சாந்தினி தமிழரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தினி தமிழரசன்
பிறப்புசாந்தினி தமிழரசன்
12 ஆகத்து 1992 (1992-08-12) (அகவை 31)[1]
நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு
படித்த கல்வி நிறுவனங்கள்எத்திராஜ் மகளிர் கல்லூரி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
நந்தா (2004–தற்போது வரை)

சாந்தினி தமிழரசன் (Chandini Tamilarasan) என்பவர் இந்தியத் தமிழ் நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் பாக்யராஜின் சித்து+2 (2010) படம் மூலம் அறிமுகமானார். (2010), நான் ராஜாவாகப் போகிறேன் (2013) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்..

தொடக்க கால வாழ்வு[தொகு]

இவர், தமிழரசன் (தந்தை) என்பவருக்கும், பத்மாஞ்சலி (தாய்) என்பவருக்கும் மகளாகப் பிறந்தவர் ஆவார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் வளர்ந்த இவர் அண்ணா சாலை, சர்ச் பார்க், தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் பாடத்தில் தனது இளங்கலைப் பட்டம் பயின்றார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

இவர் தனக்கு 17 வயதாகும் போது, 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை அழகிப்போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். ஆனால், முதல் மூன்று இடங்களில் தேர்வாகவில்லை.[2] அதன் பிறகு 2009 ஆம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதன் பிறகு இயக்குநர் பாக்யராஜிடம் இருந்து அழைப்பு வந்து தனது புதிய முயற்சிக்காக திரைத்துறைக்கான தோற்ற அமைப்பு சோதனையில் கலந்து கொண்டார்.[3][4] பின்னதாக அவர் பாக்யராஜிடம் தனது திறமையை நிரூபித்து சித்து +2 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இத்திரைப்படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் உடன் கதாநாயகியாக நடித்தார். இத்திரைப்படம் சிறிது தாமதத்திற்குப் பின் திசம்பர் 2010 இல் திரைக்கு வந்தது. சராசரியான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் வசூலில் மிகவும் பின்தங்கியே இருந்தது.[5] 2010 ஆம் ஆண்டின் நடுவில் அவர் படித்துறை என்ற புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமானார். இத்திரைப்படத்தில் புதியவர்கள் அறிமுகமாக படத்தை முன்னணி நடிகர் ஆர்யா தயாரித்தார். இப்படம் திரைக்கு வரவில்லை.[6] இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த போதிலும், அவற்றை மறுத்து விட்டு தனது படிப்பைத் தொடர்ந்து முடிக்க கல்லூரிக்குச் சென்றார்.[7] தனது பட்டப்படிப்பை 2014 ஆம் ஆண்டில் முடித்தார்..[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chandini Tamilarasan Height, Age, Biography, Wiki, Boyfriend, Family". Fabpromocodes.
  2. "Archived copy". Archived from the original on 4 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-04 10. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: archived copy as title (link)CS1 maint: Archived copy as title (link) "Archived copy". Archived from the original on 4 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-04-10.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. Pillai, Sreedhar (2009-10-30). "Chandini from Chennai". TNN. The Times of India இம் மூலத்தில் இருந்து 2014-01-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140109052340/http://articles.timesofindia.indiatimes.com/2009-10-30/news-interviews/28102435_1_siddhu-tamil-film-industry-arya. பார்த்த நாள்: 2013-09-15. 
  4. K. Jeshi (2011-01-07). "On a roll". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
  5. "Cinema Plus / Film Review : Just pass". The Hindu. 2010-12-12. 
  6. "Cinema Plus / Columns : Itsy-bitsy". The Hindu. 2010-06-25. Archived from the original on 2010-11-26. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. "'I Like Stepping out of my Comfort Zone'". The New Indian Express.
  8. "Chandini completes her degree, ready to focus on acting". The Indian Express. 9 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தினி_தமிழரசன்&oldid=3586883" இலிருந்து மீள்விக்கப்பட்டது