அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் அமைந்துள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் மகளிர்களுக்கான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1988ஆம் ஆண்டு நிகர்நிலை பல்கலைக்கழகமாக உயர்வு பெற்ற இந்த நிறுவனம் கல்வியாளர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களால் 1957ஆம் ஆண்டு அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் மேற்பார்வையில் பெண்களுக்கான கல்லூரியாகத் துவங்கப்பட்டது. இது 1978 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழான தன்னாட்சி பெற்றக் கல்லூரியாக தகுதி பெற்றது. இவ்வாறு தன்னாட்சி வழங்கப்பட்ட எட்டு கல்லூரிகளில் இதுவொன்றே மகளிர் கல்லூரியாகும். இதன் துவக்க கட்டத்தில் கல்லூரி முதல்வராக பணியாற்றிய கல்வியாளர் முனைவர்.இராஜம்மாள் பி. தேவதாஸ் இதன் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்துள்ளார்.

அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகம் மனையியல், அறிவியல், மனிதவளக் கல்வி,கல்வி,வணிக மேலாண்மை,பொறியியல் மற்றும் சமூகக்கல்வியும் தொழில்முனைவோர் மேம்பாடும் என்ற துறைகளில் கல்வித்திட்டங்களை வழங்குகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]