சுயநல குணம் கொண்டவர்
 • நிமேஷ் சாகர் - சந்தோஷ்
  • ஒழுக்கமான பையன் சஞ்சீவின் அண்ணன்.
 • அக்‌ஷய் கமல்- சஞ்சீவ்
  • சந்தோஷ் - தம்பி, கோபக்கார குணம் கொண்டவன்.

துணை கதாபாத்திரம்[தொகு]

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்தத் தொடரின் நாயகியாக பகல் நிலவு தொடர் புகழ் ஷிவானி நாராயணன், அனு, அபி என இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தற்போது சாந்தினி தமிழரசன் இந்த வேடங்களில் நடிக்கிறார். இவர் தாழம்பூ தொடரில் நடித்துள்ளார். அண்ணனாக நிமேஷ் சாகர், தம்பியாக அக்‌ஷய் நடிக்கிறார்கள். சாந்தினியின் அப்பாவாக பிரபல நடிகர் பூவிலங்கு மோகன் நடிக்கிறார். அம்மாவாக சபிதா ஆனந்த் நடிக்கிறார். நாயகனின் அப்பாவாக ராஜாவும், அம்மாவாக தமிழ்ச்செல்வியும் நடிக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : திங்கள் - வெள்ளி 1:30 PM மணி தொடர்கள்
Previous program இரட்டை ரோஜா
(ஒளிபரப்பில்)
Next program
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் -
ஜீ தமிழ் : திங்கள் - வெள்ளி 2:00 PM மணி தொடர்கள்
Previous program இரட்டை ரோஜா Next program
நிறம் மாறாத பூக்கள் என்றென்றும் புன்னகை
(ஒளிபரப்பில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_ரோஜா&oldid=3015309" இருந்து மீள்விக்கப்பட்டது