எத்திராஜ் மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எத்திராஜ் மகளிர் கல்லூரி
குறிக்கோளுரைமுயல்க, நாடுக, தேடுக ஆனால் இசையாதீர்
வகைதன்னாட்சி
உருவாக்கம்1948இல் வழக்கறிஞர் வே. ல. எத்திராஜ்
நிறுவுனர்வே. இல. எத்திராஜ்
தலைவர்வே.மா. முரளிதரன்
முதல்வர்முனைவர். ஏ. நிர்மலா
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்www.ethirajcollege.in

எத்திராஜ் மகளிர் கல்லூரி (Ethiraj College for Women) சென்னையில் அமைந்துள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாகும். எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளையையும் இக்கல்லூரியையும் 1948ஆம் ஆண்டு முன்னணி வழக்கறிஞராக இருந்த வே.இல.எத்திராஜ் நிறுவினார்.[1] இந்த அறக்கட்டளையின் தற்போதைய தலைவராக அவர் குடும்பத்தில் வந்த வே. மா. முரளிதரன் உள்ளார்.

வரலாறு[தொகு]

1948ஆம் ஆண்டு வேலூர் இலட்சுமணசுவாமி எத்திராஜ் முதலியாரால் துவங்கப்பட்டு முதல் பத்தாண்டுகளில் பொருளியல், தாவரவியல், வேதியியல், வரலாறு,விலங்கியல் மற்றும் ஆங்கில இலக்கியப் பாடங்களில் பட்டப்படிப்புக் கல்வி வழங்கப்பட்டது. அறிவியல் கட்டிடம், தங்குவிடுதி, திறந்தவெளி அரங்கம், நூலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. 1968-78 ஆண்டுகளில் பட்டப்படிப்பு வணிகம், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது; பட்டமேற்படிப்பு கல்வியும் வழங்கப்படலாயிற்று. பட்டமேற்படிப்பு வகுப்புக்களுக்கான கட்டிடமும் கட்டப்பட்டது.

அடுத்த மைல்கல்லாக 1981இல் மாலைநேர வகுப்புகள் தொடங்கப்பட்டன. எம்.பில், முனைவர் பட்டப்படிப்புகளுக்கான வசதிகளும் உருவாக்கப்பட்டன. புதியதாக கட்டப்பட்ட புத்திணைப்பு வளாகம் கல்லூரியின் வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றது. 1990-2000 ஆண்டுகளில் நிறுவனச் செயலர் படிப்பு, வங்கி மேலாண்மை, வணிக மேலாண்மை, உயிரிவேதியியல், நுண்ணியிரியியல், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழினுட்பம் ஆகிய தற்காலத் துறைகளில் இளங்கலை படிப்புகள் துவங்கப்பட்டன; வணிக மேலாண்மையிலும் கணினி பயன்பாட்டியலிலும் பட்டமேற்படிப்புகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அனுமதியுடன் வழங்கப்பட்டன.[2] புதிய அறிவியல் கட்டிடமும் தங்குவிடுதியில் கூடுதல் அறைகளும் கட்டப்பட்டன.[3]

அடுத்த சிலவாண்டுகளில் தன்னாட்சி நிலை எய்தியது. புதிய நூலகம், புதிய தங்குவிடுதிகள், துறைக் கட்டிடங்கள் என கட்டமைப்பும் மேம்படலாயிற்று. மொழி ஆய்வகம், கருவியியல் மையம், நூலக உள்ளடக்கங்களுக்கு இணைய அணுக்கம், இணைய மையங்கள், கணினி ஆய்வகங்கள் சேர்க்கப்பட்டன. பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஆங்கிலம் கற்பிக்க புரிந்துணர்வு உடன்பாடு கண்டது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவிகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]