நிறம் மாறாத பூக்கள் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிறம் மாறாத பூக்கள்
வகைகாதல்
நாடகம்
எழுத்துச. குமரேசன்
இயக்கம்ம. இனியன் தினேஷ்
ப.நிரவி பாண்டியன்
நடிப்பு
  • முரளி
  • முஹம்மட் அஸீம்
  • நிஷிமா
  • தீபா ஜெயன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்593
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்நீலிமா ராணி[1]
தொகுப்புச. முகேஷ்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்9 அக்டோபர் 2017 (2017-10-09) –
21 பெப்ரவரி 2020 (2020-02-21)
வெளியிணைப்புகள்
இணையதளம்

நிறம் மாறாத பூக்கள் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 9, 2017 முதல் பிப்ரவரி 21, 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 593 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

இந்த தொடரை ம. இனியன் தினேஷ், ப.நிரவி பாண்டியன் மற்றும் தனுஷ் ஆகியோர் இயக்க முரளி, நிஷிமா, அஷ்மிதா, முஹம்மட் அஸீம், தீபா ஜெயன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2] இந்த தொடரை பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா ராணி என்பவர் தயாரித்துள்ளார்.[3][4]

கதைச்சுருக்கம்[தொகு]

ராம் மற்றும் வெண்மதி சிறுவயது நண்பர்களாக இருக்கும் போது இருவரும் காதலித்தனர், ஒரு விபத்தில் ராம் பழைய நினைவுகளை மறந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதே நிலையில் சென்னைக்கு வருகின்றார், சில வருடம் கழிந்து ராம் கீர்த்தி எனும் பெண்ணை காதலிக்கிறார். தனது இளம் வயது காதலனை தேடி சென்னைக்கு வரும் வெண்மதி மறுபடியும் ராமை சந்திக்கிறாள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ராம் வெண்மதியை திருமணம் செய்கின்றான். இந்த விடயம் கீர்த்திக்கு தெரியவர இவர்களின் மூவரின் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • முரளி (2017-2020) → முஹம்மட் அஸீம் (2020) - ராம்
  • நிஷிமா - கீர்த்தி
  • அஷ்மிதா (பகுதி:1-49) → விஷ்ணுபிரியா (பகுதி:50) → தீபா ஜெயன் - வெண்மதி ராம்

துணை கதாபாத்திரம்[தொகு]

  • அரவிந்த் → நவீன் விக்டர் - அன்பு
  • தக்ஷாயினி - ராமின் தாய்
  • கீதாஞ்சலி - ஜோதி
  • ஸ்வப்னா
  • தரிஷ் - சதிஷ்
  • ரவி
  • டேவிட்
  • ராஜ்
  • நேஹா

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[5] மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை நிஷிமா பரிந்துரை
விஷ்ணுப்பிரியா பரிந்துரை
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் முரளி பரிந்துரை

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி பகல் 1:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நிறம் மாறாத பூக்கள்
(12 ஆகஸ்ட் 2019 - 21 பெப்ரவரி 2020)
அடுத்த நிகழ்ச்சி
தேவதையை கண்டேன்
(9 அக்டோபர் 2017 – 9 ஆகஸ்ட் 2019)
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி பகல் 2 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நிறம் மாறாத பூக்கள்
(9 அக்டோபர் 2017 – 9 ஆகஸ்ட் 2019)
அடுத்த நிகழ்ச்சி
- இரட்டை ரோஜா